ஆங்கில ஊடகங்களின் அயோக்கியத்தனம்?

Category :

தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் எந்த ஆங்கிலப்
பத்திரிகையும் இலங்கை விசயத்தில் உண்மையை கூட மூடி மறைக்கின்றன.இந்த‌ பாகுபாடான நிலையினால்,
ஈழத்தமிழனின் அவலத்தைக் கூட‌வெளியிட மறுக்கின்றனர்.
இதனை இத் தமிழ் சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டும்,இவர்களின் இரட்டை வேடத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது திருமாவளவனின் "உண்ணா நிலைப் போராட்டம்" குறித்து ஒரு செய்தியும் இவர்கள் வெளியிடவில்லை.தமிழினம் அழிந்து போவதில் இவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை?
ஆனால் இந்த மானங்கெட்ட தமிழன்,இவர்களின் செய்திகளை நம்பிகாசு கொடுத்து வாங்கி சோரம் போகிறான்.இதுதான் தமிழனின் தலை விதி.

ஈழத்தில் நடப்பது, சிங்கள பேரினவாத இன அழிப்பு என்பதைச் சொல்ல‌ எந்த நேர்மையான செய்தியாளர்களும் இங்கு இல்லை.
அடக்கு முறைக்கு எதிரான போராட்டம் தீவிரவாதமா?சம உரிமை கேட்கும் மக்கள் பயங்கரவாதிகளா?ஆயுதம் ஏன் தூக்கினார்கள்....அறுபது ஆண்டுகள் ஆன பிறகும்,சிங்கள அரசு ஒரு நேர்மையான தீர்வை வைத்ததா?

இலங்கையில் "லசந்தா"என்ற பத்திரிகையாளனுக்கு இருந்த தைரியம் கூட‌ இங்கு எவருக்கும் இல்லை.அரசின் பயங்கரவாத‌த்தை தட்டி கேட்கும் துணிவு லசந்தாவிற்கு இருந்தது.ஆனால் இங்கு.......?

ஊடகவியலாளரின் உண்மை பணி மக்களின் பிரச்சினையை எழுதி,அவர்களின் பிரச்சினை தீர உதவுவது தான்.ஆனால் இங்குள்ள பத்திரிகையாளர்கள் "காசா" மக்களைப் பற்றி எழுதுகிறார்கள்.,ஆனால் பக்கத்தில் உள்ள‌ இலங்கையில் நடக்கும் இன அழிப்பு நடப்பதை சினிமா மாதிரி பார்த்துக் கொண்டுள்ளனர்.தமிழினம் என்ன துரோகம்
செய்தது உங்களுக்கு?....

உண்மையைத் தான் எழுதவில்லை, அதைவிடக் கொடுமை சிங்கள பயங்கரவாத‌ அரசின் பொய்ச் செய்திகளை கட்டம் கட்டி வெளியிடுவது.இதுதான் சுதந்திர‌ பத்திரிகையாளனின் பணியா?....உண்மைத் தமிழர்களே, செய்தியாளர்களே சிந்தியுங்கள்.

கடைசி வெறி:

ச‌த்ய‌ம் க‌ம்ப்யூட்ட‌ர்ஸ் நிறுவ‌ன‌த்தின் நிர்வாகி,ராஜு
ஊரில் மக்கள் "சங்க‌ராந்தி"(பொங்கல் பண்டிகை) கொண்டாட‌வில்லை
என‌ IBN-LIVE எழுதுகிறான்.ஆமாம் ராஜூ, இந்தியாவை பெருமைப் ப‌ட‌ வைத்த‌வர்.அவ‌ர் சிறையில் இருப்ப‌தால் கொண்டாட‌வில்லையாம்.
இதெல்லாம் செய்தி.

ஆனால் ம‌க்க‌ளுக்காக "உண்ணாநிலை போராட்டம்" செய்யும்
திருமாவ‌ள‌வ‌ன் ப‌ற்றி ஒரு வரி செய்தி கூட‌ இல்லை.

10 comments:

Anonymous said...

சொரணையற்றவர்களுக்கு சொரணையேற்றும் பதிவு..நன்றி தோழரே...!
http://bodhivanam.blogspot.com/

நாமக்கல் சிபி said...

:((

Anonymous said...

Dear Mugu

Excellent, Keep it up, Each and every touched my heart,
Regards
Esakkiappan

Anonymous said...

Dear Mugu

Excellent, Keep it up, Each and every touched my heart,
Regards
Esakkiappan

Mugundan | முகுந்தன் said...

நன்றி...சிபி,இசக்கி,போதிவனம்,

அன்புடன்,
முகு

Jackiesekar said...

திருமா பற்றி செய்தி வெளியிட்டால் அவர் தமிழர்கள் மத்தியில் பெரியாளாகி விட்டால் என்ன செய்வது.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் சிவ சங்கர மேனன் இலங்கை மாதாக்கோவிலில் மணியாட்ட போன செய்தியை கூட வெயியிடவில்லை.

விளிம்பு நிலையில் இருக்கும் 6 லட்சம் தமிழர்கள் பற்றி இப்போது கூட நம் இன கவலை கொள்ள வில்லை என்றால் தமிழன் என்று ஓர் இனம் உண்டு என்று ஏட்டளிவில் வந்து விடும் நாள் வெகுதொலைவில் இல்லை. நன்றி முகு தொடர்ந்து நம் இன மக்கள் வேதனைகளை வெளியிடுவதற்க்கு...

Jackiesekar said...

http://jackiesekar.blogspot.com/2009/01/blog-post_16.html படித்து பாருங்கள் இன்னும் இலங்கை விஷயத்தில் நாம் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்காமல் இன்னம் நாம் பழைய பல்லவியே பாடிகொண்டு இருக்கிறோம்

வரவனையான் said...

ஒவ்வொரு வார்த்தையும் உண்மை முகு !


இவர்களுக்கு நமீதாவின் தூரம் தள்ளி போனால் கூட பிளாஷ் நியூஸ். ஆனால் ஒரு மக்கள் தலைவனின் காலவரையற்ற உண்ணாவிரத்தினை கண்டுகொள்ள மாட்டார்கள்.

Anonymous said...

பொதுவாக ஆங்கில பத்திரிகைகள் பார்பன் கைகளில் இருகிக்கிறது, இவர்கள் தமிழனின் சோற்றை தின்று விட்டு தமிழனுக்கே துரோகம் இழைப்பவர்கள். வயிற்று பிழைப்பிற்கு தமிழ்நாடு வேண்டும், ஆனால் தமிழ்நாடும், தமிழனும் பிழைத்துவிட கூடாது. தமிழ்நாட்டில் ஒரு எழுச்சி தோண்றி தமிழ்நாட்டில் தமிழனுக்கு எதிராக இயங்குபவர்கள் அடித்து துரத்தப்படவேண்டும். அந்தவகையில், இந்துராம்,சோ,தினமலம்,ஜெயா,சாமி,பார்பன் இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பாருங்கள். அந்நிலையிலேயே தமிழன் இனி வாழ்வான்.

Mugundan | முகுந்தன் said...

கருத்துக்கு நன்றி,வரைவனையான்,ஜாக்கி.

இன்னும் கூட தமிழன்,சன் மியுசிக்,ராஜ் மியுசிக்,
கலைஞர் டிவி என பாட்டுக்கு தொலைபேசியில்
வழிவது வேதனையாக உள்ளது.

நம்மை மத்திய அரசு,
செருப்பால் அடித்தாலும்,
இந்தியன் என்று சொல்லிக்கொண்டு இலங்கை-இந்திய
கிரிக்கெட்-பார்த்து துடைத்துக் கொள்வான்.

கருத்துக்கு நன்றி அனானி,
உண்மையை கூறுவதற்கு ஏன் தயக்கம்.தைரியமாய் பெயருடன்
பேசுங்கள்.

Post a Comment

கருத்தைப் பகிர: