டிஜிடல் பேனரும்,அடங்காத சண்டையும்....

Category :

இப்போதெல்லாம் கடலூரை சுற்றி வளைத்திருப்பது...
பாழாய்ப்போன டிஜிடல் பேனர்கள் தான்...

நேற்று(18-08-2007) கூட பா.ம.க வும் ,விடுதலை சிறுத்தைகளும்
அடித்து கொண்டது அநாகரீகத்தின் உச்சகட்டம்.பாவம்
அப்பாவி தொண்டர்களின் வாழ்க்கையை அழிக்கும்
இந்த சண்டையை விட்டால் எத்தனையோ குடும்பங்கள்
மகிழ்ச்சி அடையும்.

அதுவும் பேனர் என்றால் 10x10 அல்ல....10 அடிக்கு 100அடி
அகலத்தில் கூட அமைக்கிறார்கள்.இதில் அவர்கள் பொதும‌க்க‌ளை
நினைத்துக் கூட‌ பார்ப்ப‌தில்லை.பேருந்து நிறுத்த‌ம் கூட‌ ம‌றைந்து
போகும் அள‌வுக்கு,ஒரு நோயாகிப் போயுள்ள‌து இந்த‌ மோக‌ம்.

க‌ல்யாண‌ம் முத‌ல் காதுகுத்த‌ல் வ‌ரை இந்த‌ வியாதி ப‌ட‌ர்ந்துள்ள‌து.
டிஜிட‌ல் பேன‌ர் இல்லாத‌ விழா,ஒரு விழாவாக‌வே இல்லை என்ற‌
நிலை ஏற்ப‌ட்டுவிட்ட‌து.

அர‌சிய‌ல் க‌ட்சி ச‌கோத‌ர‌ர்க‌ளே ம‌க்க‌ளை ப‌ற்றி கொஞ்ச‌ம்
நினைப்போம்.ஒன்றும் செய்யாவிட்டால் கூட‌.

உதாரணத்திற்கு,இரண்டு மாதங்களுக்கு முன் வடலூர் சென்ற போது வடலூரே காணாமல் போனது.சுமார் 200 டிஜிடல் பேனர்கள்
முக்கிய நான்கு முனை சாலையையே அடைத்திருந்தன.
வைக்கப்பட்டது தமிழக‌அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை வரவேற்க...அவர் வந்து மூன்று நாட்கள் கழிந்தும்
அப்படியே தான் டிஜிடல் பேனர்கள் வரவேற்றுக் கொண்டிருந்தன.

காவல்துறை தான் ஏதாவது செய்ய வேண்டும் .

2 comments:

Thamizhan said...

சரியாகச் சொன்னீர்கள்.காது குத்துவது முதல் கருமாதி வரை அப்பப்பா,பார்க்க சகிக்க வில்லை.
விபத்துக்களுக்கு முக்கிய காரணம்.
அரசியலும்,சினிமாவும் அடுப்படிக்கே வந்து ஆட்டிப் படைக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் இந்த அநாகரீகத்தைச் செய்ய மாட்டோம்,நண்பர்களிடமும் வேண்டுகோள் விடுவோம் என்று செய்தால் தான் முடியும்.ஒவ்வொன்றிற்கும் அரசும்,சட்டமும் ,காவல் துறையும் செய்வது முடியாது.

Mugundan | முகுந்தன் said...

கருத்துக்கு நன்றி தமிழன்.
டிஜிட‌ல் பேன‌ர் வைப்ப‌வ‌ர்க‌ள்,வேலை முடிந்தவுடன்
உட‌ன‌டியாக‌
அக‌ற்ற‌வாவ‌து முன்வ‌ர‌ வேண்டும்.

Post a Comment

கருத்தைப் பகிர: