கடிதம் கலைஞருக்கு எழுதியது!

Category :

உங்கள் பொய்களைச்
சுமந்து செல்ல முடியவில்லை ;


கடிதம் போடுகிறீர்,போய்ச் சேருமிடமோ
புதுடில்லி குப்பைத் தொட்டி.

தயவுசெய்து அடுத்தக் கடிதத்தை
"சிங்களவனுக்கு" அனுப்புங்கள்,
பொய்யுடன் பொசுங்கிப் போகிறேன்?

பூக்கிறது புதிய நாடு-தென் சூடான்

Category :

உலகின் புதிய நாட்டை உருவாக்கி சாதனை படைத்த சூடானிய மக்கள் மிகுந்த
மகிழ்ச்சியில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.


கடந்த 09-01-2011 முதல் 15-01-2011வரை நடந்த வாக்குப்பதிவில் 98%பேர் தனிநாட்டுக்கான வாக்கை செலுத்திருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தென் சூடானுக்கு ஒரு கண்ணீர்க் கதை உண்டு.எப்படி ஈழத்தமிழன்
பிரிட்டிசு காலனி ஆதிக்கத்தினால் பாதிக்கப்பட்டானோ அவ்வாறு. ஆப்ரிக்காவின் பெரிய நாடு சூடான்.வடக்கில் முசுலிம் மதத்தினர் பெரும்பான்மையாகவும்
தெற்கில் கிருத்துவ மதத்தினரும் வாழ்கின்றனர்.


ஆங்கிலேயர் தன் வசதிக்காக தெற்கு, வடக்கு சூடானை இணைத்து ஆட்சி
புரிந்து விட்டு,போகும்போது வடக்கு சூடானிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து
விட்டு வெளியேறினர்.அப்போதே தென் சூடானிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும்
ஆளுமை இன்மையால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.ஏனெனில் இரு சூடானுக்கும் மொழி,பண்பாடு மற்றும் கலாச்சாரம் வேறுபட்டது.

அதன்பின் நடந்தது முப்பது வருட உள்நாட்டு யுத்தம்....லட்சக்கணக்கான மக்கள் பலிகடா ஆயினர்.

இங்கிலாந்து நாட்டின் காலனியாதிக்கத்தில் சூடான் இருந்தது சுமார் 57 ஆண்டுகள்.400 மொழிகளுக்கு மேல் பேசப்பட்டு வந்தாலும் பெரும்பான்மையானோர் பேசுவது அரபி மற்றும் ஆங்கிலம் மட்டுமே.சூடான் விடுதலை பெற்றது 01- சனவரி 1956.

கடைசியாக 2002 ம் ஆண்டு ஏற்பட்ட சமாதான பேச்சுவார்தையின் முடிவாக
மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த உடன்பாடு ஏற்பட்டது.ஐ.நா வின் சிறப்பு குழுவினரால் இந்த வாக்கெடுப்பு சனவரி மாதம் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது கடைசி வெற்றி அறிவிப்புக்காக காத்திருகின்றனர்.

தென் சூடானின் சுதந்திர அறிவிப்பு வெளியிடும் நாள் 14-பிப்ரவரி- 2011. அன்று
உலகின் புதிய நாடாக உலா வரப்போகிறது தென் சூடான்.

வாழ்த்துகள் தென் சூடான்.

நன்றி:கீற்று.காம்,எழுத்து:எண்ணத்துப்பூச்சி
படம் உதவி:AFP

அடையாளம் இழக்கும் தமிழன்?

Category :

தமிழர் திருநாள் “பொங்கல் விழா” தொலைக்காட்சி விழாவாக மாறிவிடுமோ எனக் கவலை கொள்ள வைக்கிறது.
தமிழனுக்கு தொடர்பில்லாத “தீபாவளி”யை தூக்கிவைத்து கொண்டாடும் தமிழன், தன் விழாவான பொங்கலை மறந்தது ஏன் என்று புரியவில்லை? தமிழன் தன் வரலாற்றை மறந்ததும் வேதனையான நிகழ்வாகும்.

இந்தி”யத்தினால் தமிழன் அடையாளம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் ,அவர்களின் மொழி,பண்பாடு அழியாமல் காப்பதுதான் நாகரிக மனிதனின் செயல்.
தமிழன் வேறு இனத்திற்கும், மொழிக்கும் எதிரி அல்ல.ஆனால் தமிழன் சொரணை அற்றவன் என்று அடித்தளத்தினை அழிக்க முனைந்தால் அது இந்தியா போன்ற கூட்டாட்சி அரசுக்கு நல்லதல்ல.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கூட தன் உற்சாகத்தை இழந்து கொண்டுள்ளதை அனைவரும் அறிவர்.

இந்த வருடம் பொங்கல் வாழ்த்து அட்டை வாங்க கடலூர், புதுச்சேரி என அலைந்தும் ஒரு சில அட்டைகளை மட்டுமே வாங்க முடிந்தது. அதுவும் வாழ்த்து ஆங்கிலத்தில் தான் இருந்தது. பார்த்தவுடன் நொந்து போனேன்… தமிழன் தன் உறவுக்கு அனுப்பும் வாழ்த்தும் ஆங்கிலத்தில்.

பத்து ஆண்டுகளுக்கு முன் சாலையெங்கும் விற்ற வாழ்த்து அட்டைகள் இன்று மறைந்துவிட்டன. கணணி உலகத்தில் அனைத்தும் மின் வாழ்த்தாய் அமைந்துவிட்டது என்றாலும் , வாழ்த்து அட்டைக்கு எதுவும் ஈடாகாது,வீட்டினர் அனைவரும் பார்த்து மகிழ வாழ்த்து அட்டையால் மட்டுமே முடியும்.
இதில் கொடுமை என்னவென்றால் காதலர் தினத்துக்கு ஏராளமான கடைகளின் வாழ்த்து அட்டை விற்கப்படுகிறது.

தமிழன் இனியும் தூங்கிக்கொண்டும், தொலைக்காட்சிக்கும் அடிமையாக இருந்தால்…..வரலாறு சிரிக்கும் நம் இனத்தைப் பார்த்து.

நம் பக்கத்து (தண்ணீர் தராத ) மாநிலமான கேரளாவின் மலயாளத்தினர் எப்படி திரு”ஓணம்”பண்டிகையை கொண்டாடுகின்றனர் எனப் பார்த்து அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

மதம்,சமயம் கடந்து தன் இனத்தின் விழாவாக மலயாளிகள் ஓனம் கொண்டாடும் போது நாம் ஏன் விமரிசையாக பொங்கலைக் கொண்டாட கூடாது?

அடுத்த ஆண்டாவது அனைத்து தமிழர்களும்(மதம் கடந்து) தமிழர் திருநாளைச் சிறப்பாக கொண்டாட முயற்சிப்போம்.

எழுத்து:எண்ணத்துப்பூச்சி
நன்றி:தமிழ்ச்சரம்.காம்