ஹேப்பி பொங்கல்!

Category :

ஒரு வழியாக தை பிறந்து,பொங்கல் விழாக்களும்
கழிந்து விட்டன.
தை முதல் நாள் அன்று காலையிலேயே கடலூரை வலம் வந்தேன்.நிறைய கோலங்களை காண முடிந்தது...அழகழகாய்...."Happy Pongal"என்ற வாழ்த்துகளுடன்.தமிழனின் திருநாளைக் கூட ஆங்கில வாசனையுடன் கொண்டடுவது வேதனையாக இருந்தது.நம் பெயருக்குமுன்னால் தொங்கிக்கொண்டு இருக்கும் ஆங்கில தலை எழுத்தைப் போல.

முன்பு போல் பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் சுத்தமாக குறைந்து போய்விட்டது.தபால் துறையினருக்கு பெரும் வருமானம் குறைந்திருக்கும்.ஏனென்றால் அனைவரும் குறுஞ்செய்தி (SMS) மூலம் வாழ்த்தை முடித்துக் கொண்டுவிட்டனர்.

மாட்டுப் பொங்கல் அன்று கடலூர் பகுதியில் நிறைய இடங்களில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இரு தின‌ங்க‌ள் க‌ழித்து "ஆற்றுதிருவிழா"வும் இனிமையாக‌ நடந்தேறின‌‌.பெண்ணையாற்றின் க‌ரையில் வெளியூர், உள்ளூர் சாமிக‌ளின் தீர்த்த‌வாரி‍யும் ந‌டைபெற்ற‌ன‌.

க‌டைசி வெறி:

இப்போதெல்லாம் புதிய‌ தமிழ் திரைப‌ட‌ங்க‌ளின் இடைவேளை ஆங்கில‌த்தில் தான் INTERMISSION செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌.த‌மிழ‌ர்க‌ளூக்கு இடைவேளை புடிக்காதோ என‌த் தெரிய‌வில்லை?.

ஆங்கில புத்தாண்டும்,நம் ஆடம்பர அலங்கோலமும்?

Category :

இன்று "நியு இயர்".NEW YEAR ஆரம்பம்!!...

ஆமாம்...ஜனவரி ஒன்று என்பது உலகெங்கும் கொண்டாடப்படும் தினம் தான்.ஆனால் தமிழன் ,ஆங்கில ஒன்னைக் கூட‌அசிங்கமாய் கொண்டாடக் கற்றுக் கொண்டு விட்டான்.

நேற்று இரவே 12 மணிக்கு வெடிச்சத்தத்துடன் நம்ம மாரியாத்தா கோயிலில் கூட புத்தாண்டை ஆரம்பித்தனர்.விடிந்தவுடன் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று ஆண்டவனுக்கும் ஹேப்பி நியு இயர் சொல்லி மகிழ்ந்தனர்.
இந்தமாதிரியான கேளிக்கை கூத்துகள் சில வருடங்களாகத்தான் வேர் விட்டுக் கொண்டுள்ளன.

எங்கள் பக்கத்து தண்ணீர் தேசத்தில்(புதுச்சேரி தான்!!!) இரவு முழுதும் நட்சத்திர ஹோட்டல்களில்(விடுதி)....ஆட்டமும்,பாட்டுமுமாக‌ அரங்கேறி உள்ளன.
த‌மிழனின் அடையாளங்கள்,ஆட்டம் கொண்டு இருப்பதை கண்கூடாக காண முடிகிறது.

தமிழினமும் விளம்பர யுகத்தில் மாட்டிக்கொண்டு விடியலைத்தொலைத்து கொண்டிருக்கிறதோ என ஐயமாக உள்ளது
.