காந்தி சாலை,நேரு வீதி,ராஜிவ் பாலம்..விற்பனைக்கு?

Category :

சட்டசபையில் ஒரு காங்கிரசு உறுப்பினர் கத்திபாரா பாலத்திற்கு நேரு
பெயர் வைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்த நாட்டின் சாலைகளுக்கும், பாலங்களுக்கும், கல்லூரிகளுக்கும்,ஆய்வு கூடங்களுக்கும் இந்த பெயர்களை விட்டால் வேறு கிடையாதா?....இந்த நாட்டிற்கு வேறு யாரும் தியாகமே செய்யவில்லையா?...

காங்கிரஸ்காரர்களே இந்த பெயர்களைச் சொல்லி இத்தனை ஆண்டு வியாபாரம் செய்தது போதாதா?தமிழ்நாட்டு பாலத்திற்கு ஒரு தமிழனின் பெயர் வைக்க நமக்கு அருகதை கிடையாதா? அப்படி ஒரு தமிழனும்
தரம் உள்ளவன் இல்லை என்றால் அந்த பாலம் கட்ட வியர்வை விட்ட நம் சகோதரன்"உத்திர பிரசேதம் அல்லது பீகார்" தொழிலாளி பெயர் வைத்தால் கூட பெரு மகிழ்ச்சி அடையலாம்.

அதுவும் நம்ம வூரு காங்கிரஸ்காரர்களுக்கு ரொம்ப பாசம்....இந்த பெயர்களின் மேல்....என்ன செய்ய வாழனுமுள்ள? இன்னும் கொஞ்ஜம் நாள் போனா "ராகுல் பாலம்" வேனும்னு கேட்டாலும்,கேப்பாங்க.....

2 comments:

Jackiesekar said...

காங்கிரஸ்காரர்கள் ஒரு ஒட்டுண்ணிகள், வட இந்தியர்களக்கு மட்டும் அல்ல , நமது தமிழக காங்கிரஸ்காரன்களுக்கும் தமிழன் என்றால் இளக்காரம்தான்

காழியன் said...

உங்களின் புலம்பல் நியாயமானதே. ஆனால் தமிழன் பெயரை வை என்றால் அண்ணா அல்லது பெரியார் மட்டுமே வைக்கப்படும். பரவாஇல்லயா?.
இந்திரா, ராஜிவ், பெரியார், அண்ணா இவர்கள் மட்டுமே நாட்டிற்கு உழைத்தவர்கள்.

இலக்கியவாதிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் இவர்கள் எல்லாம் இதற்கு தகுதி இல்லாதவர்கள்.

Post a Comment

கருத்தைப் பகிர: