அப்பாவும்,அம்மாவும்...ஆகாய விமானத்தில்!

Category :

ஆமாம்.இரு வாரங்களுக்கு முன் விடுமுறையில் பெங்களூரு‍‍க்கு குடும்ப‌ உறுப்பினர்கள்(நான்,மனைவி,மகன்,அப்பா & அம்மா) அனைவரும் விமானத்தில் சென்றோம்.

என் சின்ன ஆசையாய் இருந்தது,நிறைவேறியது..,மிக்க மகிழ்ச்சியாக‌ இருந்தது.கடலூரிலிருந்து பேருந்தில் நான்கு மணி நேர பயணம் செய்து,அரை மணி நேரத்தில் (Airbus-A320)பெங்களூரு வந்து சேர்ந்தோம்.
அம்மாவும்,அப்பாவும் மிகவும் ஆச்சரியமடைத்தனர்...முதல் விமான பயணம் சுலபமாய் முடிந்தது,கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
முதலில் நன்றி சொல்ல வேண்டியது...திரு.கோபிநாத் ,அவர்களின் ஏர் டெக்கான்-க்குத் தான்.அவர்தானே நடுத்தட்டு, கீழ் தட்டு மக்களையும் விமானம் ஏற வைத்தவர்.

பெங்களூரில் மூன்று தினங்கள் இருந்து அனைத்து இடங்களையும் பார்த்தோம்.பெங்களூரு‍-ம் சூடாகத் தான் இருந்தது.கணிணி நிறுவனங்கள் நிறைய வந்ததினால்,மிகப் பெரிய மாற்றம் எதையும் அடித்தட்டு மக்கள் பெற்று விடவில்லை என்பதை காண முடிந்தது.நிறைய பல அடுக்கு கட்டிடங்கள் வழியெங்கும் தென்பட்டன.கட்டிடத் தொழிலில் பெரும்பாலும் தமிழர்கள் தான் இருந்தனர்.

ப‌ய‌ண‌ம் இனிமையாய் முடிந்து வீடு திரும்பினோம்.

க‌டைசி வ‌ரி:

இனிய‌ ச‌கோதர‌,ச‌கோத‌ரிக‌ளே உங்க‌ள் பெற்றோர்க்கு ஏதேனும்செய்ய‌ விரும்பினால் த‌ய‌வு செய்து அவர்க‌ள் ஆரோக்ய‌மாய்,ந‌ல்ல‌நிலையில் உள்ள‌ போதே செய்யுங்க‌ள்.

காசு வ‌ரும் ,போகும்....?ஆனால்...!!!

4 comments:

கதிர் said...

ரொம்ப சந்தோஷப்பட்டுருப்பாங்களே!

உண்மைலயே படிச்ச உடனே நானும் சந்தோஷமாகிட்டேன்.

வாழ்த்துக்கள்.

Sundar Padmanaban said...

முகு,

நல்ல விஷயம். சந்தோஷம்.

////காசு வ‌ரும் ,போகும்....?ஆனால்...!!! //

சரியான கேள்வி. பணத்தை முன்னிறுத்தி, பாசத்தைத் தொலைத்த இந்நாட்களில் ஒவ்வொருவரும் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி இது.

நீங்கள் அடைந்த சந்தோஷத்தை நானும் என் பெற்றோர்களை இங்கு அழைத்துவந்து அடைந்தேன்!

நன்றி.

SurveySan said...

கலக்கிபுட்டீங்க சாரே!

சந்தோஷம், விமானத்துல போனாலும் வரும், பஸ்ஸுல போனாலும் வரும்.

பெரியோரை மதித்து, வளைந்து கொடுத்து, வாழ்ந்தாலே போதும் :)

எனக்கென்னமோ,விமானத்துல போறத விட, ட்ரெயின்ல, குடும்ப சகிதமா, எங்கயாவது போறது பிடிக்கும். ஹ்ம்!

Mugundan | முகுந்தன் said...

தம்பி,சுந்தர் & சர்வேசன்,மிக்க நன்றி

உங்களின் கருத்துக்கும்...

அன்புடன்
முகு

Post a Comment

கருத்தைப் பகிர: