இந்தியர்களே நமக்கு என்ன ஆச்சு?

Category :

இது கிரிக்கெட் பற்றிய பதிவு அல்ல.ஏன் நம் மக்கள் அகம்பாவத்துடன் நடந்து கொள்கின்றனர் என்பதின் தாக்கம் தான் இது?.அமெரிக்க,பிரிட்டிஷ்காரன் மாதிரி ஏன் நாம் மார்த்ட்டிக்கொள்ள வேண்டும்.,ஆணவம் கொள்ள வேண்டும்.

இந்தியா ,பங்களாதேஷ்-யிடம் தோல்வி அடைந்தது நிறைய நண்பர்களுக்கு அதிர்ச்சி.அவர்களுக்கு இது விளையாட்டு என்பது(சூது அல்ல)ஏன் புரியாமல் போகிறதோ?ஏன் நமக்கு இன்னும் மனப்பக்குவம் வரவில்லை?

ஒத்துக் கொள்கிறேன்,இந்தியனை இணைக்கிறது.அதே சமயம் அடுத்தவனை ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்.புரிந்து கொள்ளுங்கள் இது நம் மண்ணின் விளையாட்டல்ல மேலும் இது ஒரு வர்த்தக விளையாட்டு என்பதை புரிந்து கொள்ள எத்தனை காலம் ஆகப்போகிறதோ நமக்கு?

ஏதன்ஸ் 2004 ஒலிம்பிக்...மெடல் பட்டியலில்..இந்தியாவை பாருங்கள்,
0-தங்கம்,1-வெள்ளி,0-வெங்கலம்.ஆனால் ஒரு சிறிய நாடான க்யுபா-வை பாருங்கள் 9-தங்கம்,7-வெள்ளி,11-வெங்கலம்.

இந்தியர்களே ,கிரிக்கெட்டும் ஒரு விளையாட்டு தான்,ஆனால் அதையும்விட மேன்மையான விளையாட்டுக்கள் உள்ளதை மறவாதீர்.
இந்தியா 2020 மகிழ்ச்சி தான்.....வலிமையான இந்தியா.....வளமையான இந்தியா....அதற்கு முன்பு அடுத்த பீஜிங் 2008-ஒலிம்பிக் போட்டி-யில்
2-தங்கமாவது வாங்க முயற்சி செய்வோம்(காசு கொடுத்து அல்ல)?.
அது கூட முடியவில்லை-யெனில் அர்த்தமே இல்லை.

இந்தியனே, விளையாட்டை விளையாட்டாய் பார்ப்போம்.அது தான் மனித நாகரீகத்தின் அடையாளம்.

6 comments:

Anonymous said...

//இந்தியா ,பங்களாதேஷ்-யிடம் தோல்வி அடைந்தது நிறைய நண்பர்களுக்கு அதிர்ச்சி.அவர்களுக்கு இது விளையாட்டு என்பது(சூது அல்ல)ஏன் புரியாமல் போகிறதோ?ஏன் நமக்கு இன்னும் மனப்பக்குவம் வரவில்லை?//

Thalivaa

இது சூது தான்.

any way good post.

Anonymous said...

Nice

சீனு said...

//இந்தியா ,பங்களாதேஷ்-யிடம் தோல்வி அடைந்தது நிறைய நண்பர்களுக்கு அதிர்ச்சி.அவர்களுக்கு இது விளையாட்டு என்பது(சூது அல்ல)ஏன் புரியாமல் போகிறதோ?ஏன் நமக்கு இன்னும் மனப்பக்குவம் வரவில்லை?//

ஐய்யைய்யோ!!! இது என்ன வம்பா போச்சுது. விளையாடலாம். மோசமாக விளையாடலாம். ஆனா, கேவலமாக விளையாடக்கூடாது.

//அதே சமயம் அடுத்தவனை ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்.புரிந்து கொள்ளுங்கள்//

பங்களாதேஷை யாருங்க குறைத்து மதிப்பிடுவது. இந்த்ய வீரர்களை தானே திட்டுகிறார்கள்?

ஜோ/Joe said...

அருமையா சொன்னீங்க!

மா சிவகுமார் said...

வழி மொழிகிறேன்.

சிறப்பாக விளையாடுபவர்கள் வெற்றி பெறட்டும். தேசிய அணியின் மீது வெறித்தனமான பற்று வேண்டாம்தான்.

அன்புடன்,

மா சிவகுமார்

Mugundan | முகுந்தன் said...

*நன்றி,முத்து.உங்களின் கருத்துக்கு....
*அனானி...ஒரு வார்த்தை போதுமா.....
*சீனு....ஏற்றுக் கொள்கிறேன்....
*ஜோ....மிக்க நன்றி....
*சிவகுமார்...மிக்க நன்றி....

Post a Comment

கருத்தைப் பகிர: