நாணயம் தவறியவர்கள்!!!

Category :

இப்போதெல்லாம் தினசரி செய்திதாள்களைப் படிக்கும்போது அடிக்கடி தென்படும் கால் பக்க,அரை பக்க பொது விளம்பரத்தைக் காணலாம்.
அவ் விளம்பரம் இதோ,''வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத நாணயம் தவறியவர்கள்".

குறிப்பாக கடன் வாங்கியவரின் புகைப்படமும்,கூடுதலாக ஜாமீன் கொடுத்தவர் புகைப்படமும் இனைந்திருக்கும்.அவர்கள்பெற்ற கடன் எதோ கோடி ரூபாய் என நினைக்காதீர்கள்.வெறும் 50ஆயிரம் முதல் 1லட்சம் வரை தான்.

இதற்குத் தான் இந்த மக்கள் வங்கிகள்(பொதுத் துறை வங்கிகள்)நடுத்தர மக்களுக்கு ''நாணயம் தவறியவர்கள்'' என பட்டம் வழங்குகின்றன.குறிப்பாக இந்த வங்கிகள் கடன் கொடுக்கும் முன்பே,விசாரித்து தான்,கடன் கொடுக்கின்றன.நல்ல வருவாய்,நிரந்தர பணி போன்றவகளை வைத்துதான் அனுமதி வழங்குகின்றனர்.ஏதோ போதாதகாலம்,கடன் பெற்றவர் அசலை கட்ட தாமதமாகும் போதுதான் இந்த வங்கிகள் இந்த மாதிரி அநாகரீக விளம்பரங்களை வெளியிடுகின்றன.

கூர்மையாக கவனித்தால் ,கடன் பெற்றவர்கள் பெரும்பான்மையானோர்,வீடு கட்டத் தான் வாங்கி இருப்பர்.ஏன் இச் சிறு தொகைக்கு இவ்வளவு செலவு செய்து,விளம்பரம் செய்கின்றனர்?.வங்கிகள் விளம்பர செலவையும் கடனில் ,அசிங்கமாக சேர்த்துக் கொள்வர்.ஆனால் இதே வங்கிகள் தொழிலதிபர்களுக்கு 100கோடி,200கோடி கொடுத்துவிட்டு நாய்(இந்த வார்த்தைக்கு மன்னியுங்கள்) மாதிரி அவர்கள் பின்னால் திரிவர்.
அந்த ஏமாற்றிய தொழிலதிபர், நாமம் சாத்தினாலும்,இவர்கள் இந்தமாதிரி அருவருப்பான பொது விளம்பரம் செய்வதில்லை.மாறாக நீதித் துறை(கோர்ட்)மூலம் தான் மனு செய்கின்றனர்,சொத்துகளை ஏலம் இட.

இன்றும் எத்தனையோ ஏமாற்றிய தொழிலதிபர்கள்,அரசியல் வாதிகள் மரியாதையுடன் தான் வலம் வருகின்றனர்.அவர்களைப் பற்றி இதே வங்கிகள் ''நாணயம் தவறியவர்'' என விளம்பரம் வெளியிடும் தைரியம் இருக்கிறதா?.,

அப்படி தைரியமாக வெளியிட்டால்,தினசரி செய்திதாளில் செய்திபோட முடியாது,ஏமாற்றிய தொழிலதிபர்களின் விளம்பரமே ....தினசரி சீரியல் மாதிரி போகும்.வங்கி அதிகாரிகளே, தைரியம் இருந்தால்.......செய்யுங்கள் பார்ப்போம்.

கடைசி வரி:
அய்யா டிபிஆர் ஜோசப்,அய்யா மெலட்டூர் நடராஜன்,அய்யா ஞானவெட்டியான் அவர்களே நீங்களாவது பதில் சொல்லுங்கள்.

3 comments:

Bala said...

என்கேயோ கேட்டது:

"if a man owes you a thousand dollars, then it is his problem; if he owes you a million dollars then it is your problem"

>>>வெறும் 50ஆயிரம் முதல் 1லட்சம் வரை தான

நான் பத்து கோடி் வரை கடன் வாங்கிய ஆட்களின் புகைப்படங்களை பார்த்திருக்கிறேன். போன மாதம் மதுரை இந்தியன் வங்கி லாட்டரி தொழிலதிபர் KAS சேகரின் நிலத்தை (கடன் ஏழு கோடி) ஏலம் போட விளம்பரம் செய்திருந்தது.

"நாணயம் தவறியவரிகள்" போன்ற அடைமொழிகளை பார்த்த மாதிரி நினைவில்லை, லின்க் கொடுத்தால் நல்லா இருக்கும். பொதுவாய் நான் பார்த்த வரை, சும்மா படமும் கடன் தொகை மட்டும் போடுகிறார்கள். இந்த மாதிரி அடைமொழி போட்டு அவமானப் படுத்தக் கூடாதென கோர்ட் தீர்ப்பிருக்கிறது என நியாபகம். (வெறும் கடன் தகவல் மட்டும் போடலாம்)

Anonymous said...

Mugu Ayyaa,

very good article. let see what our DPR sir's comment.

No media had a dare to call Harshad Metha in 'avan', But calling petty criminals 'avan'

Mugundan | முகுந்தன் said...

*நன்றி,பாலா.....சுட்டி அளிக்க இயலாது...அவ்
விளம்பரத்தை "ஸ்கேன்" செய்து அனுப்ப முயலுகிறேன்.

*குமரேசன்...கருத்துக்கு நன்றி.

Post a Comment

கருத்தைப் பகிர: