நாளை தமிழனின் கொடி,நிலவில்!

Category :

நிலவில் இந்தியனின் கொடி பறக்க விட்டதை பெருமிதத்தோடு பார்க்கிறோம்।அதே நேரத்தில் தமிழனின் கொடியும் பறக்கும் நாள் வெகு தொலைவின் இல்லை என உறுதியிட்டு கூறலாம்।ஆமாம், அவன் தான் ஈழத்தமிழன்...ஒட்டை,பித்தளை,இரும்பை வைத்தே வானூர்தி அமைத்தவன் அவன்।

நெஞ்சு துடிக்கிறது...ஒரு பயங்கரவாத அரசு,தமிழ் இனத்தையே அழிக்க துடியாய் துடிப்பது।இந்த இனப்படுகொலைக்கு என் இந்திய அரசும் துணை போவதை வெட்கி தலை குனிகிறேன்.இந்திய அரசு ஆயுதம் மட்டுமா அளித்தது.....ஆளையும்காட்டியுமல்லவா கொடுக்கிறது.

இந்திய அரசே.....விழித்துகொள்....,ஈழத்தில் சாவும் அப்பாவி தமிழனினால், அதற்கு நீங்கள் துணை போவதால்.....எங்கள் இதயத்தினுள் உள்ள இந்தியன் செத்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்து விட வேண்டாம்.

உலகத்திற்கு தமிழனை "பயங்கரவாதி" என்ற போர்வை போர்த்த நினைக்கும் இலங்கையின் தந்திர வலையில் இந்தியா விழவேண்டாம்.அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இந்தியா தவறிவிட்டது.ராஜபக்சேவிடம் "கெஞ்சும்"நிலையை அடைந்தது கேவலமாக உள்ளது.இன்னும் நம்முடைய வெளியுறவு கொள்கை தெளிவாக இல்லை.யாசர் அராபத்துக்கு ஆதரவு அளித்தோம்...அவர்களும் ஆயுதம் தூக்கியவர்கள்தான்.தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?அவன் என்ன அகதியாய் வாழப்பிறந்தவனா?

பக்கத்து மாநிலம் போன்று இருந்த, நேபாளத்தில் என்ன நடந்தது?மன்னர்களுக்கு அசிங்கமாய் ஆதரவு அளித்தோம்...மக்கள் யாரிடம் இருக்கிறார்கள் எனத்தெரியாமல்...கடைசியில் தேர்தல் முடிந்தவுடன் அசிங்கப்பட்டது இந்தியா தான்.அதேபோன்ற தவறை எம் தமிழினத்தின் மீது செய்ய வேண்டாம்.

அசிங்கமாய் இறையான்மை பற்றி பேசுகிறோம்.இலங்கை ஒரேநாடாய் எப்போது ஆனது....தமிழன் தான் அங்கு ஆட்சிசெய்தவன். வரலாற்றை மாற்ற முடியாது, மக்களை அழித்துவிட்டு.

ஈழம் அமைந்தால், தமிழ்நாட்டு தமிழனும் தனிநாடு கேட்பான் என்பது பிதற்றுவாதம்.....ஏன் நாங்கள் கேட்க போகிறோம்....?சமஉரிமையுடன் வாழும் போது.....!

இலங்கை இப்போதே அதன் சித்து வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது.ஆயுதப் பிச்சை எடுக்க பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும்பறந்து கொண்டிருக்கிறான்.அவன் சுயரூபம் புரியாமல் , நாம்(இந்தியா) அசிங்கப்படப்போவது உறுதி!இப்போது கூட காலம் கடந்துவிடவில்லை..தமிழர் பகுதியில் குண்டுமழை பொழிந்தால் உறவை மறுபரீசீலனை செய்ய நேரிடும் எனக் கூறுங்கள்.அந்த உரிமை நமக்கு நிறையவே உள்ளது,ஏனெனில் அடிபட்டு அகதியாய்,வரப்போவது இந்தியாவுக்குத்தான்.

அய்யா..தமிழ்நாட்டு பதவி வெறியர்களே.....கண்ணீர் வடித்ததுபோதும்...கபட நாடகம் ஆடியது போதும்.செயலில் இறங்குங்கள்.....முதலாவதாக பா.ம.க மத்திய அரசிலிருந்து வெளிவரட்டும், எதுவும் நடக்காத பட்சத்தில் திமுகவும் வெளிவரட்டும்.அதன் பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகலாம்.

இதைக்கூட செய்யவில்லையெனில் நமக்கேன் தமிழன் பெயர்,கூட தமிழ்நாடு என்று....???
காலம் கடந்துவிடவில்லை.....செயல்படுங்கள்...தமிழினத்தை காக்க....உயிருடன் காப்பாற்ற..!!!!

3 comments:

Anonymous said...

உண்மைதான்....இலங்கை தமிழர் பிரச்சினையில்
இந்தியாவின் அணுகுமுறை சரியில்லை தான்.

செல்வா
மும்பை

Anonymous said...

தமிழகம் உணர்வுகளைத் தவிர வேறு
என்ன செய்ய இயலும்?
நல்ல பதிவு.

Mugundan | முகுந்தன் said...

கருத்துக்கு நன்றி அனானி.

நிச்சயமாக இந்திய அரசு நினைத்தால்
சில மணி நேரங்களில் இலங்கை அரசை
பணிய வைக்க முடியும்.

அன்புடன்,
முகு

Post a Comment

கருத்தைப் பகிர: