பவானிக்கு பசிக்குதாம்?

Category :

மிழ்த்திரைப்பட  உலகின் அற்புதமான‌
படமான "உதிரிப்பூக்கள்" திரைப்படத்தில்
வரும் சாதாரண வசனம்....வார்த்தை.
ஆனால் திரையில் பார்க்கும் போது, நம்
கண்ணீர் கூட திரையை பார்ப்பதை தவிர்க்க முடியாது.

"எந்திரன்" வீடியோ விளையாட்டை பாதி பார்த்துவிட்டு,மீதி நேரத்தில் "உதிரிப்பூக்கள்" பார்த்தேன்.பல ஆண்டுகளுக்கு பிறகு
பார்க்க நேர்ந்தது.அம்மா என்ற அற்புதமான உருவம்
மறைந்தால், குழந்தைகள் படும் துயரை மிகச் சரியாக‌
இயக்குனர் மகேந்திரன் காண்பித்திருப்பார்.ஒரு கொடுமையான‌
மனிதனாக வலம் வரும் "விஜயனின்" நடிப்பு அற்புதமானது.

திரைநாயகி "அசுவினி" இயல்பாக நடித்திருப்பார், நோயாளியாகவும்
வாழ்ந்திருப்பார்.

அனைவரும் மறுபடியும் பார்க்க வேண்டிய படம்.குறிப்பாக "இளைய‌

தலைமுறையினர்" பார்க்க வேண்டிய அற்புதமான படம்.

படம் வெளியான ஆண்டு:1979
நடிகர்கள்: விஜயன்,அசுவினி,சரத்பாபு
இயக்கம்:மகேந்திரன்
இசை:இளையராஜா
ஒளிப்பதிவு:அசோக்குமார்

5 comments:

ஜாக்கி சேகர் said...

நிச்சயமாக தமிழில் மிகசிறந்த படங்களில் இந்த படத்தை சொல்லவேண்டும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.. எனக்கு தெரிந்து இந்த தளத்தில் வந்த முதல் சினிமா விமர்சனம் என்றும் அதற்கு காரணம் எந்திரன் பீவர் என்றும் என்னால் உணர முடிகின்றது.

அஹமது இர்ஷாத் said...

உங்கள் விமர்சனத்தை பார்த்தால் படம் பார்க்கனும்போல் தோன்றுகிறது..


"எந்திரன்" வீடியோ விளையாட்டை பாதி பார்த்துவிட்டு//

படிச்சவுடன் சிரித்துட்டேன் சார்..

எண்ணத்துப்பூச்சி said...

கருத்து பகிர்தலுக்கு நன்றி,ஜாக்கி & இர்ஷாத்.

ஜாக்கி:முதல் திரை விமர்சனம் தான்....படத்தில்
ஒன்றி போனதின் வெளிப்பாடு.

சீனு said...

இது தமிழில் சிறந்த படங்களில் ஒன்று. தலைப்பை பார்த்து திகைத்து பின் புரிந்தது இந்த பதிவு இந்த படத்தை பற்றி என்று.

என் பதிவு:

http://jeeno.blogspot.com/2006/05/blog-post_16.html

அ. பசுபதி said...

You've suggested a right movie at a right time.
- Devamaindhan

Post a Comment

கருத்தைப் பகிர: