தமிழ்ப் பிணங்களில் நடக்கும் இந்திய கிரிக்கெட்?

Category :




அய்யகோ............அய்யகோ...........என்று கலைஞர்
தீர்மானம் மட்டும் போட்டு "படம்" காட்டி விட்டார்.
இந்த நிலையில் "ராசபக்சே அழைப்பில்" சென்றுள்ள
ப்ரனாப் முகர்ஜி,தமிழினம் முழுவதும் அழிந்ததா...இல்லை
மிச்ச,சொச்ச தமிழன் உயிருடன் எவனாவது இருக்கிறானா என
வேவு பார்க்கச் சென்றுள்ளார்.

தமிழக தலைவர்கள் மரண ஓலமிட்டார்கள், புதுடில்லி வரை
சென்று மன்றியிட்டு அழுதார்கள்,தமிழின அழிப்பை தடுக்க.
இந்திய அரசு(திமுக,பாமகவும்) தமிழகத்தை அசிங்கப்படுத்தியது.
அரசியல் அசிங்கங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழக ஊடகங்கள் கூட தமிழின ஒழிப்பிற்கு துணைபோனது
கொடுமையிலும் கொடுமை.உண்மையை கூட எழுத மனம்
வரவில்லை.

கடைசியாய் ஒரேயடியாய் 300தமிழ் உயிர்களை வேட்டையாடி
இருக்கிறது சிங்கள பயங்கரவாத அரசு.கேட்க நாதி இல்லை.
உரிமையுடன்கேட்க வேண்டிய நாம் கிரிக்கெட் -டில் சவமாகி
விட்டோம்.

தலைநிமிர்ந்து வாழ்ந்த இனம், இன்று "சூடான்" தர்பூர்
நிலையிலான அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

என் இனிய ஈழ தமிழுறவே,நாங்கள் இல்லாத இந்திய இறையான்மையில்
சவமாகி விட்டோம்.

போராடுங்கள்..மக்களே,...போராடுங்கள்.....எத்தனை இடர் வரினும், உரிமையை
மீண்டும் பெற....எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன?

2 comments:

தாமிரபரணி said...

விடுதலை புலிகள் எனபவர்கள் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் என்பதை அனைவரும் உணர வேண்டும், புலிகள் உருவானதற்கு காரணமே இலங்கைதான். இலங்கை அரசு தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை தாக்குதல்களுக்கு பயன்படுத்தி வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
மேலும் இங்கு தாக்குதல் நடக்காது; பாதுகாப்பான பகுதி என்று ராணுவம் அறிவித்து விட்டு, அங்கு மக்கள் வந்தபின்னர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமுற்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், முதல் உதவிகூடப் பெற முடியாமல், மருந்துகள் இன்றி, சிறுகச்சிறுக செத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஐ.நா மன்றத்தின் இலங்கைக்கான அலுவலரும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளார், இதை உறுதிபடுத்தும் விதமாக இலங்கையில் சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது ஏவி கொன்று குவிக்கிறது. இதை சொன்னதற்காக, இலங்கையின் `சண்டே லீடர்' ஆங்கில செய்தித்தாளின் ஆசிரியரும், சிங்களவருமான லசந்தா விக்கிரமதுங்கே, ராஜபக்சே ஆட்களால் சில நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.இது போக விடுதலைபுலிகள் மக்களை கேடையமாக பயன்படுத்துகிறார்கள் என்று வதந்தியை பரப்பி விட்டுயிருக்கிறார் நாதாரி ராசபக்சே அதை சிறிதும் யோசிக்காமல் வழிமொழிகிறார்கள் நம் மானங்கட்ட காங்கிரசும், ஆதிமுகாவும், அடிமையாக இருப்பதற்கு போராட்டம் தேவையில்லை, ஆனால் தமிழ் ஈழமக்கள் அதை விரும்பவில்லை அவர்கள் தங்கள் உரிமைக்காக புலிகளுடன் சேர்ந்து போராடிகொண்டிருக்கிறார்கள் என்பதே நிசம்
இது சம்மந்தமாக பல முறை இந்திய அரசிடம் நம் போராட்டம் முலமாகவும், உண்ணாவிரதம் முலமாகவும் சொல்லியாச்சி ஆனால் இந்திய அரசுக்கு தமிழக மக்களின் சாவை பற்றி துளி கூட கவலையில்லை இதுமட்டுமா தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை 900 தடவைகளுக்கு மேல் துப்பாக்கியால் சுட்டு, 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை படுகொலை செய்ததற்கு, இந்திய அரசோ, பிரணாப் முகர்ஜியோ ஒரு வார்த்தையாவது கண்டனம் தெரிவித்தது உண்டா?
இப்படியே விட்டால் இங்கேயும் தமிழினம் மொத்தமாய் அழிக்கப்படும், நம்மை பற்றிய கவலையில்லாத இந்திய நாட்டில் தமிழகம் அங்கம் வகித்தால் என்ன வகிக்காவிட்டால் என்ன? தமிழக மக்களின் சதிகார கட்சியான காங்கிரசும், ஆதிமுகாவும் தேர்தலில் புறக்கணிக்கபட வேண்டும். தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் கண்டிப்பாக தனி நாடு வேண்டும் என்கின்ற அவசியத்தையே நடந்த, நடக்கின்ற சம்பவங்கள் குறிபிடுகின்றன

Mugundan | முகுந்தன் said...

தாமிரபரணி,
மத்திய அரசு இன்னும் தமிழனை இளிச்சவாயனாகத்
தான் எண்ணுகிறது.இதை உடைக்க தமிழின
ஒட்டு மொத்த எழுச்சி தேவை.

நாம் எழுந்தால் மட்டுமே அவர்கள் விழுவார்கள்.பிரணாப்
முகர்ஜி கூட, கொல்லுங்கள் ஆனால் ஒரேயடியாகக் கொல்ல
வேணாம் என்று "திமிறாக" கூறிவந்துள்ளது தமிழனுக்கு இடப்பட்ட
சவால்.எவனும் கேட்க மாட்டான் என்ற திமிர்.....?

Post a Comment

கருத்தைப் பகிர: