மம்மி டாடியும்,ஆண்டி அங்குளும்.....

Category :



சில ஆண்டுகளாய் தாய் தமிழ், சீர் கெட்டு சிரிக்கும் நிலைக்கு வந்து,இப்பொது வெந்தும் விட்டது.



காணும் இட‌மெல்லாம் த‌மிங்கிலிஷ் மொழியில் ந‌ம் ம‌க்க‌ள்.த‌மிழ‌க‌ அர‌சும் த‌ம் ப‌ங்கிற்கு நாச‌ப்ப‌டுத்திக்கொண்டு.....பேருந்து ப‌ய‌ண‌ச்சீட்டில் இருந்த‌ த‌மிழை கூட‌ அழித்துவிட்டு,ஆங்கில‌ துண்டு சீட்டு.த‌னியார் நிறுவ‌ன‌ பேருந்துக‌ள் கூட‌,அழ‌கான‌ த‌மிழில் க‌ணிணிச் சீட்டு வ‌ழ‌ங்குகின்ற‌ன‌.


இன்னும் பெரும்பான்மையான‌ ம‌க்க‌ள் முத‌ல் எழுத்தை ஆங்கில‌த்தில் தான் எழுதி அசிங்க‌ப்ப‌டுத்துகின்ற‌ன‌ர்.உல‌கிலேயே த‌மிழ‌க‌ த‌மிழ‌ன் தான் இந்த‌கொடுமையை ர‌சிக்கிறான்.....உல‌கில் வேறு எந்த‌ மொழியும்,இன‌மும் இப்ப‌டி எழுதுவ‌தில்லை.
இதில் அமைச்ச‌ர்களும் அட‌ங்கும்.....


குறிப்பாக‌ அனைத்து ம‌ழ‌லைய‌ர் ப‌ள்ளியில் அப்பா,அம்மாவை கொன்றேவிடுகின்ற‌ன‌ர்.இது த‌மிழை அழிக்க‌ முனையும் நாச‌கார‌ர்க‌ளின் திட்ட‌மிட்ட‌ ச‌தியோ என்று கூட‌ என்ன‌த் தோன்றுகிற‌து.


இந்த‌ த‌மிழ் கொலைகார‌ர்க‌ளை திருத்த‌ எத்த‌னையோ த‌மிழ் அமைப்புக‌ள்,இய‌க்க‌ங்க‌ள் இருந்தும் ஒரு மாற்ற‌மும் இதுவ‌ரை நிக‌ழ‌வில்லை.


எம் த‌மிழின‌ கொலைகார‌ர்க‌ளே மொழி ஒரு இன‌த்தின் அடையாள‌ம்...அதை சிதைப்ப‌து ஒரு பாவ‌ச்செய‌ல்.


முழுமையான‌ ஆங்கில‌த்தில் கூட‌ எழுதுங்க‌ள்,பேசுங்க‌ள்.....ஆனால் த‌மிங்கிலிஷ்‍-ல் ம‌ட்டும் பேசாதீர்க‌ள்.....எழுதாதீர்க‌ள்...

0 comments:

Post a Comment

கருத்தைப் பகிர: