மனிதம் மறைகிறதா?????!!!!!!

Category :

இப்போதெல்லாம் செய்திகள் ஆரவாரப்படுத்தப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.குறிப்பாக '' நொய்டா'' பிஞ்சுக் கொலைகள், கணவனைக் கொல்லும் கள்ள காதலிகள்,சகோதரனை கொலை செய்யும் உடன் பிறந்தோர் என அடுக்கிச்செல்லலாம்.

காரணம் ஆயிரம் சொல்லலாம்,.மனிதனின் மாறும் வாழ்வு முறை,மிகைப் படுத்தப்படும்தொலைக்காட்சி செய்திகள்,பணம் தான் வாழ்க்கையின் அளவுகோல் என திரிக்கும் பத்திரிகைகள்.

எல்லோருக்குமே ஆசை உழைக்காமல் சம்பாதிக்க வேண்டும் என்று.,இதற்கு தடை எனும் போது மனிதன் மிருகத்தை விட கேவலமான செயல்களை செய்கிறான்.

ஊடகங்கள் எப்படி சொகுசாக வாழலாம்.,குறுக்கு வழி என்ன? போன்ற தகவல்களைத்தான் நம்காதில் ஊற்றுகின்றன.விட்டுக் கொடுக்கும் குணம் மழுங்கிக் கொண்டே போகிறது.நம்முடையதொலைக்காட்சி சீரியல்கள்,ஒழுக்கமான வாழ்க்கை முறையையே கேள்விக்குறியாக்குகின்றன.
பகுத்தறிவு கொஞ்சம் கூட பயன்படுத்தப்படுவதில்லை.,படித்தவர்கள் தான் ஜோதிடம்,பெயர் மாற்றம்என சொல்லி ஊரை ஏமாற்றி,பணத்தை சுருட்டுகின்றனர்.மருத்துவர்களோ .,மனிதாபிமானத்தைமறந்து விட்டு பணம் என்ற மாயை-யில்.

இந்தியா எங்கு செல்கிறது எனத் தெளிவாக கூறமுடியவில்லை?.ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சி,மறுபுறம் அடித்தட்டு மக்களின், அடிப்படை தேவை கூட பூர்த்தியாகாமை....ஆங்கில புத்தாண்டைகூட அடித்துக் கொண்டு கொண்டாடும் அவலம்.,

கடலூர் அருகே டிசம்பர் 31ஆம் தேதி நடந்த நிகழ்வு., கொடூரமானது.,
நள்ளிரவு 12.00மணிக்கு ஒரு இளைஞர் கூட்டம்,ரோட்டில் போவோரையெல்லாம் நிறுத்தி இனிப்புகொடுக்கின்றனர்.,அப்போது சக அடித்தட்டு இளைஞர் இருவர், கேலி செய்ய இனிப்பு கொடுக்கிறீர்களா? என கேட்கப் போய் கொலையில் முடிந்த கொடூரமான நிகழ்வு அது.அதன் பின் ஒரு வாரத்திற்கு அங்கு அமைதி பாழானது.

புரிந்து கொள்ளல் கூட புதிராகிப் போனது தான் கொடுமை.

கடைசி வரி:
மனிதம் புரிந்து கொள்வோம்,மனித உறவுகளை வளர்ப்போம்.

2 comments:

N Suresh said...

அன்பிற்கினிய ஐயா,

என் நண்பரின் நிலை அறிந்து ஆறுதல் சொன்ன உங்கள் நல்ல மனதை நன்றியோடு போற்றுகிறேன். உங்கள் மின்னஞ்சல் எனக்கு தெரியாது என்பதால் இந்த வலைப்பூவில் இந்த மடலை எழுதினேன். உங்கள் வலைப்பூவில் நீங்கள் எழுதியுள்ள ஒவ்வொன்றும் மிகவும் ரசிக்கும் படி உள்ளது. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

பாசமுடன்
என் சுரேஷ், சென்னை
nsureshchennai@gmail.com

4D-Venture said...

http://maanuda.blogspot.com/
ஒரு தொடர்புள்ள தளம்

Post a Comment

கருத்தைப் பகிர: