இந்தியா செய்த தமிழினப் படுகொலை?

Category :

என்னுள் இருந்த இந்தியன் படுகொலை செய்யப்பட்டு விட்டான்.இனி நான் என்ன தான் "இந்தியன்" என்று கூறினாலும் அது நடிப்பாகத்தான் இருக்கும்.

என்நாடு செய்த பாவத்தில் எனக்கும் பங்கு உண்டு.தமிழினம் என்று வேண்டாம்,மனித இனம் என்ற அடிப்படை கரிசனம் இல்லாமல் நடந்து கொண்ட இந்தியா, அதற்கான தண்டனையை பெற்றே தீரும்.
நியாய, தர்மத்தை பேச இந்தியாவுக்கு இனி அருகதை இல்லை.26 ஆம் தேதி நடந்த ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் கூட‌ நியாயத்தை பேசாமல், இலங்கை பயங்கரவாத அரசின்" கைப்புள்ள" யாக நடந்து கொண்டது கேவலம்.
இந்தமாதிரி தவறான வெளியுறவு கொள்கைகளினால் தான் மக்களின் ஆதரவை பல நாடுகளில் இந்தியா இழந்தது.குறிப்பாக‌ நேபாளம்,பங்களாதேஷ்...அரசாங்கம் செய்யும் தவறை சுட்டிகாட்ட வேண்டிய பொறுப்பு இந்தியா போன்ற ஜனநாயக‌ நாட்டுக்கு உண்டு.ஆனால் இந்தியா தவறான அரசு அதிகார‌வர்க்கத்தினால் தவறான கொள்கைக்கு வழி அமைத்து மீறவும் செய்கிறது.

உதாரணம்:
1.மியான்மார் உடன் உறவு‍‍‍- அந்த அரசு அப்பட்டமான மனித உரிமை மீறல் செய்தும்,நம்மால் நியாயத்தைக் கூட கேட்க இயலாமல் உள்ளோம்.
2.திபெத்-இந்தியாவை நம்பி வந்தவர்களுக்கு இன்னும் ஒரு படிமுன்னேற்றம் கூட இல்லாமல் அவர்களின் வாழ்க்கையை ஏமாற்றியது.
3.சூடான்-அங்கு தர்பூரில் இரு மாபெரும் இனப்படுகொலை நடத்திய அரசுடன் ''வியாபாரம்" செய்வது....ஓ.என்.ஜி.சிஅரசு நிறுவனம் நிறைய மில்லியன் கொட்டியுள்ளது.(குருடு ஆயில்=க்காக)

கடைசி வெறி:

இந்தியா மூச்சுக்கு மூச்சு "இறையான்மை" பற்றி பேசுகிறது.அதே இறையான்மையை சொல்லி ஒரு "கொலைஞரும்" மூத்திரம் விடுகிறார்.பதவி பெற பல்லக்கில் செல்கிறார், புதுடில்லிக்கு.ஆனால் படுகொலை நடக்கும் போது "கடிதம்" எழுதுகிறார்.
நேற்று வட கொரியா தன் சொந்த நாட்டில் , சொந்த பாதுகாப்புக்காக‌ அணு ஆயுத பரிசோதனை செய்த போது, முதல் ஆளாய்கண்டணம் தெரிவிக்கும் இந்தியாவுக்கு அடுத்தவன் நாட்டில் தலையிடுவது "இறையான்மை" மீறிய செயல் என ஏன் தெரியவில்லை?.
இந்தியா இரட்டை வேடத்துடன்,இரட்டை நாக்கையும் வைத்துக்கொண்டு பேசுவது அநியாயம், அக்கிரமம்.

5 comments:

Jackiesekar said...

நேற்று வட கொரியா தன் சொந்த நாட்டில் , சொந்த பாதுகாப்புக்காக‌ அணு ஆயுத பரிசோதனை செய்த போது, முதல் ஆளாய்கண்டணம் தெரிவிக்கும் இந்தியாவுக்கு அடுத்தவன் நாட்டில் தலையிடுவது "இறையான்மை" மீறிய செயல் என ஏன் தெரியவில்லை?.//


அவர்கள் தேவைபட்டால் மாற்றி பேச தயங்காதவர்கள்,நான் இந்தியன் என்று நெஞ்சு நிமிர்த்தி என்னால் சொல்ல முடியாது என்ற உங்கள் வார்த்தை காயப்பட்ட இதயத்தில் இருந்து வந்த வார்த்தை அது, என்னால் உணர முடிகின்றது..

ஏன் இப்போது எல்லாம் எழுதுவது இல்லை வேலை பளுவோ???

Anonymous said...

என்னுள் இருந்த இந்தியன் படுகொலை செய்யப்பட்டு விட்டான்.இனி நான் என்ன தான் "இந்தியன்" என்று கூறினாலும் அது நடிப்பாகத்தான் இருக்கும்.// 1000000% vunmai -Karthi

Anonymous said...

மகாத்மா காந்தியின் இந்தியா இன்று
தமிழினப் படுகொலை பழி வாங்கும் காந்தியின் பசப்பு செய்யும் மானங்கெட்ட நாடாக உள்ளது.
சிங்களவனும்,சீன்னும் சேர்ந்து
காரித் துப்பும் போது இந்தக் காந்திகள் கட்டாயம் பதவியில் இருந்து அவமான்ப் படத்தான் போகிறார்கள்.

ஆனால் படு கொலை செய்யப்பட்டப் பச்சிளங்குழந்தைகள்,பால் வன் கொடுமைக்கு ஆளான பெண்கள்,உயிருடன் புதைக்கப் பட்ட ஆயிரக் கணக்கான் அப்பாவிகள்
அப்போது காரித்துப்ப இருக்க மாட்டார்கள்.
மானங்கெட்ட எச்சில்களைகள் பதவிக்கு ஆசை பட்டுப் படுகொலையைக் காணாமல் ஏமாற்றியது சரித்திரத்தில் சாணியால்
பொறிக்கப் படும்.
உங்கள் நாடகங்கள் போதும்,உங்கள் வீட்டு மானத்தையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள்.அதையும் பதவிக்காக ஏலம் விட்டு விடாதீர்கள்.

மதிபாலா said...

என்னுள் இருந்த இந்தியன் படுகொலை செய்யப்பட்டு விட்டான்.இனி நான் என்ன தான் "இந்தியன்" என்று கூறினாலும் அது நடிப்பாகத்தான் இருக்கும்./

ஆம். இதுதான் உண்மை.

ரத்தினச் சுருக்கமான நெத்தியில் அடித்தாற்போன்ற கருத்துக்கள்.

Mugundan | முகுந்தன் said...

ஜாக்கி,மதிபாலா,அனானி,

கருத்துக்களுக்கு நன்றி....

Post a Comment

கருத்தைப் பகிர: