வீட்டைக் கொளுத்தலாமா?...செல்ல(லா) பதிவர்களே என்ன
ஆயிற்று உங்களுக்கு....சில வாரங்களாக தமிழ்மணம் அழுகிய
மணத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும்.
நிறைய பேர் வேடிக்கை பார்த்தோம்,ஒப்புக்கொள்கிறோம்.,
பதிவைத்தாண்டி ஒரு வார்த்தைப் போர் நடந்து கொண்டிருந்ததினால்
நிறைய பேர் அமைதி காத்திருக்கக் கூடும்.நிறைய பேர் காயப்
படாததினாலும் அமைதியாய் இருந்திருக்கக் கூடும்.
இப்போது என்ன '
'குடி'' முழுகிப் போய்விட்டது...விடைதான்
பெற்றாகிவிட்டதே...பின்
ஏன் விடை பெறவேண்டும் பதிவுலகிலிருந்து?.
வாருங்கள் சகோதர,சகோதரிகளே பதிவைப் போடுங்கள்...படிப்பவர்
படிக்கட்டும்....படிக்காதவர் பார்க்கட்டும்...?
நம் ஊரிலே ,பக்கத்திலேயே ''முள்ளமாரி,முடிச்சவிக்கி,அயோக்கியன்,
விபச்சாரன்,விபச்சாரி,மென்பொருள் திருடன்,பெண்பொருள் திருடன்,
அரசியல் திருடன் போன்றோருடன் வாழவில்லையா நாம்.இன்னும்
சில கொடிய விலங்குகள் கூட வாழப் பழகிக் கொண்டுள்ளோம்.
அதுமாதிரி இந்த இணையத்திலும் சில
''மன நோயாளிகள்'' இருக்கின்றனர்.
எங்கேயாவது தன் உளரலை அவர்கள் கொட்டி விட்டுப் போகட்டுமே.....
படித்தவன் எனக் கூறிக்கொள்வபவன் எத்தனை பேர் பண்புடன்
நடந்து கொள்கிறான்...இதில் பெண்களும் விதிவிலக்கல்ல...
நாம் அன்றாடம் பார்க்காத,கேட்காத அசிங்கங்களா....இந்த வலைப் பூக்களில்
புதிதாக பார்க்கிறோம்..பின் ஏன் இங்கே மட்டும் கூச்சல்?...,
சென்னை பதிவர் பட்டறை-2007 க்கு சென்றுவந்த பின் தான் புரிந்தது....
நிறைய தமிழ்மண பதிவர்கள் குழுவாக செயல்பட்டது...அதனால் ''அல்லல்''
படுவது.நிறைய பதிவர்கள் தங்களுக்குள் தொலைபேசி,மின்னஞ்சல்,சாட்,
போன்ற ''முதலைக்குள்'' மாட்டிக் கொண்டு இருந்ததை.இதுதான் அடுத்தவனை காட்டிக் கொடுக்க ஏதுவாக இருந்திருக்கும்.
இந்த ''குழு சக்தி'' தான்....எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என நினைக்கிறேன்.கருத்து திணிப்புக்கும்,அடாவடிக்கும் இதுதான் ''தீ''யாக
இருந்திருக்கும்.மாற்றுக் கருத்தை அசிங்கமாக ஆராய தூண்டியது...அசிங்கத்தை கிளர தூண்டியது இந்த தேவையற்ற உறவுகள் தான் என நினைக்கிறேன்.
இந்த கூட்டத்தினர் ஒரு காலத்தில் ஒட்டி,உறவாடியும் வந்துள்ளனர்.
ஆகவே தமிழ் வலைப்பூக்களின் உயிர்களே வாருங்கள்., பழதை மறப்போம்.
''புதிய பயிரிடுவோம்....???
கடைசி வெறி:இந்த வலைபூக்களினால் அடித்தட்டு மக்களுக்கு ஒரு பயணும் இல்லை.ஆனால் நம் அனுபவங்கள் பல இளைஞர்களுக்கு
பாடமாகவாவது பயன்பட்டாலே
பெரிய வெற்றி தான்.
தமிழில் ஒரு இரண்டாயிரம் வலைபூக்களில் ,சில நூறுதான் உயிரோடு
இருக்கும் என நினைக்கிறேன்.இந்த நூறில் ஒரு இருபது பேர் கும்மி அல்லது
குழு பதிவர்கள்,புதிதாக வந்தவர்கள் முகப்பை பார்த்தவுடன் ஓட்டம்
பிடித்தோர் எத்தனை பேரோ???
சகோதர ,சகோதரிகளே தமிழுக்காவாவது, நாம் நம் பயணத்தை
தொடரலாமே...!!!
''வலைப்பூக்கள் வாழட்டும்
நறுமணம் இல்லையென்றாலும்,
வசந்தம் ஒரு நாள் வீசும்
அதன் வாழ்க்கையை மாற்ற?"