மான, ரோசமற்ற பா.ம.க, தி.மு.க!

Category :

புதுடில்லி வரை சென்று கெஞ்சிவிட்டு வந்து ஒரு மாதத்திற்குமேல் ஆகி விட்டது.இன்னமும் மத்திய அரசு சட்டை செய்யவில்லை.தமிழர்கள் "இளிச்சவாயர்கள்" என்று நன்கு புரிந்துவைத்துள்ளனர்.இந்த கூத்தில் இன்னமும் பதவி வெறி பிடித்து அட்டை போல் ஒட்டிக்கொண்டுள்ள பா।ம।க மற்றும் தி।மு।க கேலி கூத்தாகி உள்ளனர். சுய மரியாதையை இழந்து என்ன சாதிக்கப் போகிறார்களோ?.

இந்த இரு கட்சியும் இனியும் தமிழக மக்களை ஏமாற்றாமல் மத்திய அரசில் இருந்து வெளியேறுவது தான் மானமுள்ள தமிழனின் எதிர்பார்ப்பு.சட்டசபை அனைத்துக் கட்சி தீர்மானத்தைக்கூட அசட்டை செய்த மத்திய அரசு கண்டிக்கத்தக்கது.இதில் நாடகமாடும் திமுக,பாமக வெட்கப்பட வேண்டியவர்கள்.

மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுங்கள்,அரசுக்குகொடுத்த வாக்கு காப்பற்ற வேண்டுமெனில். அரசில் இருந்துவெளி வந்தால் மட்டும் என்ன நடக்கப்போகிறது என்று கேட்காதீர்கள்?.அதை நாடாளுமன்ற தேர்தலில் காண்பிப்போம்.

பாலஸ்தீனத்தில் "காசா" பகுதியில் இஸ்ரேல் , அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை உலகமே கண்டிக்கிறது.இதில்கொடுமை என்னவென்றால் இன அழிப்பு( GENOCIDE ) செய்யும் இலங்கை கூட கண்டித்துள்ளது. ஆனால் தமிழ் ஈழத்தில், இலங்கை படைகள்செய்யும் பயங்கரவாதத்துக்கு, கண்டனம் தெரிவிக்க நாதி இல்லை.ஏனென்றால் அவன் தமிழன்.

நான்கு மாதங்களாக "வன்னியில்" நடைப் பிணங்களாக வாழும்தமிழனுக்கு , உதவி செய்ய எந்த உலகமும் காணோம்.இருப்பது தமிழகம் தான், அவன் கூட வாயை மூடிக்கொண்டிருந்தால்யார் காப்பற்றுவது?
கலைஞர் அவர்களே, மருத்துவர் ராமதாசு அவர்களே......விரைவாக முடிவெடுங்கள்.

இந்த தமிழின ஒழிப்புக்கு, இலங்கைக்கு ஆதரவளிக்கும் கீழ்கண்ட பயங்கரவாதிகளை தயவு செய்து வெளியேற்றுங்கள். துணிவிருந்தால்,

1.அலோக் பிரசாத், இந்திய தூதர்-இலங்கை
2।எம்।கே।நாராயணன் - இந்திய பாதுகாப்பு ஆலோசகர்
3।சிவசங்கர் மேனன் - வெளியுறவு செயலாளர்,மத்திய அரசு

4 comments:

jackiesekar said...

நிங்கள் சொல்வது முற்றிலும் உண்மை உங்கள் கருத்தில் எனக்கு எந்த வித மாற்று கருத்தும் இல்லை. அதுவும் அந்ந நாரயணன் பொறம் போக்க இருக்கறவரைக்கும் நம் தமிழ் மக்களுக்கு சனிதான்

Namakkal Shibi said...

//பாலஸ்தீனத்தில் "காசா" பகுதியில் இஸ்ரேல் , அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை உலகமே கண்டிக்கிறது.இதில்கொடுமை என்னவென்றால் இன அழிப்பு( GENOSIDE ) செய்யும் இலங்கை கூட கண்டித்துள்ளது. ஆனால் தமிழ் ஈழத்தில், இலங்கை படைகள்செய்யும் பயங்கரவாதத்துக்கு, கண்டனம் தெரிவிக்க நாதி இல்லை.ஏனென்றால் அவன் தமிழன்//

:(

இவ்விஷயத்தில் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டிய நிலைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள் அரசாங்கத்தினர்!

நானும் வெட்கித் தலைகுனிகிறேன்!

தளபதி said...

CPI (M) ல் உள்ள நேர்மையான தோழர்கள் இதற்கு பதில் சொல்லலாம் (சந்திப்பு என்ற போலிப்பெயரில் (ie, இயற்பெயர் அல்லாத) இயங்குபவரும் பதில் சொல்லலாம்.) அனைத்து

சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?

-யாராவது சமூக அக்கறை உள்ளவங்களாவது கேட்டு சொல்லுங்கப்பா !

முகு said...

தோழர் சிபி மற்றும் ஜாக்கி,

கருத்துக்கு மிக்க நன்றி.
நம் அரசியல்கட்சிகள் மீண்டும் நிரூபித்து உள்ளன.
அவைகள் "கோமாளிகள்" என்று.

பொன்செகா சொன்னது
சரிதான்.

Post a Comment

கருத்தைப் பகிர: