காதலர் தினமா,கண்றாவி தினமா?

Category :

வியாபார விசயமாக 14-02- 2007 அன்று கடலூர்-லிருந்து சென்னைக்கு
கிழக்கு கடற்கரை சாலை ( ECR )வழியாக சென்றதன் தாக்கம் தான் கீழே.,


பேருந்து மாமல்லபுரத்தை தாண்டியபோது ......,இரு பக்கமும் ,இரு சக்கர வாகனங்கள்,கார்கள்,என பலப்பல .

பின்பு தான் என் மண்டைக்கு உறைத்தது,இன்று காதலர் தினம் என்று.,வெளிநாட்டிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வியாபார திருவிழா.
அன்றைய தினம் அனைத்து பண்பலை வானொலி-யும் காதலை சொல்லியே வதைத்தனர்.சும்மா சொல்லக்கூடாது.....முட்டுக்காடு முதல் திருவான்மியூர் வரை சவுக்கு தோப்பெல்லாம் அவன்,அவள் தலைகள்....அவன் மேல் அவள்., அவள் மேல் அவன்.,,,கண்றாவிக் கோலங்கள்.

நாகரீக மாற்றத்தின் அவலங்கள்.,ஒழுக்கம் கூட கேலிப் பொருளானது தான் வேடிக்கை.மாறிவரும் சமுதாய அமைப்பு எதிர்காலத்தில் என்ன ஆகப் போகிறதோ என கவலைப் படாமல் இருக்க முடியவில்லை....

"சவுக்கு தோப்பு
பக்கத்தில் கார்
ஒன்றான செருப்பூ
அவன்...அவள்
கட்டிலில் காதல்?...

முன்கதை:
சரியாக 7.00மணி,கடலூர் பேருந்து நிலையம்....சென்னை பேருந்துக்கு நின்றபோது 70வயது மதிக்கத்தக்க பாட்டி.....தம்பீ...என கூப்பிட்டு திரும்பினேன்.டீ-குடிக்க எதாவது குடுப்பா என்றார்.நல்ல உடை அணிந்திருந்தார்.....ஒன்னரை ரூபா கொடுத்து விட்டு.,
பாட்டியின் கதை கேட்டேன்.(உண்மைக் கதை)

பெயர்: மீனாட்சி அம்மாள்
ஊர்:தேவனாம்பட்டினம்(கடலூர்)
இழந்தது:வீடு,வாசல்,மகன்கள்,உறவு...
பணி:பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டுவது
இருப்பிடம்:சுப்புராயலு நகரை தாண்டி,ஒதுக்குப்புறத்தில்..ரூ300-ல் வாடகை வீடு
உடன் பிறந்தோர்: தங்கை ,,,,,,மற்றும் உறவினர் நல்ல நிலையில் உள்ளனர்
பாடம்:இளைஞர்,இளைஞி களே ஒரு வேண்டுகோள்.தயவு செய்து தாய்,தந்தையரை இப்படி ஒரு நாள் பார்க்க வைக்காதீர்.
பெற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்....

கடைசி வரி:

கார் நிறுத்தக் கூட விசால இடம்.,
கட்டிப் போட பெரிய நாய்
மாளிகை மார்பிள்ஸ் வீடு
இருட்டறையில் பெற்றோரின்
விசும்பல்கள்.குரைத்தது,,,
நாய்.....

6 comments:

கதிர் said...

அந்த பாட்டியின் நிலையய் கேட்டதுமே நமக்கு வேதனையா இருக்குதுங்க. அவங்க பிள்ளைகளே இல்ல பிழைகள்.

காதலர் தினம்னு ஒண்ணு வந்ததே எதுகு தெரியுங்களா? அட்டு பிகருங்க கூட ஒருத்தன தேத்திக்கலாம், அட்ரஸ் இல்லாதவன் கூட ஒரு புள்ளய கடெக்ட் பண்ணிக்கலாம். காதல்ன்றது ரேஷன் கார்டு மாதிரி ஒரு அத்தியாவசிய தேவையா மாறிடுச்சிங்க.

அதுக்காக ஒட்டுமொத்தமா கொறை சொல்லக்கூடாது. 90% குறை சொல்லலாம் :))

நல்ல பதிவு

SP.VR. SUBBIAH said...

மருத்துவரிடம்
பள்ளி
மாணவி சொன்னாள்
நாளை வகுப்பிருக்கிறது
இன்றே
கலலைத்து விடுங்கள் - என்
கர்ப்பத்தை!
- ஒரு பெரிய கவிஞர் வெளிநாடு சுற்றி வந்து விட்டு அங்குள்ள அவலங்களைப் பட்டியலிட்டு எழுதிய கவிதைகளில் உள்ள வரிகள் இவை!

இனிமேல் நம் நாட்டிலும்
சர்வசாதாரணமாக அது நடக்கும்

ஒழியட்டும் கலாச்சாரத்தைப் பற்றிப் பேசும் பண்ணாடைகள் (அதுதான் பெரிசுகள்) - இது தான் இன்றைய இளிஞர்கள் பலரின் தாரகமொழி!!:-))))

கார்த்திக் பிரபு said...

that poems is written by vairamuthu ..am i rit subbaiah sir??

Umabathy said...

காதலுக்கு நாம் யாரும் எதிரிகள் அல்லர், எனினும் காதல் என்ற பெயரில் நம்மவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தையும் விரைவில் மிஞ்சிவிடுவார்களோ என்ற அஞ்சாமல் இருக்க முடியவில்லை.

வெங்கட்ராமன் said...

/****************
ஒழியட்டும் கலாச்சாரத்தைப் பற்றிப் பேசும் பண்ணாடைகள் (அதுதான் பெரிசுகள்) - இது தான் இன்றைய இளிஞர்கள் பலரின் தாரகமொழி!!:-))))
****************/

சூப்பரா சொன்னீங்க சுப்பையா சார்.

கடலூர்காரரே, நீங்களும் சூப்பராத்தான் சொல்லி இருக்கீங்க.

Mugundan | முகுந்தன் said...

நன்றி.வெங்கட்,உமாபதி,கார்த்திக்,
சுப்பையா,தம்பி-உங்களின்
கருத்துக்களுக்கு.

அன்புடன்,
முகு

Post a Comment

கருத்தைப் பகிர: