11ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு-ஒரு பார்வை

Category :30-12-2012 அன்று  காலை சிதம்பரம் "அண்ணாமலைப் பல்கலைக்கழக" அரங்கில் நுழைந்தவுடன், சிறு அதிர்ச்சி உண்டானது. காரணம்  அரங்கில் சுமார் 50 பேர் தான் இருந்தனர். அதில் விற்பனையாளர்களும் அடங்கும். விழாவில் சுமார் 1000பேராவது இருப்பார்கள் என நம்பி இருந்தேன்.இணையத் தமிழனின் நேரடிப் பங்களிப்பு ஏன் இல்லை என்ற கேள்விக்கு பதில் அளிப்பது மிக கடினம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சரிவர ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.சரியான அளவில் விளம்பரப்படுத்தப் படவில்லை. மாணவர்களின் பங்களிப்பும் இல்லை.

அரங்கில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் மிக குறைவே.

மக்கள் கூடத்தில் 30-12-2012 அன்று காலையில் நடைபெற்ற நிகழ்வில்'' விக்கி காமன்சு" பற்றி தமிழ்ப்பரிதி அவர்கள் விளக்கமளித்தார். நல்ல தகவல்களை அறிய முடிந்தது.

அடுத்த மாநாட்டையாவது , மக்கள் பங்களிக்கும் வகையில் அமைத்தால் உபயோகமாக இருக்கும்.

0 comments:

Post a Comment

கருத்தைப் பகிர: