சொந்த செலவில் சூனியம்?

Category :

அப்படித் தான் தெரிகிறது.தெரியாத்தனமா "சிவாஜி" திரைப்
படத்துக்கு என் நாலரை வயது மகன் மற்றும் நான்கு வயதுடைய‌
தங்கை மகனை அழைத்து போனது தவறான முடிவோ எனத்
தோன்றுகிறது.

ஊரும்,ஊடக உலகமும் "சிவாஜி,சிவாஜி.....வாஜி,வாஜி,பாவ்ஜி...என‌
கூச்சல் போட்டதால் ஒரு ஆசையில் போய்விட்டோம்.
இப்படம் தான் அந்த இரு சிறுவர்களுக்குமே முதல் திரைப்படம்.இருவ‌ரும்
தூங்காம‌ல் பார்த்துகொண்டிருந்த‌து ஆச்ச‌ரிய‌மாக‌வும் இருந்த‌து.
அடுத்த‌ நாள் முத‌ல் ஆர‌ம்ப‌மான‌து...."சிங்க‌ம் சிங்கிளாத்தான் வ‌ரும்".....

இப்போது தான் வினையே ஆர‌ம்ப‌மாகியுள்ள‌து.சிறுவ‌ர்க‌ளின் போக்கு
தாறு,மாறாக‌ உள்ள‌து.கால்க‌ள் தானாக‌ உய‌ருகின்றன‌...அவ்வ‌ப்போது
க‌ட்டிலிலிருந்து ப‌ற‌க்க‌,விழுகிறார்க‌ள்.

கூட‌வே தொலைக்காட்சியும்(இல்லை டி.வி) திரும்ப‌,திரும்ப‌ இந்த‌
ப‌ட‌த்தின் பாட‌ல்க‌ளையும்,காட்சியையும் காட்டி தொந்த‌ர‌வு செய்த‌தால்
அவ‌ர்க‌ளின் பார்வை ர‌ஜினியின் மேல் ப‌ட்டு விட்ட‌து.

இதையெல்லாவ‌ற்றையும் விட கொடுமையான‌து என்ன‌வென்றால்,உன் பெய‌ர் என்ன‌ என‌ யாராவ‌து என் மகனிடம் கேட்டால்''ர‌ஜினி" என‌ கூறுவ‌து தான்.ப‌ள்ளிக்கூட‌த்தில் போய் விசாரித்தோம்...அங்கு த‌ன் பெய‌ரை ஒழுங்காக‌ கூறுகிறானாம்.அங்கு அட‌க்க‌மாக‌ உள்ளானாம்.

வீட்டுக்கு வ‌ந்த‌வுட‌ன் வேலையை ஆர‌ம்பித்துவிடுகிறான்.....குதிப்ப‌து,தாவுவ‌து
என‌ப் போன்ற‌ சேட்டைக‌ள்....நானும் விள‌க்குகிறேன்....மேலும் ரஜினி சன்டை போடமாட்டார்,அவருக்கு ''டூப்'' இருப்பார்கள் எனத் திரும்ப,திரும்ப கூறவேண்டியுள்ளது.சினிமாவில் குதிப்ப‌து...
சும்மா என்று....ப‌ஞ்சு மெத்தை‌யில் தான் அவ‌ர்க‌ள் குதிப்பார்க‌ள்...நாம் அது
மாதிரி குதித்தால் கால் உடைந்து விடும் என்று...

க‌ண் கூடாக‌ தெரிந்த‌து,குழ‌ந்தைக‌ள் எவ்வாறு ஊட‌க‌ சாத‌ன‌ங்க‌ளால்
மாற்ற‌ப்ப‌டுகிறார்க‌ள் என்ப‌தை....!

3 comments:

Geetha Sambasivam said...

கேபிள் கனெக்க்ஷனை நிறுத்தி விட்டுப் "பொதிகைத்" தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகமாய்ப் பார்க்க விடுங்கள். அதில் செட்டிநாடு வித்யாஷ்ரம் குழந்தைகள் பங்கு பெறும் நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளாய் வரும். சிலசமயம் நம் போன்ற பெரியவர்கள் கூடப் பார்க்கலாம். அருமையாக இருக்கும்.

Mugundan | முகுந்தன் said...

ஆலோசனைக்கு மிக்க நன்றி,சகோதரி கீதா.

அன்புடன்,
முகு

Mugundan | முகுந்தன் said...

ஆலோசனைக்கு மிக்க நன்றி,சகோதரி கீதா.

அன்புடன்,
முகு

Post a Comment

கருத்தைப் பகிர: