ஆஞ்ஜநேயர் பாழாக்கும் பால்..?

Category :

அதிர்ச்சி அடைய வேண்டாம் மக்களே...உண்மை.

ஒவ்வொரு மாதமும் புதுவை அருகில் உள்ள "பஞ்சவடி"ஆஞ்ஜநேயருக்கு 1000லிட்டர் பால் ஊற்றி அபிசேகம் என்ற பெயரில் அத்தியாவசிய பொருளை பாழக்குகின்றனர் இதன் நிர்வாகிக‌ள்.

இவர்களை பக்தர்கள் என்பதை விட அயோக்கியர்கள் என்றுதான் கூற வேண்டும்.ஊரில் எத்தனையோ குழந்தைகள் பாலுக்கு பரிதாபத்தில் தவிக்கும் போது....இவர்களின் செயலை வேறு எப்படி கூறுவது.
ஒரு லிட்டர் பால் 12ரூபாய்....ஆக ரூ.12,000/= பாலை அத்தியாவசிய பொருளை வீணாக்குவது குற்றம் தானே...

ரசிகர்கள் தான் தங்கள் கட்‍ அவுட் கதாநாயகனுக்கு பால்ஊற்றி அசிங்கம் செய்வதை பார்த்திறுக்கிறோம்.ஆனால் இந்த செயலை என்னவென்று சொல்வது....

ஒருசில தினசரிகள் இந்த பால் படத்தையும் பத்திரிகையில் போட்டு பக்தர்களை பாழாக்கி கொண்டுள்ளன.
கடைசி வெறி:
இதில் என்ன கூத்து என்றால், இந்த அபிசேகம் உலக‌ நன்மைக்காக நடத்தப் படுகிறதாம்.
Thanks: Dinamalar Photo

6 comments:

Nair said...

You should have posted the picture. How to believe you?

Anonymous said...

//எத்தனையோ குழந்தைகள் பாலுக்கு பரிதாபத்தில் தவிக்கும் போது..//

How many children have YOU fed milk, my friend?

Anonymous said...

மாணவர்கள் அணி திரண்டு இந்த அநியாயத்தை நிறுத்த வேண்டும்.
மற்றவர்கள் பணத்திற்கு அடிமைகள்!
மாணவர்கள் தான் மனசாட்சிக்கு
ஆத்ரவானவர்கள்.

Mugundan | முகுந்தன் said...

1.க‌ருத்துக்கு நன்றி..அனானி...


2.நாயர் அவர்களே,
பொய்யை நான் ஏன் எழுத வேண்டும்?

07ஜூலை,2008 தினமலர் நாளிதழை
படியுங்கள்.

உண்மை ஏனோ நிறைய பேருக்கு சுடுகிறது!

அன்புடன்,
கடலூர் முகு

கந்தசாமி said...

ஐயா, ஸ்ரீ ஆஞ்ஜநேய சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்வதை வீண் என்றும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தாங்கள் கூறியுள்ளதானது ஹிந்து தர்மத்தின் திருக்கோவில்கள் சார்ந்த அர்ச்சாவதார மூர்த்திகளின் அருளைப்பெற நமது அறிவிற்சிறந்த ஞானியர்கள் நமக்கு அருளிச்செய்துள்ள நல்வழிகாட்டுதல்களை புறக்கணிக்க தூண்டுவதாகும். எல்லாம் தன்னகத்தே கொண்டு நிறைபொருளாய் திகழும் பகவானுக்கு எதுவும் ஆயிரம் அயிரம் பலவீனங்களால் அல்லாடும் மனிதனிடமிருந்து பெறவேண்டிய அவசியமில்லை. ஆனால் பகவானுக்கு பக்தியுடன் சமர்ப்பிக்கப்படும் அத்துணை திரவியங்களும் ஒன்றுக்கு நூறு ஆக, லடசமாக, கோடியாக, கோடி கோடியாக பகவானால் நமக்கு திருப்ப அருளிச்செய்யப்படும் என்பது என்போன்ற பக்தர்களின் அனுபவ சத்திய உண்மை. எதையாவது ஏட்டில் படித்துவிட்டும் நமது குடியை கெடுக்க நம்மிடையே பிறந்துள்ள பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் அறிவே இல்லாத நாத்திக வாதிகளும் பிதற்றுவதை கேட்டுவிட்டும் இதுபோல் ஆராய்ச்சியற்ற வகையில் பிரச்சாரம் செய்வதை உடனே நிறுத்திவிட்டு மேற்கண்டது போன்ற எங்களது உன்னதமான பூஜைகளில் கலந்து கொண்டு தகுந்த ஆராய்ச்சிக்கு பிறகு எந்த முடிவையும் எழுதுங்கள். ஆராய்ச்சியில்லாமல் தங்கள் மனப்பால் அறிவைக்கொண்டு தங்கள் வாழ்வை மட்டுமல்லாமல் பக்தி சார்ந்த அனுஷ்டானங்கள் மூலம் பிறர் அடையும் நல் வாழ்வையும் கெடுக்காதீர்கள்.

nhs said...

You should not blame the temple preiests. they are doing their duties.

Post a Comment

கருத்தைப் பகிர: