தினத்தந்தி-யில் புரியாத (இந்தி) விளம்பரம்?

Category :

இன்றைய தினத்தந்தியில் ஒரு இந்தி மொழி விளம்பரம் வந்திருக்கிறது.
பொது மக்கள் நலன் கருதி வெளியிட்டது இந்திய தொடர்வண்டித் துறை
(ரயில்வேத் துறை) எனத் தோன்றுகிறது.

ஒவ்வொருவரும் ஒரு அடையாள அட்டையை தூக்கிப்பிடித்துக்
கொண்டு காட்சி தருகின்றனர்.இதில் கடவுச் சீட்டு,ஓட்டுனர் உரிமச்சீட்டு,
வாக்காளர் அடையாள அட்டை என அடங்குகிறது.

இது யாருக்கான விளம்பரம் எனத் தெரியவில்லை.தமிழக மக்களின்
மொழி தமிழ்தான்; இந்தியில் வெளியிட்டால் யாருக்குப் புரியப் போகிறது.?
ஏன் இந்த பொது விளம்பரத்தை ஆங்கிலம்,தமிழ் போன்ற புரியக் கூடிய
மொழியில் வெளியிடப்படவில்லை?

காசுக்காக ஏன் தினத்தந்தி புரியாத மொழியில் வெளியிட வேண்டும்.இந்த
விளம்பரம் பற்றி தினத்தந்தி ஆசிரியர் குழுவுக்கு தெரியுமா?"தமிழ் வெல்க" என்ற அடைமொழியை வைத்து வியாபாரம் செய்யும் தினத்தந்திக்கு இது சரியா?

இந்திய ரயில்வே துறையின் இந்த எதேச்சிகாரத்திற்கு குரல் கொடுங்கள்
தமிழர்களே? இந்தியில் விளம்பரம் செய்யும் போது உடன் மக்களுக்குப்
புரியும் மொழியிலும் இடச் சொல்லுங்கள்.

இது இந்திய தேசம், "இந்திதேசம்" அல்ல!

1 comments:

Anonymous said...

மிகவும் உண்மை. நம் மாநிலத்தை விட்டு வெளியே வந்தால்தான் தெரிகிறது.. இந்தி எந்த அளவுக்கு மற்ற மக்களை மாற்றி இருக்கிறது என. இங்கே கர்நாடகாவில் கன்னடம் தெரியவில்லையென்றால் கூட யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, ஆனால் இந்தி தெரியவில்லை என்றால் நீயெல்லாம் இந்தியனா என்ற கேள்வி கேட்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களிடமெல்லாம் இது குறித்து தெளிவாக்குவதற்குள் தாவு தீர்ந்துபோகிறது.

Post a Comment

கருத்தைப் பகிர: