சவுக்கு.நெட்-தமிழ்நாட்டின் விக்கிலீக்ஸ்?

Category :

ஆமாம், எத்தனை பேருக்கு தெரியும் தமிழ்நாட்டிலும் ஒரு விக்கிலீக்சு(Wikileaks) அரசியல்வாதிகளையும் அதிகார வர்க்கத்தையும் கலங்க வைப்பதை, கலங்க வைத்துக் கொண்டிருப்பதை.

இந்த தளம் தமிழக மக்கள் உரிமைக் கழகம்(www.savukku.net) என்ற
போர்வையின் கீழ் இயங்குகிறது.நிறைய உண்மைகளை
வெளியிட்டு அதிகார வர்க்கத்தினரை கழிசல் புடுங்க வைத்துக் கொண்டுள்ளனர்.

மேலும் இதன் பொறுப்பாளர் ஒருவரை கைது செய்து மிரட்டியும் பார்த்துவிட்டனர்.ஆனாலும் நாளுக்கு நாள் இதன் புலனாய்வு செய்திகள் வந்துகொண்டுதான் உள்ளன.

விக்கிலீக்சு தனது கொள்கையில் மிகவும் நேர்மையான முறையில் செயல் படுகின்றனர்.குறிப்பாக பொய் செய்தியை ஊக்குவிப்பதே இல்லை.அனைவரும் தன்னார்வலர்கள்,காசுக்காக மனசாட்சியை விற்க்கும் சாதாரண ஊடகக்காரன் அல்ல.
அமெரிக்கா எத்தனையோ மாதம் முயற்சி செய்தும் இன்றுவரை அவர்களின் "செர்வர்களைக்"(Server)கூட அடையாளம் காண முடியவில்லை.அதன் நிறுவனர் ஒரு கணிணிப்புலி என்பதால் சங்கேத மொழியிலே உலக கணிணி செர்வர்களில் தகவல்கள் இருந்தும் அதனை காணமுடிவதில்லை.
இங்கே நம் சவுக்கு.நெட் உண்மையை புட்டு வைக்கத் தான் பாடுபடுகிறது என்ற போதிலும் அது தனி மனித தாக்குதலிலும் ஈடுபடுவதினால் அதன் நியாயம் தர்மம் சோதனைக்குள்ளாகிறது.இணையதளத்தின் தலைப்பில் உள்ள தமிழீழத்தின் தலைவர் பிரபாகரனின் படம் அவசியமில்லாதது.தமிழகத்தின் நிறைய இதழ்கள்,வார ஏடுகள் காசு பார்க்கத்தான் அந்தத் தலைவனின் படத்தைப் போட்டு சம்பாதிக்கின்றனர்.
ஆனால் இந்தமாதிரி மக்களுக்கான ஊடகங்கள் இருந்தால் தான் அரசியல் வாதிகள், காசுக்கும்,சொகுசுக்கும் மயங்கும் அதிகாரிககள் ஒழுங்காக நடக்க முயல்வார்கள்.

எந்த ஊடகத்தின் பணியும் சமுக அக்கறையுடன், மனித முன்னேற்றத்துக்கு
பாடுபடுவது தான்.ஆனால் பெரும்பான்மையான ஊடக முதலாளிகள் , வர்த்தக நிறுவனங்களின் பங்குதாரர்களாகவும், தரகர்களாகவும் உள்ளதால் உண்மைகள் அனைத்தும் வருவதில்லை.

தமிழ்-ஆங்கில ஊடக அக்கிரமங்கள்

Category :

சமீக காலமாக இந்திய ஊடங்களின் செயல் வரையறை மீறி காசு பார்ப்பதையே குறிக்கோள் என்பதையே தெளிவாக காண்பிக்கிறனர். இடைத்தரகர் நீரா ராடியா மற்றும் முன்னாள் அமைச்சர் ராசா உரையாடல்

இந்தி ஊடகங்களில் சினிமா மாதிரி போட்டுகாட்டினர்.

இதன் மூலம் அனைத்து ஊடகங்களின் உண்மையான முகம் வெளிச்சமானது.


என்.டி.டி.வி(NDTV) பர்கா தத் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ்(Hindustan Times) ன் விர் சிங்வி போன்ற‌ அதிமேதாவி ஊடகவியளாலர்களின் அசிங்க பேரத்தை கேட்க முடிந்தது.அரசியல் கட்சிகளின் புரோக்கர் மாதிரி இவர்களும் செயல்பட்டது அம்பல‌மானது.

எல்லா தொலைக்காட்சி நிறுவ‌ங்க‌ளும் டி.ஆர்.பி(TRP) என‌ப்ப‌டும் மாயைக்கு எதையுமே செய்ய‌ காத்திருக்கிற‌ன‌.வியாபார‌ம் இல்லையென்றால் ந‌ம் வீட்டு ப‌டுக்கையறையில் கூட‌ அவ‌ர்க‌ள் நுழைய‌லாம்.

நம்ம ஊர் ஊடகங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.நித்தியானந்தா,ரஞ்சிதா ஊடல் வீடியோ மூலம் சன் தொலைக்காட்சியும்,நக்கீரன் இதழும் அசிங்கமான முறையில் காசு பார்த்தது நாம் அறிந்ததே.


பத்திரிகை தர்மம் என்று பெயருக்குத்தான் உள்ளது.நிறைய ஊடகங்கள் கட்ட பஞ்சாயத்து செய்தும்,அரசியல்வாதியுடன் உறவாடியும் காரியம்
சாதித்துக்கொள்கின்றன.
தற்போது கூட நடிகர் விஜயகுமார் குடும்ப பிரச்சினையில் உள்நுழைந்து ஏதாவது அசிங்கம் கிடைக்காதா என நாக்கை தொங்க போட்டுக் கொண்டு
காத்துக்கிடக்கின்றனர்.

கடைசியாக ஒரு கொடுமை நடந்தது.ஒரு அறக்கட்டளை விழாவுக்கு நிதி திரட்ட வந்த நடிகை யானா குப்தா(Yana Gupta) ஜட்டிபோடவில்லை என்பதை இந்தி தொலைகாட்சி,பத்திரிகை படமாக்கி அசிங்கப் படுத்திக் கொண்டனர்.ஏமாந்தால் ஜட்டியில் கூட கேமரா வைத்துவிடுவார்கள் இந்த‌ கேவலமான ஊடகங்கள்.அதுவும் இதை செய்தது டைம்ஸ் ஆப் இந்தியா(Times of India),மிட்டே(Mid-day) போன்ற பெரிய ஊடகங்கள்.

பத்திரிகை தர்மம் என்பது தற்போது கடுகளவும் இல்லை.மனித சமுதாயத்தின் நான்காவது தூண் எனப்படும் "ஊடகம்"மக்களுக்கான, மக்கள் மேம்பாட்டிற்க்காகத் தானே தவிர....காசு பார்க்க அல்ல.


ஒரு ஊடகவியளாளன் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை அமெரிக்க ஊடக அமைப்பு விளக்கியுள்ளதை கீழே காணலாம்.

• உண்மையை தேடுதல், த‌ருத‌ல்(Seek Truth and Report It)
• யாரையும் புண்படுத்தாமலிருத்தல்(Minimize Harm)
• தன்னிச்சையாய் பக்கசார்பற்று செய்தி அளித்தல்(Act Independently)
• சமுக பொறுப்புணர்வுடன் அடங்கி செயல்படல்(Be Accountable)

கடையாக விக்கிலீக்ஸ்(wikileaks) என்ற இணையத்தளம் இன்று உலகையே நடுங்கவைப்பதை அனைவரும் அறிவர்.ஆனால் அவர்கள் அசிங்கமான முறையில் எதையும் காசுக்காக வெளியிடவில்லை.


அரசாங்கங்களின் உண்மை முகத்தை கிழித்தெறியத் தான் அதன் நிறுவனர் ஜூலியன்(Julian Assange) பாடுபடுகிறார்.


வாழ்க பத்திரிகையியல்…!


எழுத்து:எண்ணத்துப்பூச்சி
வெளியீடு:பாண்டிச்சேரிபிளாக்.காம்
நன்றி:www.pondicherryblog.com

புதுச்சேரி = குடிச்சேரி‍‍: ஒரு "பார்"வை!

Category :

இன்று காலை ஆறரை மணிக்கு வில்லியனூர் சென்றபோது கண்ட காட்சிகள் அதிர்ச்சியூட்டின.

1.மேட்டுப்பாளையம் சாராயக்கடை/கள்ளுக்கடை:

சுமார் நூறு பேர் உற்சாக பாணம் அருந்திக் கொண்டிருந்தனர்.
காலை தேநீர் கடையில் உள்ள கூட்டத்தை விட இங்கு அதிகம்
இருந்தனர்.முன்பு மாலையில் பணி முடிந்து போகும்போது
குடித்தவன் இன்று முன்னேறி அதிகாலையில் குடிக்கிறான்.
தமிழனின் தலையெழுத்தை இனி யாரும் மாற்றமுடியாது.
வெள்ளைக்காரன் எவ்வளவு குடித்தாலும் யாரையும் முகம்
சுளிக்க வைக்கமாட்டான்.ஆனால் தமிழன் முட்டக் குடித்து
சாக்கடையின் நாற்றத்தை தனதாக்கி கொண்டிருப்பது மனதை
சுடுகிறது.
2.அரும்பார்த்தபுரம் சாராயக்கடை/கள்ளுக்கடை:
இங்கு சுமார் அறுபது முதல் எழுபது பேர் வரை இருந்தனர்.
வியாபாரம் சூடு படிக்க ஆரம்பித்து இருந்தது.
புதுச்சேரியை ஆளும் காங்கிரசு கட்சி குடிச்சேரியாக்கி மக்களை
மேன்மைபடுத்தி இருப்பதை "மார்" தட்டிக் கொள்ளலாம்.

என்ன காரணம்:
ஏன் காலை ஆறு மணிக்கே சாராயக்கடையை மொய்க்கின்றனர்.ஏன் குடும்பம், மனைவி,
குழந்தை என இருந்தும் போதைக்கு அடிமையானது ஏன்?
விடை கிடைப்பது சுலபம்.....குடி கொடுக்கும் போதை தான் அது.
அடித்தட்டு மக்கள் சாராயக்கடை,கள்ளுக்கடைகளை மொய்க்க,
நடுத்தர,மேல் மட்ட மக்கள் சொகுசு வெளிநாட்டு சரக்குகளை
குடிக்கின்றனர்.

மீதி கடைகளை பற்றி அடுத்த முறை எழுதுகிறேன்,அது வரை
போதையுடன் காத்திருங்கள்.

ரூ.70,000 கோடியில் ஒரு ஊழ‌ல் "வெளயாட்டு"!

Category :

அடேங்கப்பா....என மலைக்க வேண்டாம்.நம்ம நாட்டில் தான் இந்த‌(Commonwealth Games)
“காமன்வெல்த் விளையாட்டு விழா” என்ற‌ கேலிக்கூத்தை நடத்தி முடித்துள்ளனர்.
இந்தியா‍வின் வளர்ச்சியை உலகுக்கு தெரிவிக்க‌ இது உதவும் என பலர் கூறலாம்.
ஆனால் இது போலியான கவுரவத்துக்காகத் தான் நடத்தப்பட்டது என்பதை
டில்லியில் குடிசைகளை அகற்றியதையும், பிச்சைகாரர்களையும் விரட்டியதன்
மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஆனால்"இந்தியா"என்ற ஓட்டை வீட்டுக்கு இந்த ஒய்யாரம் தேவையா?
நம் நாட்டில் பட்டினியாலும்,அடிப்படை வச‌தி இல்லாமலும் குறிப்பாக‌
மின்சாரம் இல்லாமல் அவதிப் படும் போது இது தேவையா?இந்தியா
அதன் "சோசலிசம்"என்ற அடிப்படை கட்டமைப்பிலிருந்து விலகுவதை
நிறைய பேர் மறந்து விடுகின்றனர்.பணம் இருக்கிறவன் தன் "அடையாளத்தை"திமிருடன் காண்பிக்கத் தான் இந்த மாதிரி "அநாவசிய" விளையாட்டு.

இந்த பணத்தில் இந்தியாவில் எத்தனையோ மருத்துவமனைகளும், குழந்தைகளுக்கான‌ அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி இருக்கலாம்.ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் "பணம்" பார்க்க இந்தமாதிரி ஆடம்பர விழாக்களை நடத்துகின்றனர்.இது மக்கள் வரிபணத்தினால் நடத்தப்படுபவதால் நாம் கவலை கொள்ள வேண்டி உள்ளது. இந்தியாவில் இன்னும் 37% மக்கள் வறுமை கோட்டில் துன்ப‌த்தில் த‌விக்கும் போது இந்த‌ அதிகார‌ வ‌ர்க்க‌ம்,இந்த‌ மாதிரி வீண் விளையாட்டை ந‌ட‌த்துவ‌து கேவ‌ல‌ம்.
 
புதுடில்லிக்கு மட்டும் ரோடு, மற்ற வசதிகள் வந்தால் போதுமா?இந்த விளையாட்டு
அரங்கங்களின் கதி இனி என்ன ஆகும் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை?.

தமிழ்நாட்டு அரசின் ஆண்டு செலவே "20,000கோடி" என்றால் இந்த விளையாட்டுக்கு
செலவழித்த ரூ70,000கோடியில் என்ன,என்னவோ செய்திருக்கலாம், ஆனால் ஊழலை
ஒளிவு மறைவின்றி செய்துள்ளனர்,விளையாட்டு குழுவினர்.இதில் காங்கிர‌சு க‌ட்சியின் சுரேஷ் க‌ல்மாதி(Suresh kalmadi,Indian Olympic Association & Chairman, Organizing committee, Commonwealth games Delhi 2010) யின் க‌தை அனைவ‌ருக்கும் தெரியும்.

இப்போது ஊழலை விசாரிக்க ஒரு கமிசனை மத்திய அரசு அமைத்துள்ளது.அதன் அறிக்கைவந்த பிறகு தான் தெரியும், எத்தனை ஆயிரம் கோடி, அரசியல்வாதி மற்றும் அதிகாரிகளுக்கு போனது என்று?

இந்தியாவின் ஆண்டு செலவு ஒதுக்கீடே(2009+2010) சுமார் ரூ.10லட்சம் கோடியாகும்.
சீனாவை(China) பார்த்து நாம் அந்நாடு போல் செயல்படத் தேவையில்லை.சீனா 2008 ஒலிம்பிக்‍-க்கு செலவிட்ட தொகை சுமார் $40பில்லியர் டாலர்(US$40Billion).ஆனால் இதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு ஒரு பயனும் ஏற்படவில்லை.ஆனால் சீனா எல்லா மாநிலத்துக்கும் 'அடிப்படை விளையாட்டு"கட்டமைப்பை ஏற்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.

உண்மையான வல்லரசு என்றால், நாட்டின் வளர்ச்சி அனைத்து மக்களையும் சென்றடைந்து இருப்பதே.சும்மா...விளையாட்டு காட்டுவதினால் அல்ல.!

Reference:

http://www.bbcworld.com/, www.skynews.com, www.cwgdelhi2010.org, www.indiabudget.nic.in
Courtesy: Cartoon,Dileep Hegde

பவானிக்கு பசிக்குதாம்?

Category :

மிழ்த்திரைப்பட  உலகின் அற்புதமான‌
படமான "உதிரிப்பூக்கள்" திரைப்படத்தில்
வரும் சாதாரண வசனம்....வார்த்தை.
ஆனால் திரையில் பார்க்கும் போது, நம்
கண்ணீர் கூட திரையை பார்ப்பதை தவிர்க்க முடியாது.

"எந்திரன்" வீடியோ விளையாட்டை பாதி பார்த்துவிட்டு,மீதி நேரத்தில் "உதிரிப்பூக்கள்" பார்த்தேன்.பல ஆண்டுகளுக்கு பிறகு
பார்க்க நேர்ந்தது.அம்மா என்ற அற்புதமான உருவம்
மறைந்தால், குழந்தைகள் படும் துயரை மிகச் சரியாக‌
இயக்குனர் மகேந்திரன் காண்பித்திருப்பார்.ஒரு கொடுமையான‌
மனிதனாக வலம் வரும் "விஜயனின்" நடிப்பு அற்புதமானது.

திரைநாயகி "அசுவினி" இயல்பாக நடித்திருப்பார், நோயாளியாகவும்
வாழ்ந்திருப்பார்.

அனைவரும் மறுபடியும் பார்க்க வேண்டிய படம்.குறிப்பாக "இளைய‌

தலைமுறையினர்" பார்க்க வேண்டிய அற்புதமான படம்.

படம் வெளியான ஆண்டு:1979
நடிகர்கள்: விஜயன்,அசுவினி,சரத்பாபு
இயக்கம்:மகேந்திரன்
இசை:இளையராஜா
ஒளிப்பதிவு:அசோக்குமார்

வாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் தினசரி சர்க்கஸ்?

Category :

தினசரி இந்திய‍, பாகிஸ்தான் எல்லையான "வாகா"(WAGAH) வில் நடக்கும் கொடி ஏற்றம், இறக்கம் ஒரு பெரிய திருவிழாவாக, வேடிக்கைத் தெரு விழாவாக பல்லாண்டுகளாக நடைபெற்று வருவது பெரும்பாலானோர் அறிந்ததே.

இந்த "கண்றாவியை, கேலிக்கூத்தை" வெளிநாட்டினரும், இந்திய‌ பாகிஸ்தான் அப்பாவி மக்களும் பார்த்து ஆரவாரம் செய்வர். நாட்டுப்பற்றை, வெறியாக்கும் ஒரு மறைமுக நிகழ்வு அது. இந்நிகழ்வை நேரடியாகவோ, யு‍-டுயுப்(U-TUBE) மூலமாகவோ கண்டால் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா சார்பாக "எல்லைப் பாதுகாப்புப் படை"யும்(BSF) பாகிஸ்தான் சார்பாக‌ "ரேஞ்சர்ஸ்" (Rangers) என்ற படைப் பிரிவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர். படைவீரர்கள் ஓடுவார்கள், நிற்பார்கள்..... மரியாதை செய்வார்கள். வெகு வேகமாக காலைத் தூக்கி தாய் மண்ணை உதைப்பார்கள் (பாரத மாதா, இந்த‌ உதையில் உடைந்து உருக்குலைந்து போயிருப்பாள்).

இந்த மாதிரி உதை மரியாதைகளினால் "கால் மூட்டுகள்" சீக்கிரம் பயனற்றுப் போகும்; வலியினால் அவதிப்படுவார்கள். அறிவுள்ளவர்கள் இந்த மாதிரி செயல்கள் செய்ய முன்வர மாட்டார்கள். ஆனால் அதிகார‌ வர்க்கம் இந்த வீரர்களின் கால்களைப் பற்றியோ அல்லது உடல் நலனில் அக்கறை கொள்வதோ கிடையாது.

ஆனால் தற்போது இரு நாட்டு வீரர்களும், தம் முன்னோர்கள் படும் அவதியைக் கண்டு உதையின் வீச்சை குறைக்க கேட்டுக்கொண்டுள்ளனராம். இதனால் இரு அரசாங்க அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனராம்.

இந்த உதை நிகழ்வை ஒரேயடியாக நீக்கினாலும் நல்லதுதான். ஏன் ஒரு "கைக் குலுக்களுடன்" இனிய தினத்தை புதிதாக‌ வரவேற்கக் கூடாது?.

நன்றி:கீற்று.காம் (கீற்று இணையம்) Photo Courtesy:npr.org

கலைஞர்,கலைஞருக்கு எழுதிய கடிதம்!

Category :

அனுப்புநர்:
மு.கருணாநிதி
எண்:15, 4வ‌து வீதி
கோபாலபுரம்,
சென்னை‍ 600086.

பெறுந‌ர்:
மாண்புமிகு முத‌ல‌மைச்ச‌ர் அவ‌ர்க‌ள்
த‌லைமைச் செய‌ல‌க‌ம்
த‌மிழ்நாடு அர‌சு,
சென்னை 600 009.

பொருள்:சென்னை பொது ம‌ருத்துவ‌ம‌னைக்கு பெய‌ர் சூட்டுவ‌து‍ தொட‌ர்பாக‌‍

அய்யா,

வ‌ண‌க்க‌ம்.நான் க‌ட‌ந்த‌ நான்க‌ரை ஆண்டுக‌ளாக‌ த‌மிழ‌க‌த்தை "ந‌ல்லாட்சி" செய்து வ‌ருவ‌து அனைவ‌ரும் அறிந்த‌தே.ந‌ல்லாட்சிக்காக‌ மாத‌ம் ஒரு பாராட்டு
விழா ந‌டைபெறுவதையும் தாங்க‌ள் அறிவீர்.

த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ஏகோபித்த‌ ஆத‌ர‌வினால் "க‌லைஞ‌ர் காப்பீட்டுத் திட்ட‌ம்",
“க‌லைஞ‌ர் வீட்டு வ‌ச‌தி திட்ட‌ம்”, கலைஞர் இலவச வண்ணத் தொல்லைக்காட்சி திட்டம்,கலைஞர் ஒரு ரூபாய் அரிசி,தற்போது “கலைஞர் திரைப்பட நகரம்”,எதிர்காலத்தில் “கலைஞர் இலவச பம்பு செட்டு திட்ட‌ம்”,என‌ப் ப‌ல‌
திட்ட‌ங்க‌ள் க‌லைஞ‌ரின் "பெண்சிங்க‌ம்" மாதிரி வெற்றிக‌ர‌மாக‌ ஓடிக் கொண்டிருப்ப‌தையும் தாங்க‌ள் அறிவீர்.

இந்த‌ நிலையில் "காங்கிர‌சு" க‌ட்சியின் த‌மிழ‌க‌ கிளையின் த‌ம்பி இள‌ங்கோவ‌ன்
சென்னை அர‌சு பொது ம‌ருத்துவ‌மனைக்கு "ராஜிவ்காந்தி" பெய‌ரை வைக்க‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆசிரிய‌ர் வீர‌ம‌ணி, "பெரியார்" பெய‌ரை வைக்க‌
வேண்டுகோள் விடுத்துள்ளார்.க‌டைசியாக‌ "நாம் த‌மிழ‌ர்" என்ற‌ சிறார்
இய‌க்க‌ம் "முத்துக்குமார்"பெய‌ரை வைக்க‌வேண்டும் என‌க் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

ஆனால் இதில் அதிக‌ த‌குதி யாருக்கு என்று கழகம் ஒரு ஓட்டெடுப்பு ந‌ட‌த்திய‌தில் "க‌லைஞ‌ர்" பெய‌ரைத்தான் அதிக மக்கள் தேர்ந்து எடுத்து உள்ள‌ன‌ர்.இந்த‌ பெய‌ர் வைப்ப‌தில் உங்க‌ளுக்கும் ஆட்சேப‌னை இருக்காது என‌ ந‌ம்புகின்றோம்.


"க‌லைஞ‌ர் அர‌சு பொது ம‌ருத்துவ‌ம‌னை" என‌ பெய‌ரிட‌
இந்திய தேச‌த்தின் த‌லைவி, சோனியா காந்தி அம்மையாரிட‌மும் "கடிதம்" மூலம் அனுமதி வாங்கிவிட்டேன் என‌த் தாழ்மையுட‌ன் தெரிவிக்க‌ க‌ட‌மைப்ப‌ட்டு உள்ளேன்.

ந‌ன்றி!

த‌ங்க‌ள் உண்மையுள்ள‌,

மு.க‌ருணாநிதி
த‌லைவ‌ர்,தி.மு.க‌
23-08-2010


நகல்:

1.மாண்புமிகு ஆளுநர் அவர்கள்
தமிழ்நாடு அரசு

2.மாண்புமிகு பிரதமர் அவர்கள்
இந்திய அரசு

"டாஸ்மாக்" தமிழன்?

Category :


தமிழ் பேச்சு
எங்கள் மூச்சு,
தமிழ் பேசு
தங்க காசு.
தமிழன் பேச்சு
தெளிந்தால் போச்சு!


கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்:
Tamil Nadu State Marketing Corporation Limited(TASMAC)டாஸ்மாக்-க்கு ஒரு நல்ல தமிழ் பெயர்
வையுங்கள்.தமிழன் சாகட்டும்,
தமிழ் வாழட்டும்!

செம்மொழி மானாட,மயிலாட!

Category :
தமிழுக்கு செம்மொழி அலங்காரம் வந்தாலும்,இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சி
அதிகார மொழியாக பரவலாக்கப்படவில்லை.இன்னும் நீதிமன்றத்தில் தமிழ்
தடுமாறிக்கூட நுழைய முடியவில்லை.முதல்வர் கலைஞர் நினைத்திருந்தால்
தமிழுக்கும்,தமிழனுக்கும் செய்திருக்கலாம்.ஆனால் அவர் குடும்ப பிரச்சினையில் தடுமாறியதால், தமிழனை நடுத்தெருவில் விட்டுவிட்டார்.


தமிழுக்கு எந்த மொழியை விடவும், செம்மொழி தகுதி அதிகம் உண்டு,அதற்கு
நம் இலக்கியங்களும்,வரலாறுகளும் சாட்சி.ஆனால் தமிழ்நாட்டில் மொழியை
வைத்து அரசியல் நடப்பது புதிதன்று.

ஆனால் தற்போது தமிழ் பேசுபவன் நிலையைப் பாருங்கள்,ஒரு பேரழிவை
சந்தித்த ஈழத் தமிழினம் படும் அவலம் "நான் தமிழன்" என்று கூறவே
கேவலமாக உள்ள்து.

தமிழுக்கு மாநாடு நடத்தினால் தமிழனுக்கு பெருமையே.ஆனால் கோவையில்
என்ன நடக்கப்போகிறது என்று எழுதித் தெரிய வேண்டியதில்லை.அது கலைஞருக்கு ஒரு பாராட்டு விழாவாகத் தான் நடக்கப்போகிற‌து.

இந்த மாநாட்டினால் கோவை நகர், புது சாலைகளையும், தண்ணீர் வசதிகளையும் தற்காலிகமாக பெற்றுள்ளது.இதுதான் இந்த மாநாட்டினால்
பெற்ற பயனாக இருக்கும்.

"செம்மொழி கீதம்" எங்கும் எதிரொலிக்கின்றன.ஏதோ இரைச்சலுக்ககு நடுவே சில தமிழ் வார்த்தைகளை சேர்த்துள்ளனர்.கலைஞரின்
இந்த வரிகளுக்கு " நோபல் பரிசு" கொடுக்க சில "கைப்புள்ள உடன்பிற‌ப்புகள்"மாநாட்டில் பேசினால் ஆச்சரியப்படத் தேவையில்லை.

வாழ்க தமிழ்மொழி! வெல்க தமிழினம்!!

குறிப்பு:

மாநாட்டில் "குஷ்பு" அக்கா",செம்மறித் தமிழர்கள் என்ற தலைப்பில்
பேசலாம்.ஏன் என்றால் "அவருக்கு கெமிஸ்ரி" நல்லா தெரியும்.

நாம் எந்த இனம்?தமிழனா,திராவிடனா,இந்தியனா!

Category :
நாம் எந்த இனம்?தமிழனா,திராவிடனா,இந்தியனா!இந்த கேள்விக்கு விடையை யாராவது அறிஞர் பெருமக்கள் தந்தால் நல்லது.தற்போது "மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி"
ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

சூன் 2010 முதல், சூலை மாதம் 15ஆம் தேதிக்குள் கணக்கெடுப்பு
எடுக்கப்பட உள்ளது.ஆனால் அரசாங்கம் இது பற்றி தெளிவான
விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

ஆனால் தற்போது உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில்
இனம்,இந்தியா என்றே அச்சடிக்கப்பட்டு உள்ளது.வேறு நாட்டவர் என்றால்
மட்டுமே, அடுத்த வரியில் எழுத வழி செய்துள்ளனர்.

ஆகையினால் நம் தேசிய இன அடையாளத்தை பதிவு செய்ய இயலாது
என்றே தோன்றுகிறது.

பெரியார் திராவிடர் கழகம் "திராவிடர்" என்று பதிய கேட்டுக்கொண்டுள்ளது.
நாம் தமிழர் இயக்கம் மற்றும் பழ.நெடுமாறன் "தமிழர்" என்று பதிய‌
கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் இது பற்றிய சட்ட முன் மாதிரியை, யாராவது விளக்கினால் நல்லது.

இந்தியன் என்று ஒரு இனம் இல்லை என்று மட்டும் உறுதியாக கூற முடிகிறது.
மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது கேட்கப்படும் கேள்விகள்;
1.Name of person
2. Relationship to head
3.Father's name
4. Mother's name
5. Spouse's name
6. Sex
7. Date of birth
8. Marital status
9. Place of birth
10. Nationality as declared
11. Present address of usual residence
12. Duration of stay at present address
13. Permanent residential address
14. Occupation/ Activity
15. Educational qualification


Please read the following text which is given in National population register(NPR);

Q.11: NATIONALITY AS DECLARED*
Indian-1, Others write name of Country
5.21.1 Nationality for each of the enumerated person has to be
asked from the respondent and recorded. You may come
across cases where the nationality of the persons in the
same household would be different. Therefore, you must
probe this question for each individual carefully to get the
correct information. Please record the nationality of the
respondent as declared by her/him for each of the persons
being enumerated. Do not get into any argument with the
respondent regarding this [Figure. 5.31 and 5.32].


Please inform the respondent to give correct Nationality of each person in the household.
She/he can be penalised for giving any incorrect/false information.


*Note : It may be noted that nationality declared by respondent does not confer
any right to Indian Citizenship

கொலைஞருக்கு மீண்டும் பாராட்டு விழா...கடித கவி?

Category :

கலைஞரை மகிழ்விக்க மீண்டும் ஒரு விழா நடைபெற இருப்பதாக‌
அறிய முடிகிறது.இந்திய அரசின் தபால் துறையே(அஞ்சல்) "கடித கவி"என்ற சிரிப்பு விருதை வழங்க இருக்கிறது.

இந்திய தபால் துறை நட்டத்தில் இயங்கும் இந்த காலகட்டத்தில்,தமிழக‌
முதல்வர் கலைஞர் கருணாநிதி தொடர்ந்து எழுதும் கடிதங்களினால் தான்
தாக்கு பிடிப்பதாக் கூறுகிறார்கள். கலைஞர் அனுப்பும் மனுக்கள்,கடிதங்களுக்கு
மத்திய அரசு கண்டு கொள்வதில்லை என்று தெரிந்தும்,விடாப்பிடியாக‌
எழுதுவது ஒரு கலையாகவே கொண்டுள்ளார்.

தமிழினம்,தமிழக உரிமை எனும் போது கடிதம் எழுதும் கலைஞர்,தன்
குடும்பத்துக்கு பதவி வாங்க சக்கர நாற்காலியில் டில்லிக்கு ப‌டையெடுப்ப‌து
அனைவ‌ரும் அறிந்த‌தே....!

ஆகவே அனைத்து தமிழர்களும் ஒரு கடுதாசி மூலம் கலைஞருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.முத‌லில் வ‌ரும் 100 க‌டித‌ங்க‌ளுக்கு "க‌லைஞ‌ரின் பெண் சிங்க‌ம்"காட்ட‌ப்ப‌டும்.

மும்பை "நாம் தமிழர்" தோழர்களுக்கு நன்றி!

Category :உண்மையிலேயே நாம் தமிழர் மும்பையில் நடத்திய‌
அமிதாப்பச்சன் வீட்டு ஆர்பாட்டத்தில் பயன் கிடைக்கலாம்
எனத் தெரிகிறது.

ஆம், அமிதாப் பச்சன் தன் " வலைப்பதிவில்" கூட இது
குறித்து எழுதியுள்ளார்.

IIFA-International Indian Film Acadamy -ன் இந்திய திரைப்பட விழா விருது,
ஜுன் மாதம் இலங்கையில் நடக்க இருப்பது அறிந்ததே.இதை ஸ்பான்சர்
செய்யும் சாக்கில் இலங்கை, "இந்திய திரைப்பட நடிகர்களையும்,
இதனால் வரும் பெயரினால் தன் நாட்டுக்கு வரும் உல்லாச பயனிகளை
ஈர்க்கவும் (பேரினவாத சிங்கள அரசு) தந்திரமாக செயல்படுகிறது.
//
Everyone says that Sri Lanka is a small country, but I don’t think so. The size of a

country is judged by the size of her heart and I have seen that Sri Lankan’s has a big heart,” said Amitab Bachchan at the press conference held to officially announce Sri Lanka as the IIFA destination for 2010. //-Amitab Bachan பேசியது.

இந்த வலையில் இந்திய நடிகர்களை தடுத்து, தமிழர்களின் உணர்வுகளை
மதிக்கச் செய்வது ஒவ்வொரு தமிழனின் கடமை.

இன்னும் நிறைய "இந்தி"யர்கள் இலங்கையின் உண்மை வரலாற்றை தெரியாமல் தான் உள்ளனர்.இப்போதாவது நாம், நம் எதிர்ப்பை அமைதியான‌
வழியில் தெரிவிப்போம்.

தயவு செய்து அமிதாப்புக்கும், உங்கள் எதிர்ப்பை நாலு நல்ல வார்த்தையில்
தெரிவியுங்கள்.குறிப்பு:அமிதாப்பச்சனின் வலைப் பதிவிலும் நம் ஆதங்கத்தை தெரிவிக்கலாம்.

http://bigb.bigadda.com/
அமிதாப் பச்சன், மின்னஞ்சல்:amitabhbachchan@gmail.com
IIFA, Mumbai மின்னஞ்சல் :iifa@iifa.com

சாரு-வின் மீசையைக் காணோம்?

Category :


பிரபல(!) எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ஒரு பக்க‌
மீசையைக் காண‌வில்லை என‌ அவ‌ருடைய‌ அடி வ‌ருடிக‌ள்
தெரிவித்து உள்ள‌ன‌ர்.இரு தின‌ங்க‌ளாக‌ சாரு,த‌லை ம‌ற்றும்
"வ‌லை" காட்டாம‌ல் முட‌ங்கி கிட‌க்கிறாராம்.போலிசுக்கு போனால்
த‌ன்னை அமுக்கி விடுவார்க‌ள் என்ற‌ ப‌ய‌த்தினால்...வீட்டுச்
சிறையில் உள்ளாராம்.

குற்ற‌ம் புரிய‌ துணை போவ‌த‌ற்கும் நம்ம‌ இ.பி.கோ த‌ண்ட‌னை உண்டு
என்ப‌தால்.ப‌ர‌ம‌ஹ‌ம்ச‌ நித்யான‌ந்த‌ருக்கு,ஆள் பிடித்து(வாச‌க‌ர்க‌ள்)
அனுப்பி கூட்டு வியாபார‌ம் செய்த‌து இவ‌ர் தான் என்ப‌தால் க‌ண்டிப்பாய்
த‌ண்ட‌னை உண்டு.

நித்தியா....த‌ன் "க‌ல்ப‌த‌ரு"வை ந‌டிகை ர‌ஞ்சிதாவிட‌ம்
காட்டி...நாடு சிரித்து இப்போதுதான் அட‌ங்கியிருக்கிற‌து.
நித்தியா...த‌லைம‌றைவாகிய‌வுட‌ன்....ந‌ம்ம‌ நித்தியாவின் சீட‌ர்(புரோக்க‌ர்)
சாருவின் வ‌லைத‌ள‌மும் த‌லைம‌றைவாகிவிட்ட‌து.அவ‌ரின் எழுத்தை
அவ‌ச‌ர‌,அவ‌ச‌ர‌மாக‌ ர‌ப்ப‌ர் வைத்து அழித்தும்,...பாவ‌ம்...அந்த‌ வ‌ண்ட‌
வாள‌ங்க‌ள் இன்னும் வ‌லையில் வ‌ல‌ம் வ‌ருகின்ற‌ன‌.
த‌ன் வ‌லைப்ப‌க்க‌தில் இருந்த "நித்தியா க‌ட‌வுளை"அழித்துவிட்டு பார்த்தால்
அது அடுத்த‌ வ‌லைப்ப‌க்க‌த்தில்....அதிர்ச்சியில் சாரு.எல்லாம் அவ‌ன் செய‌ல்.

சாரு இப்போது த‌ன் இழி செய‌லால்,ம‌ன‌ம் உடைந்து த‌ன் குற்ற‌ உண‌ர்ச்சியினால் ப‌ய‌ந்து ந‌டுங்கிபோயுள்ளார் என‌த் தெரிகிற‌து. இனியாவ‌து சாரு மாதிரியான‌ எழுத்து வியாபாரிக‌ள் த‌ன் சொந்த‌ வியாபார‌த்தை க‌வ‌னித்தால் ந‌ல்ல‌து. கூட்டு இடம் பார்த்து சேருவது நல்லது.???
நீங்கள் இலக்கியம்,பின் நவீனத்துவம்,முன் நவீனத்துவம் என எந்த எழுத்தையாவது எழுதுங்கள்.பிடித்திருந்தால் படிக்கிறோம்,இல்லையெனில்
வேறு எழுத்தை படிக்கப் போய்விடுகிறோம்.

ஆனால் "சாமியார்களுக்கு" ஆள் சேர்க்கவும்,அவ‌ர்களின் லீலைகளை
எழுத்தில் திணிக்காதீர்கள்.அவர் "கடவுள்" எனவும்,எத்தனையோ "கான்சர்"நோயை
கண் முன்னே தீர்த்தவர் எனக்கூறி அப்பாவி வாசகர்களை ஏமாற்றாதீர்கள்.கள்ள சாமியார்களுக்கு உங்களை விட‌ நல்ல புரோக்கர்கள் வெளியில் கிடைப்பார்கள்.

ஆ...மறந்துட்டேனே..,மாயமான அந்த ஒரு பக்க மீசை இன்னும் ஒரிரு
தினங்களில் கிடைத்துவிடும் என ஒரு சுவாமி தெரிவித்துள்ளாராம்.
மீசை கிடைத்தவுடன் "முகம்" முழுமையாய் வலையேற்றப்படும்.

"கக்கூசை திற...நாற்றம் போகட்டும்"-‍‍சுவாமி நிவேதானந்தா.சாருவின் சில பிதற்றதல்கள் மற்றும் அசிங்க எழுத்துக்கள் கீழே:
கடவுளைக் கண்டேன் : சர்வரோக நிவாரணம் (7) “சாமியைப் பார்க்க வேண்டுமானால் பெங்களூர் செல்ல வேண்டுமே; இந்தக் காலை வைத்துக் கொண்டு எப்படிச் செல்வது? ” என்றேன்.

எப்படியோ தாங்கித் தாங்கி நடந்து பெங்களூர் போய் சேர்ந்து விட்டோம். நித்யானந்தரின் தரிசனம். பக்தர்களுக்கு நித்யா வரம் கொடுக்கும் நேரம்.

என்னைப் பார்த்து ” என்ன வேண்டும் ஐயா? ” என்று கேட்டார். நான் அவந்திகாவை சுட்டிக்காட்டி ” கடந்த ஐந்து ஆண்டுகளாக மாற்றி மாற்றி இவளுக்கு ஏதாவது ஜூரம் வந்து நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் சாமி. இதை சரிப்படுத்த வேண்டும் ” என்றேன். அப்போதைய பிரச்சினையான கால் வலியைப் பற்றியும் சொன்னேன்.

” அப்படியா? அம்மா இதுபற்றி எதுவும் சொன்னதில்லையே? ” என்று சொல்லி விட்டு, தன் கையிலிருந்த ஒரு செங்கோல் மாதிரியான ஒரு தண்டத்தை அவந்திகாவின் காலில் வைத்தார்.”

நித்யானந்தா: கபட வேடதாரியின் கலைந்த முகம்:


‘’நித்யானந்தரிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு நான் அவரைப் பற்றிப் புகழ்ந்து எழுதுவதாக இலக்கியத்தில் மாமா வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவர் எழுதியிருக்கிறார். ஒரு லட்சம் கொடுத்தாலே சினிமாக்காரனின் குண்டியை நக்கத் தயாராக இருக்கும் இவர்களைப் போன்றவன் நான் அல்ல. நித்யானந்தரின் கூட்டத்துக்குப் போக வேண்டுமானால் கூட ஆயிரம் ரெண்டாயிரம் என்று பணம் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறேன். இன்னமும் நித்யானந்தரின் புத்தக வெளியீட்டுப் பிரிவு எனக்கு 4000 ரூ . பாக்கி. அவருடைய எழுத்தை டைப் செய்து கொடுக்கும் டைப்பிஸ்ட் என்னை வந்து பணம் கேட்ட போது ஆசிரமத்தின் பப்ளிகேஷன் டிவிஷனில் ‘நீங்கள் கொடுத்து விடுங்கள்; நாங்கள் உங்களுக்குக் கொடுத்து விடுகிறோம்” என்று சொன்னதால் கொடுத்தேன். இன்னமும் அந்தப் பணம் வந்து சேரவில்லை.
ஒருவரை ஏமாற்றினாலே சிறைத் தண்டனை உண்டு. ஆனால் இந்தக் கபட சாமியார் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றியிருக்கிறார்.

ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது ஒருவருடைய அந்தரங்கமான விஷயம். அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை. ஆனால் நித்யானந்தர் மிக உயரிய ஒழுக்கக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசி விட்டு இப்படி ப்ளோ ஜாப் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். மற்ற எல்லா விஷயங்களிலும் ஓஷோவின் சிந்தனைகளையே தன்னுடையதாக எடுத்துக் கொண்ட இந்த நித்யானந்தர் ஓஷோவின் செக்ஸ் வாழ்க்கையை ஏன் விட்டு விட்டு அதை மட்டும் ரகசியமாக வைத்துக் கொண்டார்? பிரேமானந்தரிலிருந்து தமிழ்நாட்டு சாமியார்கள் அத்தனை பேரும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?


இப்போது நித்யானந்தரை விமர்சிக்கும் எல்லோரும் ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார்கள். அல்லது, அதைக் காணத் தவறுகிறார்கள். நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது. அவரால் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டவர்கள் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். தன்னுடைய அளப்பரிய சக்தியை வைத்துக் கொண்டுதான் அவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் உருவாக்கிய நித்ய தியான் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு எந்த ஆரோக்கியக் குறைவும் ஏற்படாது. அதற்குக் காரணம், அவர் அதையெல்லாம் உருவாக்கியது பதஞ்சலியின் யோக சூத்திரத்திலிருந்துதான். ஆனால் நித்யானந்தர் தனது அளப்பரிய சக்தியை நடிகைகளின் குண்டியை நக்குவதற்கும் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இப்போதைய பிரச்சினை. ‘’//இந்தியாவின் கைகளினால் படுகொலை செய்யப்பட்ட‌ ஈழம்?

Category :

லங்கையில் 2009 மே மாதம் நடந்து முடிந்த இரக்கமற்ற மனிதப் பேரழிவை நிகழ்த்தியதில் இந்தியாவின் பங்கும் உண்டு என்பதை உல‌கமே அறியும். அப்பாவி தமிழ் மக்களின் உயிரை குடித்து உலக‌ நாடுகள் தன் பயங்கரவாத வெறியை தீர்த்துக்கொண்டன. நியாயமான‌ உரிமைப் போராட்டத்தை திட்டமிட்டு அழித்தனர். தமிழனுக்கு நாதி இல்லை என்ற ஒரே காரணத்தினால். போரின் உச்சகட்டத்தின் போது, உலகத் தமிழர்கள் ஒப்பாரி இட்டும், கெஞ்சியும் இந்தியா சிறிதும் இரக்கமில்லாமல்,கொடிய சிங்கள் அரசுக்கு மட்டுமே ஆதரவாய் இருந்ததை உலகத் தமிழினம் என்றுமே மறக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் முத்துக்குமார் என்ற தியாகத் தீ அனைவரையும் வீதியில் இறங்கி போராட வைத்தது. ஈழம் ஒன்றே தீர்வு என் ஒரே குரலில் உரக்கத் தெரிவித்தும், காங்கிரசு, கலைஞரை வைத்து விளையாட்டு காட்டியது. அதுதான் உண்ணாவிரதம்... . உட‌னடி போர் நிறுத்தம்... கலைஞரின் மக்கள் போர் "அய்யகோ" என தொடர்ந்தது... .

இப்போது போர் முடிந்து அரையாண்டு முடிந்தும், முள்வேலி த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் மீள‌ முடியாம‌ல் த‌விக்கின்ற‌ கொடூர‌த்தை இந்தியா உட்ப‌ட‌ உல‌க‌ நாடுக‌ள் ப‌ல, க‌ண்ணை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டு தான் உள்ளன. கொடிய‌ சிங்க‌ள‌ அர‌சுட‌ன். இல‌ங்கை அரசு தூத‌ர்,இந்தியாவிட‌ம் கொடுத்த‌ வாக்கு ச‌ன‌வ‌ரி 10,2010 க்குள் அனைத்து த‌மிழ‌ர்க‌ளும் சொந்த‌ இட‌த்திற்கு மீள் குடிய‌ம‌ர்த்த‌ப்ப‌டுவ‌ர் என‌; ஆனால் இன்னும் ஒரு ல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் வ‌தை முகாமுக்குள் தான் அடைப‌ட்டுக் கிட‌க்கின்ற‌ன‌ர். ஆனால் இந்தியா ஒன்றுமே செய்யாம‌ல்,வேடிக்கை பார்த்துக்கொண்டு... . த‌ங்க‌ள‌து வியாபாரத்தை அமோகமாக ஆர‌ம்பிக்க‌... . !!!

ஏதோ தற்போது மேற்குலக நாடுகள் கூட பேசுவது, புலம் பெயர் ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான போரட்டத்தினால் தான். இன்னமும் சேனல் 4(Channel-4 TV) ஒளிபரப்பிய கொடுமையான கொலைக்காட்சிகளை பெரிய அளிவில் நிறைய‌ நாடுகள் எடுத்துக்கொள்ளவில்லை.

ரத்தவாடை நீங்குவதற்குள் நிறைய நாடுகள் தங்கள் வியாபாரத்திற்கும், சுய‌நலத்திற்காகவும் இலங்கையில் நுழைய வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். இதனிடையே "ஜனாதிபதி" தேர்தலும் முடிந்து, மகிந்த தன் குடும்ப‌ ஆட்சியை காப்பாற்றிவிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகா-விற்கு ஆதரவு செய்து தமிழர்களின் வாக்கினை ஓரளவு பெற்றும் இருந்தனர்.

இதனிடையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அடிக்கடி இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இந்தியாவிடம் என்ன‌ பேச‌ப்போகிறார்க‌ள்? என்ன எதிர்பார்க்கிறார்கள்... . ? இந்தியா, இல‌ங்கை பிர‌ச்சினையில் நுழைந்த‌து... த‌ன் சுய நலத்திற்குத்தானே த‌விர‌ ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளின் மேல் உள்ள‌ உண்மையான‌ அக்க‌றையினால் அல்ல‌. த‌விர‌ இந்திய‌ நிறுன‌ங்க‌ளின் ஆதிக்க‌ம் அதிக‌ரித்து கொண்டே செல்வ‌தினால் இந்தியா, இல‌ங்கையிட‌ம் நியாய‌ம் பெற‌ முடியாது. சுமார் 100 பெரிய‌ தொழில் நிறுவ‌ன‌ங்க‌ள் வியாபார‌த்தை ஆர‌ம்பித்து விட்டன‌. க‌டைசியாக‌ நுழைந்த‌து ஏர்டெல்(AIRTEL). த‌ற்போது அர‌சின் பொதுத்துறை நிறுவன‌ங்க‌ளும் வ‌ரிசையில்... . ?

இந்தியாவின் தற்போதைய‌ முத‌லீடு சுமார் 400 மில்லிய‌ன் டால‌ர்-க்கு மேல். ஆகையினால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் இந்தியாவை ந‌ம்பாம‌ல், த‌ம்மை அடுத்த‌ க‌ட்ட‌ எழுச்சிக்கு த‌யார் செய்து கொள்ள‌ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். இதில் புலம் பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் ப‌ங்கு அதிக‌ம் இருக்கும். இனி "த‌மிழ் ஈழ‌ம்"என்ப‌து மக்களின் எழுச்சியான‌ அர‌சிய‌ல் போர‌ட்ட‌த்தினால் ம‌ட்டுமே... சாத்திய‌ம்.

இந்தியாவின் வெளிவுறவு கொள்கை என்பது... சுயநலத்தினால் பிணைந்தது. ஒரு பக்கம் மக்கள் ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய பேசுவார்கள்... ஆனால் செயல் நேர்மாறானது... ஜனநாயகத்தை மிதிக்கும் 'மியான்மார்" நாட்டுடன் வியாபார நெருக்கம்... சூடானில் கச்சா எண்ணைக்காக கூட்டு, நேபாள‌ ம‌ன்ன‌ராட்சியை தாங்கிய‌து என உதாரண‌ங்கள் நிறைய‌.

இனியாவது ஈழத்தமிழர்கள், உலகமெங்கும் பரவிய தமிழர்கள் விழித்துக்கொள்ள‌ வேண்டும். உலகத் தமிழர்கள் ஒன்று படவேண்டும். தமிழக அரசியல்வாதிகளிடம் கையேந்தாமல் அடித்தட்டு மக்களிடம் செல்ல வேண்டும், ஏனெனில் அவர்கள் தான் உண்மையானவர்கள். ஈழத்தின் மேல் பாசம் கொண்டவர்கள்.

ஆக அரசியல் சாணக்கியத்தை எதிரிகளிடமிருந்தே படித்தாக வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் உள்ள‌ன‌ர் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள்.


நன்றி:கீற்று
மீள் பிரசுரம்-எண்ணத்துப்பூச்சி

இன்று...மாவீரன் கட்டபொம்மன் பிறந்த நாள்.!

Category :


இன்று....தமிழர்களின் வீரத்தை வெளிச்சம் போட்டவனின் பிறந்த நாள்.ஆங்கிலேயர்களை எதிர்த்து,சுதந்திரத்திற்கு போராடிய‌ ஒரு தமிழன்.அனைத்து த‌மிழ‌ர்க‌ளும் இன்று ஒரு நாளாவ‌து ந‌ம் வ‌ர‌லாற்று நாய‌க‌ர்க‌ளை ஞாப‌க‌ம் கொள்வோம்.

ஆகவே அம் மாவீரன் நினைவாக எழுதப்பட்ட கட்டுரை கீழே.....

எழுதியவர்:இரா.ராமச்சந்திரன், இணையம்:தமிழ்நேசன் http://www.tamilnation.org/


"உலகின் உயிரின பரிணாம வளர்ச்சியில் மனிதன் என்ற படைப்பு மிக உன்னதமாகக்கருதப்படுகின்றது. உலகம் தோன்றியது முதல் இன்றைய காலகட்டம் வரை பிறந்து மறைந்தவர்கள் எல்லோரும் நம் நினைவில் நிற்கமுடியாத நிலை. ஆனால் காலத்தால் மறைக்க முடியாத மனிதர்கள் இன்றும் நினைவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அத்தகைய சிறப்பை அவர்கள் பெற்றதற்கு காரணம் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த அவர்களின் குணாதியங்கள்கள்தான். அப்படி வாழ்ந்து மறைந்த மாவீரனாக நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.03-01-1760 ல் அழகிய வீரபாண்டியபுரத்தில் (இன்றைய ஒட்டப்பிடாரம்)பிறந்தார். இவருடைய தந்தை ஜெகவீரபாண்டியன். தாய் ஆறுமுகத்தம்மாள். கட்டபொம்மனின் முன்னோர்கள் தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர்கள. விஜயநகர பேரரசினரால் புலம் பெயர்ந்தவர்கள் எனக்கருதபபடுகின்றது. .இவர்களின் மூனறு புதல்வர்கள்தான் கருத்தையா என்ற வீரபாண்டிய கட்டபொம்மன், தளவாய் குமாரசாமி என்ற துரைசிங்கம் மற்றும் செவத்தையா என்ற ஊமைத்துரை.

இவர்களின் முன்னோர்கள் தெலுங்கு நாட்டின் பிரசித்திபெற்றவர்கள். கெட்டி பொம்முலு என வீரத்துக்கு அடையாளமாக சொல்லப்படும் சாஸ்த்தா அய்யணசாமி என்ற தெய்வத்தின் பெயரால் அழைக்கப்பெற்றவர்கள். அந்த வீரத்துக் காவல் தெய்வமாகக்கருதப்பட்டதனால் என்னவோ பிழைக்க வந்த வெள்ளையர்களுக்கு கட்டபொம்மன் ஒரு சிம்மசொப்பனமாகத்திகழ்ந்தார்.

சங்க காலத்தமிழ் காப்பியங்களில் வீரத்தமிழ்மன்னர்கள் தம் நாட்டு மக்களின் துயர் தீர்க்க தன்னுயிரையும் தர இசைந்தார்கள். தாய்ப்புலி தான் ஈன்ற குட்டிகளை தன்னுயிர் போனாலும் கவர்ந்து செல்ல யாருக்கும் அனுமதியளிக்காது. அவ்வாறே ஒரு மன்னன் தன் நாட்டு மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக அன்றைய தமிழ் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என புறநானூற்றுப்பக்கங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. இதற்கு உதாரணமாகத்திகழந்தவர் கட்டபொம்மன். தம் எதிர்கால மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென்பதற்காக கொண்டகொள்கைகளை கடைசிவரை காப்பாற்றி தமிழகத்தின் வரலாற்றில் ஆழமாக பதியப்பட்டு நிற்கின்றார்.

பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனின் மூதாதையர்களில் ஒருவர் காலத்தில் நடந்ததாகக்கருதப்படும் கதைகளில் ஒன்று இன்றும் பேசப்படுகின்றது. ஒரு நாள் வேட்டையாடும் நேரத்தில், வேட்டை நாய்களினால் துரத்தப்பட்டு வந்த முயலொன்று குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் வேட்டை நாய்களை நோக்கி முயல் சீறிப்பாய்ந்ததாகவும் அதைக்கண்ணுற்ற அன்றைய கட்டபொம்மர் அதுவே தாம் கோட்டை கட்டுவதற்கு உகந்த இடம் எனத்தீiமானித்து அவ்விடத்திலேயே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை நிறுவியதாகவும் கூறப்படுகின்றது.

கருத்தையா என்ற வீரபாண்டியன் 02.02.1790ல் கட்டபொம்மர்களின் வாரிசாக கருதப்பட்டு ஆட்சி அமைக்க அன்றைய மதுரைப்பாளையர்க்காரர்களால் அனுமதிக்கப்பட்டார். கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னனாகப் பொறுப்பேற்றார்.
1736 க்கு முன் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் மதுரை நாயக்கர் வம்ச அரசர்களால் பரிபாலனம் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு சந்தாப் சாகேப் ஆர்கோட் என்பவரால் மதுரை அங்கு கடைசியாக ஆண்ட ராணியிடமிருந்து பறிக்கப்பட்டு நவாப் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இக்காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் பெருமளவில் சுரண்டப்பட்டதின் காரணமாகவும் மக்கள் மிக்க அதிருப்தி கொண்டிருந்தனர்.

அத்துடன் இஸ்லாமிய ஆட்சிமுறையை பெரும்பாலான பாளையக்காரர்கள் எதிர்க்கத்துணிந்தனர். இத்தகைய போக்குகள் இறுதியில் ஆர்க்காடு அரசினை வெள்ளையர்களிடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. சரியான தருணம் பார்த்திருந்த ஆங்கிலேயர்கள் ஆர்க்காடு நவாப் அரசுக்கு கொடுத்துள்ள கடனுக்காக நவாப்பிடமிருந்து வரிவசுலிக்கும் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களிடமிருந்து தாறுமாறாக வரி என்ற பெயரில் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்.
வரியை மக்களிடமிருந்து வாங்கிக்கொடுக்காத பாளையக்காரர்கள் கொடுமைக்காளானார்கள். இத்தகைய நிலை ஏறத்தாழ 40,50 ஆண்டுகள் நீடித்த நிலையில்தான் பாஞ்சாலஞ்குறிச்சியில் கட்டபொம்மன் ஆட்சிக்கு வந்தார். மக்களின் வரிப்பணம் பாலாக்கப்பட்டு நிர்வாகம் தறிகெட்டுக்கிடந்த ஒரு காலகட்டத்தில் மக்களை புரட்சியிலிருந்து ஒடுக்குவதற்கு ஆங்கிலேயர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இத்தகைய போக்கு பிரச்சனைகளை மேலும் மோசமாக்குவதாக அமைந்தது.

இத்தகைய குழப்பமான நிலையில் ஆங்கிலேயர்கள் தங்களுக்கேயுரித்தான பிரித்தாழும் சதிவேலைகளை மேற்கொண்டு மக்களிடம் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தினார்கள்.
இக்காலகட்டத்தில் ஆஙகிலேயரின் ஒடுக்குமுறைக்கு சற்றும் சளைக்காமல் கட்டபொம்மன் அவர்களுக்கு வரி சேகரித்துக் கொடுப்பதை நிறுத்தினார். புல அச்சுறுத்தலுக்களுக்கும் பணியாமல் கட்டபொம்மன் தன் நிலையில் உறுதியாக இருந்தார். இதனால் கட்டபொம்மனை வஞ்சக வலைவிரித்து கவிழ்க்கத் தருணம் பார்த்திருந்தார்கள். கட்டபொம்மனின் மந்திரியாக செயல்பட்டு வந்தவர் தானாதிப்பிள்ளை அவர்கள்.

பிரதான தளபதியாக அமைந்தவர் சுந்தரலிங்கம் என்று அறியப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்காக தன் இன்னுயிரைத் தியாகமாக்கியவர். மதுரை பாளையக்காரர்களால் அணைவரிடமிருந்தும் கப்பம் பெற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களால் கட்டபொம்மனிடம் தங்கள் கொட்டம் பலிக்காமல் அவமானம் அடைந்தனர். அதனால் சமாதானம் பேசுவது என்ற போர்வையில் கட்டபொம்மனுக்கு தூது அனுப்பினார்கள்.
பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடம் இராமநாதபுரம் சேதுபதி ராஜா மாளிகை. பேச்சுவார்த்தைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் ஜாக்ஸன் துரை. கட்டபொம்மன், தானாதிபிள்ளை மற்றும் தன் குழுவினருடன் இராமநாதபுரம் சென்றார். அங்கே நடந்த பேச்சுவார்தை தோல்வியாகி கைகலப்பில் முடிந்தது. ஆங்கிலேயரின் இந்த திட்டமிட்ட வஞ்சக வலையில் சிக்காமல் தன் வீரத்திறமையால் அங்கிருந்து தப்பினார். ஆனால் தானாதிப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கைக்காக ஜாக்ஸன் துரை பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி ஆலோகனையின்பேரில் திருநெல்வேலி கலெக்டர் கட்டபொம்மனுக்கு வரி கொடாமைக்கு காரணம் கேட்டு கடிதம் 16..03.1799ல் அனுப்பினார். இதற்கு கட்டபொம்மன் வரி செலுத்த வேண்டிய பணம், தானியங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டதாக பதில் அனுப்பினார்.

கட்டபொம்மனின் தலைவணங்காத்தன்மை வெள்ளையர்களை மேலும் கோபத்துக்குள்ளாக்கியது. கட்டபொம்மனை நாட்டின் பொது எதிரியாக்கி தீர்மானம் நிறைவேற்றினர். தங்கள் நயவஞ்சக திட்டத்துக்கு கட்டபொம்மனுக்கு எதிராக எட்டப்பனை தேர்ந்தெடுத்து கட்டபொம்மனின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆராய்ந்து சரியான தருணம் பார்த்து இராணுவத்தளபதி பாணர்மேன் தலைமையில் பாஞ்சாலம்குறிச்சி கோட்டையை தகர்க்கும் திட்டமத்தை உருவாக்கி,. கேர்னல் கொலினிஸ் தலைமையில் கோட்டையின் நாலாபக்கமும் தாக்குதல் நடத்தினார்கள்.
வெகு சுலபம் என எதிர்பார்த்த கொலின்ஸ் தாக்குதலை சமாளிக்கமுடியாமல் பின்வாங்கி மேலும் ஆயுதங்கள் தேவை என செய்தி அனுப்பினார். இதைப்பயன்படுத்தி கட்டபொம்மன் கோட்டையை விட்டு தப்பிச்சென்றார். பெருத்த ஏமாற்றத்துக்குள்ளான வெள்ளையர் கட்டபொம்மன் தலைக்கு விலை வைத்தார்கள். தானாதிப்பிள்ளை முதலிய 16 பேரை கைது செய்து அழைத்துச்சென்றார்கள். கைது செய்யப்பட்ட தானாதிபிள்ளையின் தலையை வெட்டி பொது மக்கள் பார்வைக்கென பொது இடத்தில் வைத்தார்கள்

கட்டபொம்மன் புதுக்கோட்டை ராஜாவிடம் தஞ்சம் புகுந்தார். ஆனால் வெள்ளையரின் வஞ்சனையின் காரணமாக கட்டபொம்மன் சரணடையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
16.10.1799 ல் கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்குப்பிறகு, இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்ற இடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார். அவருடன் சேர்ந்து தங்கள் இன்னுயிரைத்தந்த வீர மறவர்கள் என்றென்றும் போற்றுதற்குறியவர்கள்.
கட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்கிய எட்டப்பன், எட்டயபுர ராஜாவாக ஆக்கப்பட்டு அவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. பாஞ்சாலஞ்குறிச்சி கோட்டை கொள்ளையடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.


ஆனால் வீரபாண்டியகட்டபொம்மன் என்ற மாமனிதனின் பெயர் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முப்பத்து ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்த அவரின் தியாகத்தை போற்றுவோமாக.
கட்டபொம்மனின் நினைவு என்றும் போற்றத்தக்க வகையில் கயத்தாற்றில் அவருடைய சிலையும், பாஞ்சாலஞ்குறிச்சியில் கோட்டையும் நிலைபெற்றுள்ளது.
விடுதலைக்கு விலையாக பாஞ்சாலஞ்குறிச்சி என்ற ஊரும் கோட்டையும் அன்று வெள்ளையர்களால் மண்மேடுகளாகப்பட்டது. இந்திய சரித்திரத்தில் ஜல்லியன் வாலாபாக் படுகொலை மிகப்பெரியதாக கருதப்படுகின்றது. அகைவிட பலமடங்கு பெரிய தியாகங்களை தமிழர்கள் இந்திய விடுதலைக்காக ஆற்றியுள்ளனர் என்பதற்கு பாஞ்சாலஞ்குறிச்சி ஒரு உதாரணமாகும்.