
முதலில் மத்திய சுகாதார அமைச்சருக்கு நன்றி சொல்லியே
ஆகவேண்டும்.இது தனி மனித உரிமையின் குறுக்கீடு என்ற
போதிலும் இந்த முடிவினால் பெண்கள், குழந்தைகள் புகை பிடிக்காதோர் மிக்க பயன் அடைவர்.
அதிலும் இப்போதைய இளைய சமுதாயம் புகை பிடித்தலை ஒரு அந்தஸ்தாகவே நினைக்கும் ஒரு கேவல நிலையில் உள்ளனர்.
இச் சட்டத்தை நடைமுறை படுத்துவதில் சில தடுமாற்றம் இருக்குமெனினும், சில மாற்றம் கண்டிப்பாய் நிகழும்.
இந்த மாதிரியான புகைத் தடை அமெரிக்க மாகாணம் பென்சில்வேனியா-விலும் போன மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஏச்சுபேச்சு-க்கிடையில் புகைமட்டு படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் இது ஒரு முன் மாதிரியான சட்டம்.இதுவெற்றி அடைந்தால் இயற்கைக்கே வெற்றி.
காற்றை சுத்தமாக்குவோம்.....???
புகைக்கு எதிரான ஒரு விளம்பரம்.....கீழே!
புகைக்கு எதிரான ஒரு விளம்பரம்.....கீழே!
அன்புடன்,
முகு
3 comments:
பிறரை பாதிக்காத தனிமனித சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளலாம். தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் பிறரையும், சமூகத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுப்பவர்களை கண்டிக்கவும் தண்டிக்கவும் வேண்டும்.
நாட்டுமக்கள் அனைவரும் அன்புமணியை பாராட்டவேண்டும்.
இது தொடர்பான பதிவு
http://thamizharpaarvai.blogspot.com/2008/10/blog-post_03.html
கருத்துக்கு நன்றி,கரிகாலன்.
//தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் பிறரையும், சமூகத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுப்பவர்களை கண்டிக்கவும் தண்டிக்கவும் வேண்டும்.//
பொது இடங்களில் புகை பிடிக்கத்தான் தடையே தவிர முற்றிலும் தடை இல்லை
இது குறித்த என் கருத்துக்கள்
http://www.payanangal.in/2008/10/smoking-ban-nicotine-ban-patch-tablet.html
Post a Comment
கருத்தைப் பகிர: