போதும் கலைஞரே,போதும்?

Category :


ஆண்டது போதும், கலைஞரே....பதவியைத் தூக்கி
எறியுங்கள்.கடைசியில் "தமிழின துரோகி" என்ற பட்டத்துடன்
வரலாற்றில் வாழ வேண்டாம்.உங்களின் அறிவு,ஆற்றல், அரசியல்
ஆளுமை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர்.

ஆனால் தற்போது உங்களின் பதவி வெறி, தமிழினத்திற்கே
சாபம் ஆகிவிடுமோ என்ற கவலை மேலூங்குகிறது.அரியனையை
விட்டு வெளியேறி, உலகத்தமிழர்களின் முதல்வராக ஆகுங்கள்.

தமிழன் என்பவன் அகதியாய் வாழ்க்கையை நடத்தியவன்
என்ற வரலாற்றை ஏற்படுத்த வேண்டாம்.மேலே உள்ள படத்தை
பாருங்கள்...மனம் வெம்புகிறது....தமிழனின் வரலாற்றை அன்று
படித்து பெருமிதம் கொண்டிருந்தேன்।இன்று அவல நிலையில்...அநாதையை விட கேவலமாய்....???

இந்திய அரசில் பங்கு வகித்து, தமிழ்ச் சகோதரனை சாக
அடிக்கிறீர்கள்.பாவம்......கொடியது...அதனிலும் கொடியது,
அகதியாக்குவது.அதைத் தெரிந்தோ/தெரியாமலோ செய்கிறீர்கள்.

பதவி சுகத்திற்காக, பாராமுகமாக இருக்காதீர்கள்....அவன்
நம் தொப்புள் கொடி உறவு.இனியும் தாமதிக்காதீர்கள்....அதற்குள்
அநியாய,அக்கிரம இலங்கை அரசு.........தன் மக்களையே
சமாதியில் வைக்க தயங்காது.

இன்னமும் மனம் இரங்கவில்லையெனில், இந்தியன் என்ற பெருமையுடன் "மானாட மயிலாட" பார்த்துக் கொண்டிருங்கள்.

தமிழன் செத்துத் தொலையட்டும்....அவன் உயிருடன்
இருப்பது தானே, பிரச்சினை।
கடைசி வெறி:

இந்திய அரசு ஒரே கல்லில் ,இரு காயடைத்துள்ளது।தமிழனை சாகடிப்பது மேலும் நிவாரண உதவி என்ற பெயரில் உலகை ஏமாற்றுவது.

நன்றி: படம்-இன்பொதமிழ்

3 comments:

Unknown said...

May I know Which tamils you are referring here.?

Indian tamils or Srilankan tamils.
//நம் தொப்புள் கொடி உறவு//

First make sure that your தொப்புள் கொடி people who are surrounding you are fine and living happily then have a look at other country people.

Mugundan | முகுந்தன் said...

வணக்கம்.கருத்தை பதிந்தமைக்கு நன்றி.
நீங்கள் தமிழ் பேசும் இந்தியராக இருக்க வேண்டும்.

அடித்துக் கொண்டு சாகும் போது, வேடிக்கை பார்த்து
ரசிக்கும் கூட்டமல்லவா?

தமிழக மக்கள் அனுப்பிய நிவாரண பொருட்கள் இலங்கையில் இன்னமும்
வெற்று அறையில் காத்துக் கொண்டிருக்கின்றன.அனுப்பி 12 நாட்களுக்கு மேலாகின்றன.தமிழன் சாகட்டும் என்று....

Unknown said...

//அடித்துக் கொண்டு சாகும் போது, வேடிக்கை பார்த்து
ரசிக்கும் கூட்டமல்லவா//

See the samething happened in law college, why dont your Vaiko ,Thiruma and Nedumaran raise voice against that .? First let us resolve the issues inhouse, then look at others.

Post a Comment

கருத்தைப் பகிர: