சகோதரிகளே ஒரு மார்கழி எச்சரிக்கை???

Category :

இரு தினங்களுக்கு முன் பக்கத்து தெருவில் நடந்த நிகழ்விலிருந்து,எங்கள் வீட்டை அதிகாலையிலேயே அலங்கரித்த மார்கழி கலர்''கோலம்'' ,இப்போது அலங்கோலமாகிவிட்டது.

அதிகாலை சுமார் 5 மணிக்கு பக்கத்து தெருவில் இருக்கும் (எங்களுக்கு பழக்கமானவர்)கல்யாணமான பெண்மணி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது ஒரு ரோமியோசர்,புர் என்று மோட்டார் சைக்கிளில் சென்று வந்துள்ளான்.சிறிது நேரம் கழித்து வண்டியில்வட்டமடித்தவன்,கோலத்தின் மேல் ஏற்றி,மிக அருகில் வந்து.,ஏதோ செய்ய முயன்றவனை,சுதாரித்து கொண்டு பக்கத்தி இருந்த தொடப்பத்தினால்(விளக்குமாரு) விளாசி இருக்கிறார்.,பயந்துபோனவன்.,உதையை தாங்கும் ஆண்மையின்றி ஓட்டம் பிடித்திருக்கிறான்.பின்பு சத்தம் கேட்டுஅனைவரும் போன போது இந்த கதையை விவரித்தார் அந்த வீர பெண்மணி.அவர் புதுச்சேரியில்(பாண்டிச்சேரி) ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.தைரியத்தை பாராட்டி விட்டு வந்தோம்.

ஆனால் அடுத்த நாள் அதிகாலையில் என் மனைவி,என்னையும் எழுப்பினார்.,அவ்வளவு தைரியம் என்மனைவிக்கு!!!,கோலம் போடும் வரை காவலுக்கு நான்.,,,மார்கழி....எப்போது கழியுமோ என??????

சகோதரிகளே,காவலுக்கு ஆள் இல்லையென்றால் நல்ல கழி அல்லது வாட்டமான கற்களை பக்கத்தில்வைத்துக் கொள்ளுங்கள்.மேலே கண்ட ஆயுதங்களை பயன்படுத்த தயக்கம் எனில்,எடுங்கள் மிளகாய் பொடி,கலர் கோல மாவு மாதிரி இருக்கும்.இதை வைத்து ஒரு படையையே சமாளிக்களாம்.

எவனாவது விளையாட வந்தால் அவன் விதியை மாற்றுங்கள்.

கடைசி வரி:
சென்னை பெண்களுக்கு இந்த ''டிப்ஸ்''பயன்படாது.,ஏனெனில் அவர்கள் அடுக்கு மாடிகுடியிருப்பில் இருந்து கொண்டு ''சீரியல் கோலங்கள்'' மட்டுமே பார்ப்பதால்.....!!!

4 comments:

அனுசுயா said...

ரொம்ப சரியான பதிவு. மார்கழி மாதத்துக்கு ஏற்ற பதிவு :)

வல்லிசிம்ஹன் said...

மார்கழியில் களி உண்டு.
சரிதான்.
கழியும் வேணுமா:-)

Anonymous said...

அன்பரே

www.tamilmantram வாருங்கள்.

உங்கள் படைப்புகளை அங்கே தாருங்கள்.

உங்கள் எழுத்தால் கவரப்பட்டேன்.

நன்றி

அன்பன்

Anonymous said...

Nanbare,

Ungal style nalla irukku, vithiyasamana nadai. write more

Post a Comment

கருத்தைப் பகிர: