ஆம்! ஆப்கானிஸ்தான் நாட்டில் அது தான் நடந்துள்ளது. மறுபடியும் தலீபன்கள் ஆயுதத்தால்
மக்கள் ஆட்சியை வீழ்த்தியுள்ளனர்.
3லட்சம் அரசு இராணுவத்தை 75,000 தலீபன்கள் எப்படி வீழ்த்தினர் அதுவும் எந்த எதிர்ப்பும் இன்றி.
தலைநகர் காபுல் வீழ்ந்தவுடன் மக்கள் ஓடிய அவலத்தை பார்த்த கண்கள் அழுவதை தடுக்க இயலவில்லை.ஜனநாயகம் வீழ்ந்தால் கூட பரவாயில்லை, அதை காக்க மக்களும் தயாரில்லை என்பதும் உண்மை.
இந்த ஆட்சி மாற்றம் இந்தியாவுக்கும் தலைவலிதான். தீவிரவாதம் மறுபடியும்
வேறுவிதமாக தலைதூக்கும்.
ஆக மக்கள் விரும்பினால் தான் மக்களாட்சி, இல்லையெனில் அடிமை வாழ்க்கை தான்.
ஆப்கன் பெண்கள் நிலைதான் இனி கேள்விக்குறி?
ஆப்கன் எதிர்காலமே கேள்விக்குறிதான்??
மக்கள் கிளர்ச்சி இன்றி, இனி மாற்றம் இல்லை. ஜனநாயகப் போராட்டம் இனி மக்கள்
விரும்பினால் தான், இல்லையெனில் அடிமை வாழ்க்கை தான்.???
Photo credits: Google