கடந்த ஒரு வாரமாக சட்டம், ஒழுங்கு மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் விசயமாக கர்நாடக முதல்வருடன் பேச்சுநடத்த முடியாமல் "மூக்குடைபட்டு" காத்துக் கொண்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
மூன்று முறை தேதி குறித்தும், எனக்கு சொந்த தொகுதியில் மக்கள் பணி இருப்பதால் " நேரம்" இல்லை என்று சொல்லி சிதம்பரத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளார் முதல்வர் எடியூரப்பா.
சிதம்பரத்தின் "கை" கொஞ்சம் நீளம் தான்....மாநில முதல்வர்கள் இவரிடம் கையேந்தும் கூலிகள் என நினைத்து விட்டார் போலும்.
சட்டம்,ஒழுங்கு மாநில முதல்வரில் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆனால் சிதம்பரம் போன்றவர்கள் சோனியாவின் விசுவாசத்திற்காக எதையும் செய்வார்கள்.
அதுதான் மாநில முதல்வர்களுக்கு ஆலோசனை கூறி கடிதம் எழுதுவது.இது மாதிரி மாநில பிரச்சினையில் அதிகமாக மூக்கை நுழைப்பவர்களை மாநில முதல்வர்கள் கண்டிக்க வேண்டும்.அப்போது தான் சொரணை வரும்.
கடைசி வெறி:
படிக்கும் போது தமிழனை அவமானப்படுத்தி விட்டார்களே என எண்ண வேண்டாம்."காங்கிரசு காரன்" எப்போது தமிழனாக இருந்திருக்கிறான்?.
3 comments:
//படிக்கும் போது தமிழனை அவமானப்படுத்தி விட்டார்களே என எண்ண வேண்டாம்."காங்கிரசு காரன்" எப்போது தமிழனாக இருந்திருக்கிறான்?.//
Correct !!!
Renga
புது டில்லி மாமியாருக்கு அடிமை
தமிழ்நாட்டு மருமகள் மட்டுந்தான்.
மற்றவர்கள் மானமுள்ள மருமகள்கள்!
அங்கேயெல்லாம் புலி வருது பாச்சா
பலிக்காது.
சோனியா காகிதப் புலி என்பது தமிழனுக்குத்தான் தெரியவில்லை.
மானங்கெட்டுக் கிடப்பதால்!
நன்றி ரெங்கா மற்றும் அனானி,
இந்த சிதம்பரத்தை யெல்லாம் இந்த தேர்தலுடன்
சங்கு ஊதினால் தான் "காங்கிரசு காரனுக்கு" புத்தி வரும்.
Post a Comment
கருத்தைப் பகிர: