இந்த வருடமும் சிற்பி அவர்களின் பிறந்த நாள் விழா (25-12), அவரின்
அன்பு தோழர்களினால் புதுவை அருகில் அமைந்துள்ள "ஆரோவில்" நகரில்
நடத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினராக "தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்
செயலாளர் தோழர் இராமகிருட்டிணன் கலந்து கொண்டார்.
புதுவை நகர தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர். மதிய உணவு அறுசுவையுடன்
பரிமாறப்பட்டது. பின்னர் சிற்பி அவர்களின் மந்திரவித்தை "மேஜிக்" நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வு முழுநாளும் இனிமையான முறையில் நடந்தேறியது.தோழர்கள் அனைவரும் சிற்பி இராசனின் மக்கள் பணி சிறக்க வாழ்த்தினர்.