மாயாவதி செய்த மாயாஜாலம்!

Category :

தலித் பெண்மணி மாயாவதி இன்று உ.பி.-யின் முதலமைச்சர் ஆகிவிட்டார்.வாழ்த்துவோம்....ஒரு புதிய மறுமலர்ச்சி காணட்டும் உத்திர பிரதேசம்.இந்திய அரசியல் நிகழ்வில் இது ஒரு மைல்கல் என்பதில் ஆச்சரியம் இல்லை.ஆனால் இந்த நிகழ்வை டாக்டர் அம்பேத்கர்,பெரியார்,கன்ஷிராம் போன்ற புரட்சியாளர்கள் கண்டிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார்கள்.


ஏனெனில் பெற்ற வெற்றி அப்படி...இந்த வெற்றி ஒடுக்கப்பட்டோர்,தாழ்த்தப்பட்டோரின் எழுச்சியினால் பெற்றதல்ல.மாறாக அரசியல் சித்து விளையாட்டின் வெற்றி.


இந்த அரசியல் மாற்றத்தினால் தலித்/ஒடுக்கப்பட்டோர் வாழ்வின் எதிர்காலம் வெளிச்சம் தந்தால் பாராட்டலாம்.மாறாக தற்போது கொண்டுள்ள அரசியல் உறவு(பிராமின்/தாக்கூர்)வெறும் அதிகாரத்திற்காக எனில் எந்த தலித்-தும் பெருமைப்பட போவதில்லை.
தேர்தல் முடிந்தவுடன் எக்சிட் போல்(வாக்கு பற்றிய கணிப்பு) நடந்த போது,நிறைய தலித் வாக்காளர்கள் கூறியது இது.''நாங்கள் எந்த சின்னத்தையும் பார்க்கவில்லை,யானை-யை தவிர''.யார் நிற்கிறார் என்று கூட எங்களுக்கு கவலை இல்லை என்று நிறைய பேர் கூறக் கேட்கமுடிந்தது.


மாயாவதி கூட தன் பிரச்சார பாங்கினை மாற்றினார்...உயர் ஜாதி-யினரை அரவணைத்து ஆட்சிசெய்வோம் என்று கெஞ்சினார்.இரு தேர்தலுக்கு முன் மாயாவதி கூறியது....அவரே மறந்தார்.''உயர் சாதியினரை உதைத்து உரிமையை பெறுவோம்''-என்ற அறை கூவல்.....எப்படியோ ஆட்சி என்பது குறியாகி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.
இனிமேல்தான் பார்க்க வேண்டும்,இவரை ஆட்சியில் அமர்த்திய தலித் சமுதாயத்திற்கு என்ன கைம்மாறு செய்கிறார் என்று?இப்போது அவர் கட்சி-யில் 53 பேர் உயர் சாதி சட்ட மன்றஉறுப்பினர்கள்.(34-பிராமின்,19-தாக்கூர்)...போனமுறை மாதிரி அப்படியே முலாயம்-மிடம் விலை போக மாட்டார்கள் என எந்த உத்திரவாதமும்இல்லை.


இந்த வெற்றிக்கு பக்க பலமாக இருந்த இருவர்..,

1.மிஷ்ரா, முன்னாள் உபி அட்வகேட் ஜெனரல்-பிராமின்,மாயாவதி ''தாஜ்'' ஊழலில் கடந்த ஆட்சியில்மாட்டி தவித்த போது ......அவரை காப்பாற்றியவர்......அந்த ஒரே காரணத்திற்காக பகுஜன் கட்சியின்பொதுச் செயலாளர்=ஆகவும் ஆக்கி உயரே உட்கார வைக்கப்பட்டவர்.(தன் கட்சியினர் எதிர்ப்பையும் மீறி)
2.நசிமுதீன் சித்திக்,முஸ்லிம் தலைவர்....முன்னாள் உபி அமைச்சர்....முஸ்லிம் ஒட்டுகளைபெற்றதில் இவரின் பங்கும் அதிகம்.

ஆக பெற்ற வெற்றி எப்படி ஆயினும், இது ஒரு இனிய சகாப்தத்தின் ஆரம்பம்...பார்ப்போம் எப்படிஆள்கிறார் என......தமிழகத்தின் வாழ்த்துக்கள்...மாயாவதி!


கடைசி வரி:
அரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் கூறியது...''முதலாளித்தவமும்,பிராம்மனிசமுமே நமக்கு எதிரி......கடைசி வரை"


4 comments:

Anonymous said...

Dear Mugu,

We can't tell what maya did is wrong. this is also a tactis. there is no policy now days.

ammana naatil koovanam kattiyavan muttaal.

மாசிலா said...

நல்ல பதிவு.
நலிந்தவர்களின் மிச்ச மீதி இரத்தத்தை உறிந்து குடித்து உடல் கொழுக்க கிளம்பிவிட்ட பிசாசுகளின் கதையைப்போல்தான் தெரிகிறது.
காலம்தான் பதில் சொல்லும் ...

பகிர்ந்தமைக்கு நன்றி.

Mugundan | முகுந்தன் said...

1.கருத்துக்கு நன்றி,பீட்டர்.

பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்,மாயாவதி
தன் சமுதாய முன்னேற்றத்திற்கு என்ன செய்கிறார் என.

2.நன்றி மாசிலா,
உபி அடித்தட்டு அடிமைத் தனத்திலிருந்து மாறுகிறதா எனப்
பார்ப்போம்

உண்மைத்தமிழன் said...

முகுந்த் ஸார்.. நான் இப்போதுதான் உங்களது பதிவைப் பார்த்தேன். படித்தேன். மகிழ்ச்சி..

மாயாவதியைப் பொறுத்தமட்டில் எப்பாடுபட்டாவது இந்த முறை ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார். பிடித்துவிட்டார். எந்த நோக்கத்திற்காகப் பாடுபட்டாரோ அதை நிறைவேற்றத்தான் இனியும் பாடுபடுவார்.

இதில் தலித் மக்களின் முன்னேற்றம் என்பதோ, சமூக நல்லிணக்கம் என்பதோ இருக்கிறதா இல்லை என்பது மாயாவதியின் கட்சிக்காரர்களுக்கே தெரியாது.. நமக்கு எப்படித் தெரியும்..?

ஆனால் எதிரணியில் இருப்பவர்கள் நல்லவர்களாக இருந்தால் ஏன் மக்கள் இவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? ஜனநாயகத்தின் குறைபாடுகளில் இதுவும் ஒன்று.

மிக்க நன்றி முகுந்த் ஸார்.. இனியும் அடிக்கடி வருகிறேன்.. நன்றி..

Post a Comment

கருத்தைப் பகிர: