அருள் பெறுவோம்,அம்மன் படம் பார்த்து!

Category :

ஆடி மாதம் பொறந்தாலும்,பொறந்தது இந்த விளம்பர‌
அசிங்கங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
ஆடி மாசத்துல தான் தூள் பறக்கும் இலவசங்கள் பிறக்கும்.ஒன்னு வாங்கனா,இன்னொன்னு இலவசம்;மொட்டை
போட்டா சந்தனம் இலவசம்;அல்வா வாங்கனா ரெண்டு(!) இலவசம்..
இப்படி பலப்பல...

நேற்று(18-07-2007) "ராஜ் டிவி"‍யிலும் ஒரு விளம்பரம்.
''இந்த மாதம் முழுவதும் அம்மன் படங்கள்...
அனைத்து படங்களையும் பார்த்து அம்மன் அருள் பெறுங்கள்''.
என்ன ஏமாற்ற வரிகள் பாருங்கள்?.சாமியை வைத்து வியாபாரம்
செய்வதும் கூட வரையறை இன்றி போய்விட்டது.ஒரு திரைப்படத்தை
பார்த்தால் பார்ப்பவருக்கு அருள் கிடைக்காது,டி.வி நிறுவனத்துக்குத்தான் 'பண' அருள் கிடைக்கும்.

தமிழன் சுய உணர்வை ,அறிவை தொலைத்து ,அருளை மட்டுமே தேடிக் கொண்டிருக்கின்றானோ எனத் தோன்றுகிறது.

4 comments:

முரளிகண்ணன் said...

நம்மளை நாமே நொந்துக்க வேண்டியதுதான்

Anonymous said...

//தமிழன் சுய உணர்வை ,அறிவை தொலைத்து ,அருளை மட்டுமே தேடிக் கொண்டிருக்கின்றானோ எனத் தோன்றுகிறது.//


Arulai mattumalla. Athisathaiyum (luck)??????

Anonymous said...

Raj TV Brothers

told in their interview that we are traditional DMK family not new to DMK.

So, promoting DMK's values. (enna pagutharivooo??????)

Mugundan | முகுந்தன் said...

கருத்துக்கு நன்றி,//முரளி,மூர்த்தி//

Post a Comment

கருத்தைப் பகிர: