இந்தியா செய்த தமிழினப் படுகொலை?

Category :

என்னுள் இருந்த இந்தியன் படுகொலை செய்யப்பட்டு விட்டான்.இனி நான் என்ன தான் "இந்தியன்" என்று கூறினாலும் அது நடிப்பாகத்தான் இருக்கும்.

என்நாடு செய்த பாவத்தில் எனக்கும் பங்கு உண்டு.தமிழினம் என்று வேண்டாம்,மனித இனம் என்ற அடிப்படை கரிசனம் இல்லாமல் நடந்து கொண்ட இந்தியா, அதற்கான தண்டனையை பெற்றே தீரும்.
நியாய, தர்மத்தை பேச இந்தியாவுக்கு இனி அருகதை இல்லை.26 ஆம் தேதி நடந்த ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் கூட‌ நியாயத்தை பேசாமல், இலங்கை பயங்கரவாத அரசின்" கைப்புள்ள" யாக நடந்து கொண்டது கேவலம்.
இந்தமாதிரி தவறான வெளியுறவு கொள்கைகளினால் தான் மக்களின் ஆதரவை பல நாடுகளில் இந்தியா இழந்தது.குறிப்பாக‌ நேபாளம்,பங்களாதேஷ்...அரசாங்கம் செய்யும் தவறை சுட்டிகாட்ட வேண்டிய பொறுப்பு இந்தியா போன்ற ஜனநாயக‌ நாட்டுக்கு உண்டு.ஆனால் இந்தியா தவறான அரசு அதிகார‌வர்க்கத்தினால் தவறான கொள்கைக்கு வழி அமைத்து மீறவும் செய்கிறது.

உதாரணம்:
1.மியான்மார் உடன் உறவு‍‍‍- அந்த அரசு அப்பட்டமான மனித உரிமை மீறல் செய்தும்,நம்மால் நியாயத்தைக் கூட கேட்க இயலாமல் உள்ளோம்.
2.திபெத்-இந்தியாவை நம்பி வந்தவர்களுக்கு இன்னும் ஒரு படிமுன்னேற்றம் கூட இல்லாமல் அவர்களின் வாழ்க்கையை ஏமாற்றியது.
3.சூடான்-அங்கு தர்பூரில் இரு மாபெரும் இனப்படுகொலை நடத்திய அரசுடன் ''வியாபாரம்" செய்வது....ஓ.என்.ஜி.சிஅரசு நிறுவனம் நிறைய மில்லியன் கொட்டியுள்ளது.(குருடு ஆயில்=க்காக)

கடைசி வெறி:

இந்தியா மூச்சுக்கு மூச்சு "இறையான்மை" பற்றி பேசுகிறது.அதே இறையான்மையை சொல்லி ஒரு "கொலைஞரும்" மூத்திரம் விடுகிறார்.பதவி பெற பல்லக்கில் செல்கிறார், புதுடில்லிக்கு.ஆனால் படுகொலை நடக்கும் போது "கடிதம்" எழுதுகிறார்.
நேற்று வட கொரியா தன் சொந்த நாட்டில் , சொந்த பாதுகாப்புக்காக‌ அணு ஆயுத பரிசோதனை செய்த போது, முதல் ஆளாய்கண்டணம் தெரிவிக்கும் இந்தியாவுக்கு அடுத்தவன் நாட்டில் தலையிடுவது "இறையான்மை" மீறிய செயல் என ஏன் தெரியவில்லை?.
இந்தியா இரட்டை வேடத்துடன்,இரட்டை நாக்கையும் வைத்துக்கொண்டு பேசுவது அநியாயம், அக்கிரமம்.