அடையாளம் இழக்கும் தமிழன்?

Category :

தமிழர் திருநாள் “பொங்கல் விழா” தொலைக்காட்சி விழாவாக மாறிவிடுமோ எனக் கவலை கொள்ள வைக்கிறது.
தமிழனுக்கு தொடர்பில்லாத “தீபாவளி”யை தூக்கிவைத்து கொண்டாடும் தமிழன், தன் விழாவான பொங்கலை மறந்தது ஏன் என்று புரியவில்லை? தமிழன் தன் வரலாற்றை மறந்ததும் வேதனையான நிகழ்வாகும்.

இந்தி”யத்தினால் தமிழன் அடையாளம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் ,அவர்களின் மொழி,பண்பாடு அழியாமல் காப்பதுதான் நாகரிக மனிதனின் செயல்.
தமிழன் வேறு இனத்திற்கும், மொழிக்கும் எதிரி அல்ல.ஆனால் தமிழன் சொரணை அற்றவன் என்று அடித்தளத்தினை அழிக்க முனைந்தால் அது இந்தியா போன்ற கூட்டாட்சி அரசுக்கு நல்லதல்ல.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கூட தன் உற்சாகத்தை இழந்து கொண்டுள்ளதை அனைவரும் அறிவர்.

இந்த வருடம் பொங்கல் வாழ்த்து அட்டை வாங்க கடலூர், புதுச்சேரி என அலைந்தும் ஒரு சில அட்டைகளை மட்டுமே வாங்க முடிந்தது. அதுவும் வாழ்த்து ஆங்கிலத்தில் தான் இருந்தது. பார்த்தவுடன் நொந்து போனேன்… தமிழன் தன் உறவுக்கு அனுப்பும் வாழ்த்தும் ஆங்கிலத்தில்.

பத்து ஆண்டுகளுக்கு முன் சாலையெங்கும் விற்ற வாழ்த்து அட்டைகள் இன்று மறைந்துவிட்டன. கணணி உலகத்தில் அனைத்தும் மின் வாழ்த்தாய் அமைந்துவிட்டது என்றாலும் , வாழ்த்து அட்டைக்கு எதுவும் ஈடாகாது,வீட்டினர் அனைவரும் பார்த்து மகிழ வாழ்த்து அட்டையால் மட்டுமே முடியும்.
இதில் கொடுமை என்னவென்றால் காதலர் தினத்துக்கு ஏராளமான கடைகளின் வாழ்த்து அட்டை விற்கப்படுகிறது.

தமிழன் இனியும் தூங்கிக்கொண்டும், தொலைக்காட்சிக்கும் அடிமையாக இருந்தால்…..வரலாறு சிரிக்கும் நம் இனத்தைப் பார்த்து.

நம் பக்கத்து (தண்ணீர் தராத ) மாநிலமான கேரளாவின் மலயாளத்தினர் எப்படி திரு”ஓணம்”பண்டிகையை கொண்டாடுகின்றனர் எனப் பார்த்து அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

மதம்,சமயம் கடந்து தன் இனத்தின் விழாவாக மலயாளிகள் ஓனம் கொண்டாடும் போது நாம் ஏன் விமரிசையாக பொங்கலைக் கொண்டாட கூடாது?

அடுத்த ஆண்டாவது அனைத்து தமிழர்களும்(மதம் கடந்து) தமிழர் திருநாளைச் சிறப்பாக கொண்டாட முயற்சிப்போம்.

எழுத்து:எண்ணத்துப்பூச்சி
நன்றி:தமிழ்ச்சரம்.காம்

4 comments:

சமுத்ரா said...

good one...

Unknown said...

ஆமாம் இப்படி ஆரம்பித்ததுதான் தனி ஈழம் என்னும் கோஷம். இப்போது உலகத்தின் தமிழன் தொகையில் பாதியாய் குறைந்து போனோம். நமது தமிழக அரசியல் சித்து விளையாட்டு வீரர்கள் நம்மை இதில் உசுப்பேத்திவிட்டு பின்னர் நம்மையே இறையாண்மைக்கு எதிர் என்று சிறையில் அடைப்பார்கள் அல்லது நாம் கொத்து கொத்தாக செத்து மடிவதை நமீதா ஆட்டத்துடன் கொண்டாடுவார்கள் மற்றும் நாலு பேர் இதைச் சொல்லிக் கொண்டு நாலு கட்சிகளைத் தொடங்குவானுங்க. சும்மா இருங்கப்பா.

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

தலைவாதமிழன்தன்னையேஇழக்கத்
தயராகிவிட்டான்.தமிழனின் அடையாளச்சின்னமாக இருக்கும் பொங்கள் ஒரு செய்தியே அல்ல!தொலைக்காட்சி நிகழ்வுகள் சாரம்தான் நம் கலாச்சாரம்போலும்.
தீரன்சின்னமலை-செய்தி ஊடக்கப்பதிவிற்குகாக-டி.கே.தீரன்சாமி
http://theeranchinnamalai.blogspot.com/

Mugundan | முகுந்தன் said...

சமுத்ரா,கிணற்றுத்தவளை,தீரன்சாமி,

வருகைக்கும், கருத்து பகிர்தலுக்கும் நன்றி.

Post a Comment

கருத்தைப் பகிர: