ஹேப்பி பொங்கல்!

Category :

ஒரு வழியாக தை பிறந்து,பொங்கல் விழாக்களும்
கழிந்து விட்டன.
தை முதல் நாள் அன்று காலையிலேயே கடலூரை வலம் வந்தேன்.நிறைய கோலங்களை காண முடிந்தது...அழகழகாய்...."Happy Pongal"என்ற வாழ்த்துகளுடன்.தமிழனின் திருநாளைக் கூட ஆங்கில வாசனையுடன் கொண்டடுவது வேதனையாக இருந்தது.நம் பெயருக்குமுன்னால் தொங்கிக்கொண்டு இருக்கும் ஆங்கில தலை எழுத்தைப் போல.

முன்பு போல் பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் சுத்தமாக குறைந்து போய்விட்டது.தபால் துறையினருக்கு பெரும் வருமானம் குறைந்திருக்கும்.ஏனென்றால் அனைவரும் குறுஞ்செய்தி (SMS) மூலம் வாழ்த்தை முடித்துக் கொண்டுவிட்டனர்.

மாட்டுப் பொங்கல் அன்று கடலூர் பகுதியில் நிறைய இடங்களில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இரு தின‌ங்க‌ள் க‌ழித்து "ஆற்றுதிருவிழா"வும் இனிமையாக‌ நடந்தேறின‌‌.பெண்ணையாற்றின் க‌ரையில் வெளியூர், உள்ளூர் சாமிக‌ளின் தீர்த்த‌வாரி‍யும் ந‌டைபெற்ற‌ன‌.

க‌டைசி வெறி:

இப்போதெல்லாம் புதிய‌ தமிழ் திரைப‌ட‌ங்க‌ளின் இடைவேளை ஆங்கில‌த்தில் தான் INTERMISSION செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌.த‌மிழ‌ர்க‌ளூக்கு இடைவேளை புடிக்காதோ என‌த் தெரிய‌வில்லை?.

1 comments:

Anonymous said...

ஐயா கடலூர்காரரே
உங்கள் நாட்கள் இனிதாக பிராத்திக்கிறேன்.
இன்றைய நாள் உங்கள் வலைபூவினால் மகிழ்ச்சியாக துவங்கியது..
உங்கள் வலையில் உள்ள எல்லா விசயங்களையும் முடிந்தவரை படித்து விட்டேன் ..
அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். காரணம் இருக்கிறது.. நான் உங்கள் ஊருக்கு மிக அருகில் இருப்பவன்.. மேல்பட்டாம்பாக்கம் என் ஊர். தற்போது சவூதி அரய்பியாவில் இருக்கிறேன்.
உங்களின் எழுதக்களுக்கு பத்துள் எழுதவேண்டும் என்று தோன்ற வைத்தது உங்களின் " நண்பனின் கடலூர் வருகை " பற்றி எழுதி இருந்ததுதான். நண்பனின் வருகை உங்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைய வைத்தோ அந்த அளவுக்கு இல்லை என்றாலும் அதில் பாதி அளவுக்கேனும் எனக்கு மகிழ்ச்சிதந்தது அதை படிக்கும்போது. எதோ நெருங்கிய நண்பனுடன் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்துகொண்டே உறவாடியதுபோல இருந்தது உங்கள் வலைப்பூவில் வாசித்தபோது.
நன்றி ..
இல்யாஸ்

Post a Comment

கருத்தைப் பகிர: