கிரி (அ)வலம் ! -பாகம்- 1

Category :

போன மாதம் என் நண்பர் வற்புறுத்தலினால் ஒரு நாள் பயணமாக திருவண்ணாமலைசென்றோம்.கூட நான்கு நண்பர்கள்...வாடகை காரில் பயணம்....
அதிகாலை 4மணிக்கு கடலூரிலிருந்து புறப்பட்டோம்.வழி பாண்டி,திண்டிவனம்,செஞ்சி,என........

நண்பர் பகுத்தறிவாளர்.....இருந்த போதிலும் கார் வலத்தின் மூலம்....என்ன நடக்கிறது எனதெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்.சிற்றுண்டியை திருவண்ணாமலையில் முடித்தோம்.

பின்பு அப்படியே படியேறினோம்.வழியெங்கும் சித்தர்கள்,சித்தர்கள்...கையில் சுருட்டு அல்லது சிகரெட்டு ....உற்சாகமாய் ஊதித் தள்ளினர்...அரை கிலோமீட்டர் தூரம் சென்றோம்...வழியெங்கும் ஏராளமான அறக்கட்டளைகள்.....சில சித்தர்களின் வாயையும் நாங்கள் கிளறத்தவறவில்லை.ஒன்று மட்டும் தெரிந்தது....வாழ்க்கையை எதிர் கொள்ள முடியாமல்...குடும்பத்தைக் கூடகாப்பாற்ற முடியாமல் ஓடி வந்த மகா மட்டமானவர்கள்....(இங்கே சித்தர்கள்...ஞானிகள்....என்ற போர்வையை மாட்டிக் கொண்டு)

சுமார் இரண்டு மணிநேரம் மலையில் இருந்து விட்டு,இறங்கி ....முதலாவதாக ரமணர் ஆசிரமம்சென்றோம்.இந்தியர்களை விட வெளிநாட்டினர் அதிகம் தென்பட்டார்கள்.செருப்பை ஒரு மூலையில்வைத்து விட்டு உள்ளே சென்று அனைத்தையும் கண்டோம்.நிறைய மக்கள் தியானத்தில் இருந்தனர்.எல்லோரும் மேல் தட்டு மக்களாக இருந்தனர்.....கீழ் தட்டு மக்களை கண்டது,அவர்கள் போட்ட 12 மணி அன்ன தானத்தின் போது தான்.....

இளைஞர்கள் கூட வரிசையில்.....அசிங்கமில்லாமல்.....உழைத்து உணவு உண்ணும் வயதில் பிச்சைக்காரனாய்.....இதுதான் சுகமான வாழ்க்கை என வழி தவறி விட்டார்களோ?.....பாவம்...அவர்களை பெற்றவர்கள்...
அங்கே ஒரு அழகான வெள்ளை மயில்....திரிந்து கொண்டிருந்தது...பூங்காவும் இனிமையாகவைத்திருந்தனர்.

அடுத்த இடம்...விசிறி சாமியார் என அழைக்கபடும்....ராம் சுரத்குமார் ஆசிரமம்....மண்டபம் ஆடம்பரமாக இருந்தது.இங்கேயும் தியானம்.....தியானம்....எதையோ இழந்து இங்கு வந்துதேடிக் கொண்டிருந்தனர்.தியான மண்டபம் மிக சுத்தமாக இருந்தது...அனைத்தையும் பார்த்துவிட்டுபிரதான சாலைக்கு வந்தோம்,அங்கிருந்த டீ-க்கடையில் தேநீர் பருகினோம்,பெண்மனி தான் கடையின் நிர்வாகியாம்.பெருமையாக இருந்தது...பிச்சைகாரர்களின் ...படையெடுப்பு அதிகமாககாண முடிந்தது,பின்பு தான் புரிந்தது...டீ-தானம் திருவண்ணாமலை-யில் செய்யப்படுவதில்லை என.

பின்பு நண்பர், பேக்கரி-கடைக்கு சென்று வறிக்கி பிஸ்கட்டும்,ஒரு பை நிறைய வாழை பழமும்வாங்கி வந்தார்.நண்பரிடம் எதற்கு இவ்வளவு எனக் கேட்ட போது....அப்புறம் சொல்கிறேன் என்றார்.

மீதி அடுத்த பதிவில்....கை வலிக்கிறது....

8 comments:

ஸ்ரீ சரவணகுமார் said...

நண்பா,
உங்கள் தலைப்பையே நான் வன்மையாக கண்டிக்கிறேன். என்ன அவலத்தை கண்டீர்கள்?. பிச்சையெடுப்பதற்கும் ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. நீங்கள் நான் உட்பட நாம் எல்லோரும் மிகப்பெரிதாக கருதக்கூடிய தன்மானத்தை இழக்க முன் வருவோமா?. தன்மானத்தை கொடுத்து தான் அவர்கள் பிச்சை பெறுகிறார்கள். போலிகள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பர். ஒரு சில போலிகளால் எல்லா சாமியார்களையும் மகாமட்டமானவர்கள் என்று சொல்வது உங்கள் பக்குவமின்மையை காட்டுகிறது. அவர்களின் அழுக்கான உடை மற்றும் தோற்றத்தைக் கண்டு முகம் சுளித்திருப்பீர்கள் போல. அழுக்கு-அழகு இவற்றிற்கெல்லாம் அப்பார் பட்டவர்கள் அவர்கள். நன்றி

Santhosh said...

ஒரு 3 அல்லது 4 வருடங்களுக்கு முன்பு கிரிவலத்தில் கூட்டம் குறைவாக இருந்தது அமைதியான முறையில் செல்ல முடிந்தது. ஆனால் இப்பொழுது ஒரே கூட்டம். அதுவும் கிரிவலம் செய்யும் பொழுது ஏதோ சுற்றுலா செல்லுவது போல வழியில் கிடைப்பதை எல்லாம் வாங்கி தின்று கொண்டு ஊர் கதையை எல்லாம் பேசிக்கொண்டு, இதை எல்லாம் பார்த்து முன்பு மாதம் தவறாமல் சென்று கொண்டு இருந்த நான் நிறுத்திவிட்டேன்.

Mugundan | முகுந்தன் said...

*மிக்க நன்றி...சந்தோஷ்...உங்களின் வருகைக்கும்...கருத்துக்கும்.

*சிறி சரன்....ஏன் கோபப்படுகிறீர்கள்,நண்பரே?...நெருப்பு மாதிரி உண்மையும் சுடும் தான்.
என்ன செய்ய...அய்யா,,நான் அழுக்கு மனிதர்களை பற்றியோ...அவர்களின் அவதாரம்
பற்றியோ கவலை படவில்லை.
20 வயது இளைஞர்கள் கூட சோம்பேறிகளாக மாற இந்த இடங்கள் காரணமாகிவிட்டதே எனத்
தான் கவலை பட்டேன்.நீங்களும் கவலைப்படுவீர்கள் நேரில் பார்த்தால்...தயவு செய்து அடுத்த
முறை திருவண்ணாமலை போகும் போது....மகான்களை மட்டும் பார்க்காமல் மனிதர்களையும்
பாருங்கள்....உண்மை புரியும்......

Anonymous said...

Mugu

Now only I noticed you. very good thoughts. keep writing more

Anonymous said...

முகு அய்யா

கிரி (அ)வலம் ! -பாகம்- 2 (அடுத்த பதிவு) என்னாச்சு?


ஆவலுடன்

கண்ணன்

Unknown said...

hai mugs ,
this is swamy and this is the first time am reading your thoughts from a website.really amazing and wonderful.keep writing.u r prooving your talents.god bless you.thamiz ayya sowkyama?bye

Unknown said...

hai mugs,
this is swami.the first time i visit your site and really stunned.you have good command in tamil and your thoughts are really amazing.keep writing.god bless you.tamil ayya sowkyama.my regards to your family.muthas to arivumugilan.bye

Unknown said...

hai mugu,
keep writing.keep on writing.god bless you.

swami and family

Post a Comment

கருத்தைப் பகிர: