இந்தியாவின் கைகளினால் படுகொலை செய்யப்பட்ட‌ ஈழம்?

Category :

லங்கையில் 2009 மே மாதம் நடந்து முடிந்த இரக்கமற்ற மனிதப் பேரழிவை நிகழ்த்தியதில் இந்தியாவின் பங்கும் உண்டு என்பதை உல‌கமே அறியும். அப்பாவி தமிழ் மக்களின் உயிரை குடித்து உலக‌ நாடுகள் தன் பயங்கரவாத வெறியை தீர்த்துக்கொண்டன. நியாயமான‌ உரிமைப் போராட்டத்தை திட்டமிட்டு அழித்தனர். தமிழனுக்கு நாதி இல்லை என்ற ஒரே காரணத்தினால். போரின் உச்சகட்டத்தின் போது, உலகத் தமிழர்கள் ஒப்பாரி இட்டும், கெஞ்சியும் இந்தியா சிறிதும் இரக்கமில்லாமல்,கொடிய சிங்கள் அரசுக்கு மட்டுமே ஆதரவாய் இருந்ததை உலகத் தமிழினம் என்றுமே மறக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் முத்துக்குமார் என்ற தியாகத் தீ அனைவரையும் வீதியில் இறங்கி போராட வைத்தது. ஈழம் ஒன்றே தீர்வு என் ஒரே குரலில் உரக்கத் தெரிவித்தும், காங்கிரசு, கலைஞரை வைத்து விளையாட்டு காட்டியது. அதுதான் உண்ணாவிரதம்... . உட‌னடி போர் நிறுத்தம்... கலைஞரின் மக்கள் போர் "அய்யகோ" என தொடர்ந்தது... .

இப்போது போர் முடிந்து அரையாண்டு முடிந்தும், முள்வேலி த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் மீள‌ முடியாம‌ல் த‌விக்கின்ற‌ கொடூர‌த்தை இந்தியா உட்ப‌ட‌ உல‌க‌ நாடுக‌ள் ப‌ல, க‌ண்ணை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டு தான் உள்ளன. கொடிய‌ சிங்க‌ள‌ அர‌சுட‌ன். இல‌ங்கை அரசு தூத‌ர்,இந்தியாவிட‌ம் கொடுத்த‌ வாக்கு ச‌ன‌வ‌ரி 10,2010 க்குள் அனைத்து த‌மிழ‌ர்க‌ளும் சொந்த‌ இட‌த்திற்கு மீள் குடிய‌ம‌ர்த்த‌ப்ப‌டுவ‌ர் என‌; ஆனால் இன்னும் ஒரு ல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் வ‌தை முகாமுக்குள் தான் அடைப‌ட்டுக் கிட‌க்கின்ற‌ன‌ர். ஆனால் இந்தியா ஒன்றுமே செய்யாம‌ல்,வேடிக்கை பார்த்துக்கொண்டு... . த‌ங்க‌ள‌து வியாபாரத்தை அமோகமாக ஆர‌ம்பிக்க‌... . !!!

ஏதோ தற்போது மேற்குலக நாடுகள் கூட பேசுவது, புலம் பெயர் ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான போரட்டத்தினால் தான். இன்னமும் சேனல் 4(Channel-4 TV) ஒளிபரப்பிய கொடுமையான கொலைக்காட்சிகளை பெரிய அளிவில் நிறைய‌ நாடுகள் எடுத்துக்கொள்ளவில்லை.

ரத்தவாடை நீங்குவதற்குள் நிறைய நாடுகள் தங்கள் வியாபாரத்திற்கும், சுய‌நலத்திற்காகவும் இலங்கையில் நுழைய வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். இதனிடையே "ஜனாதிபதி" தேர்தலும் முடிந்து, மகிந்த தன் குடும்ப‌ ஆட்சியை காப்பாற்றிவிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகா-விற்கு ஆதரவு செய்து தமிழர்களின் வாக்கினை ஓரளவு பெற்றும் இருந்தனர்.

இதனிடையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அடிக்கடி இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இந்தியாவிடம் என்ன‌ பேச‌ப்போகிறார்க‌ள்? என்ன எதிர்பார்க்கிறார்கள்... . ? இந்தியா, இல‌ங்கை பிர‌ச்சினையில் நுழைந்த‌து... த‌ன் சுய நலத்திற்குத்தானே த‌விர‌ ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளின் மேல் உள்ள‌ உண்மையான‌ அக்க‌றையினால் அல்ல‌. த‌விர‌ இந்திய‌ நிறுன‌ங்க‌ளின் ஆதிக்க‌ம் அதிக‌ரித்து கொண்டே செல்வ‌தினால் இந்தியா, இல‌ங்கையிட‌ம் நியாய‌ம் பெற‌ முடியாது. சுமார் 100 பெரிய‌ தொழில் நிறுவ‌ன‌ங்க‌ள் வியாபார‌த்தை ஆர‌ம்பித்து விட்டன‌. க‌டைசியாக‌ நுழைந்த‌து ஏர்டெல்(AIRTEL). த‌ற்போது அர‌சின் பொதுத்துறை நிறுவன‌ங்க‌ளும் வ‌ரிசையில்... . ?

இந்தியாவின் தற்போதைய‌ முத‌லீடு சுமார் 400 மில்லிய‌ன் டால‌ர்-க்கு மேல். ஆகையினால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் இந்தியாவை ந‌ம்பாம‌ல், த‌ம்மை அடுத்த‌ க‌ட்ட‌ எழுச்சிக்கு த‌யார் செய்து கொள்ள‌ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். இதில் புலம் பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் ப‌ங்கு அதிக‌ம் இருக்கும். இனி "த‌மிழ் ஈழ‌ம்"என்ப‌து மக்களின் எழுச்சியான‌ அர‌சிய‌ல் போர‌ட்ட‌த்தினால் ம‌ட்டுமே... சாத்திய‌ம்.

இந்தியாவின் வெளிவுறவு கொள்கை என்பது... சுயநலத்தினால் பிணைந்தது. ஒரு பக்கம் மக்கள் ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய பேசுவார்கள்... ஆனால் செயல் நேர்மாறானது... ஜனநாயகத்தை மிதிக்கும் 'மியான்மார்" நாட்டுடன் வியாபார நெருக்கம்... சூடானில் கச்சா எண்ணைக்காக கூட்டு, நேபாள‌ ம‌ன்ன‌ராட்சியை தாங்கிய‌து என உதாரண‌ங்கள் நிறைய‌.

இனியாவது ஈழத்தமிழர்கள், உலகமெங்கும் பரவிய தமிழர்கள் விழித்துக்கொள்ள‌ வேண்டும். உலகத் தமிழர்கள் ஒன்று படவேண்டும். தமிழக அரசியல்வாதிகளிடம் கையேந்தாமல் அடித்தட்டு மக்களிடம் செல்ல வேண்டும், ஏனெனில் அவர்கள் தான் உண்மையானவர்கள். ஈழத்தின் மேல் பாசம் கொண்டவர்கள்.

ஆக அரசியல் சாணக்கியத்தை எதிரிகளிடமிருந்தே படித்தாக வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் உள்ள‌ன‌ர் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள்.


நன்றி:கீற்று
மீள் பிரசுரம்-எண்ணத்துப்பூச்சி

8 comments:

Anonymous said...

நல்லாத்தான் எழுதரீங்க. இதையே ராஜீவை போட்டு தள்ளும் முன் கொஞ்சம் யோசிச்சிருக்கணும்

Mugundan | முகுந்தன் said...

அனானி வணக்கம்,

மனசாட்சியுடன் எழுதுங்கள்.ஒரு ராஜிவ்-க்கு ஒரு
இனமே பழி தீர்க்கப்பட வேண்டுமா?
ராஜிவ் கொலையை நாம் யாரும் ஆதரிக்கவில்லையே?

Sathiyanarayanan said...

ரொம்ப நல்லவன் இராசீவுக்கு நடந்த கொடுமையைப் பார்த்தீங்களா தமிழ் மக்களே, நல்லவன் எல்லாம் இப்படி தான் சாவங்களா?

Sathiyanarayanan said...

ரொம்ப நல்லவன் இராசீவுக்கு நடந்த கொடுமையைப் பார்த்தீங்களா தமிழ் மக்களே, நல்லவன் எல்லாம் இப்படி தான் சாவங்களா?

வெத்து வேட்டு said...

"ரொம்ப நல்லவன் இராசீவுக்கு நடந்த கொடுமையைப் பார்த்தீங்களா தமிழ் மக்களே, நல்லவன் எல்லாம் இப்படி தான் சாவங்களா?"

then Gandhi/Martain Luther King/Indra Gandhi/Jesus/John F Kennedy are all bad too??? :) :) :)

Rajiv was killed by a cowardic Praba and the people who failed to control him paid the price.
that is all

Sathiyanarayanan said...

/*then Gandhi/Martain Luther King/Indra Gandhi/Jesus/John F Kennedy are all bad too??? :) :) :)
*/

இவங்க எல்லாம் நல்லவங்க எப்படி உனக்கு தெரியும்

/*Rajiv was killed by a cowardic Praba and the people who failed to control him paid the price.
that is all*/

உங்க இராசீவ் ரொம்ப வீரம் நிறைந்தவறோ, வரலாறு படிங்க சார்

Sathiyanarayanan said...

/*then Gandhi/Martain Luther King/Indra Gandhi/Jesus/John F Kennedy are all bad too??? :) :) :)*/

இவங்க எல்லாம் நல்லவங்கன்னு உனக்கு எப்படி தெரியும்

/*Rajiv was killed by a cowardic Praba and the people who failed to control him paid the price.
that is all*/

உங்க இராசீவ் ரொம்ப வீரம் நிறைந்தவறோ, வரலாறை படிங்க சார்

Jack Hiedler said...

இராசீவ் கொலையல்ல ,
மரண தண்டனை ...

இராசீவ் கொலைக்கு காரணம் பிரபாகரன் என்றால்,
ஏன் ஒரு தேசத்தின் பிரதமரை இராணுவ அணிவகுப்பின்போது தலையில் அடித்த சிங்கள இராணுவ வீரன் தண்டிக்கப்படவில்லை.

கையாலாகாத இந்தியம்,
மானங்கெட்ட இந்தியன் . . .
எடுத்தார் கைப்பிள்ளையாய் தமிழன் !!

@எண்ணத்துப்பூச்சி : " இந்தியாவின் கைகளினால் படுகொலை செய்யப்பட ஈழம் ? "
- என்ன ஐயா கேள்விக்குறி ??
அதான உண்மை . . .

Post a Comment

கருத்தைப் பகிர: