கலைஞர்- ஒரு தமிழினக் கொலைஞர்!

Category :

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக் குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே - இனி எப்போதும் மறவாது தமிழினம் -
உனை எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!
தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! -
எங்கள் முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான் சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்வெட்டிப் பழமொழிக்கு
சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன் சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களைஉன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா?
இல்லை கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!மடிந்தது உன் சூழ்ச்சி!
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!அடிவயிறு எரிகின்ற அன்னையரின்
வெப்பம் உனைஅப்படியே பொசுக்கட்டும்!

ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் -
இதுசத்தியம்! சத்தியம்! சத்தியம்!


-திவாகரன்,தம்பிரான் தோழர்-

கடைசி வரி:
இக் கவிதை தமிழொசை.காம் இணயத்தில் இருந்து மறுபதிப்பு செய்யப்படுகிறது.
நன்றி:திவாகரன்,தம்பிரான் தோழர் & www.tamiloosai.com

சில வரிகள், வலிக்கும் என்ன செய்ய...உண்மையை சொல்ல வேண்டியுள்ளதே?

2 comments:

Jackiesekar said...

நான் ஏதும் சொல்வதற்க்கு இல்லை நண்பா...

Anonymous said...

ஊழலின் ஒட்டு மொத்த உருவே போற்றி!
அண்ணாவின் வழி நேர்மை! உன் வழியோ கயமை!
அண்ணா சொல்லியது தன்மானம்! நீ தேடியதோ அவமானம்!
ஆயிரம் பொய்களின் அண்ணலே போற்றி! அண்டப்புளுகனே போற்றி!
இப்பொழுது அடித்த கொள்ளை எண்பது தலை முறைக்கும் போதும்!
ஈவு இறக்கம் இல்லாமல் வைகோவை வெளியேற்றிய வள்ளலே போற்றி!
உடன் பிறப்புகளுக்கு உயி்ர் என்று கூறி தன் பிறப்புகளுக்கு கோடி கோடியாக சேமித்த தலைவா போற்றி!
ஊமையும் வாய் திறந்து கேட்கப்போகிறான் உன்னிடம் இவ்வளவு பணம் ஏது என்று!
என் மக்கள் தமிழ் மக்கள் என்று கூறி தன் மக்களுக்கே பணம் சேர்த்த ஏந்தலே போற்றி!
ஏழை பங்காளன் அண்ணா எங்கே! கோடிகளில் புறளும் நீ எங்கே!
ஐயம் அறவு இல்லாமல் அகப்பட்டுக் கொண்டாய் இப்பொழுது 2G யில்!
ஒரு கூற்று, ஒரு அம்பு, ஒரு மனைவி என்று வாழ்ந்த இராமபிரானை இழிவு செய்த எத்தனே போற்றி!
ஓய்வு ஒழிவில்லாமல் பணம், பதவி என்று அலையும் பித்தனே போற்றி!
ஔவையும் அறிங்கரும் வாழ்ந்த நாட்டின் களங்கமே போற்றி!

Post a Comment

கருத்தைப் பகிர: