தினத்தந்தி-யில் புரியாத (இந்தி) விளம்பரம்?

Category :

இன்றைய தினத்தந்தியில் ஒரு இந்தி மொழி விளம்பரம் வந்திருக்கிறது.
பொது மக்கள் நலன் கருதி வெளியிட்டது இந்திய தொடர்வண்டித் துறை
(ரயில்வேத் துறை) எனத் தோன்றுகிறது.

ஒவ்வொருவரும் ஒரு அடையாள அட்டையை தூக்கிப்பிடித்துக்
கொண்டு காட்சி தருகின்றனர்.இதில் கடவுச் சீட்டு,ஓட்டுனர் உரிமச்சீட்டு,
வாக்காளர் அடையாள அட்டை என அடங்குகிறது.

இது யாருக்கான விளம்பரம் எனத் தெரியவில்லை.தமிழக மக்களின்
மொழி தமிழ்தான்; இந்தியில் வெளியிட்டால் யாருக்குப் புரியப் போகிறது.?
ஏன் இந்த பொது விளம்பரத்தை ஆங்கிலம்,தமிழ் போன்ற புரியக் கூடிய
மொழியில் வெளியிடப்படவில்லை?

காசுக்காக ஏன் தினத்தந்தி புரியாத மொழியில் வெளியிட வேண்டும்.இந்த
விளம்பரம் பற்றி தினத்தந்தி ஆசிரியர் குழுவுக்கு தெரியுமா?"தமிழ் வெல்க" என்ற அடைமொழியை வைத்து வியாபாரம் செய்யும் தினத்தந்திக்கு இது சரியா?

இந்திய ரயில்வே துறையின் இந்த எதேச்சிகாரத்திற்கு குரல் கொடுங்கள்
தமிழர்களே? இந்தியில் விளம்பரம் செய்யும் போது உடன் மக்களுக்குப்
புரியும் மொழியிலும் இடச் சொல்லுங்கள்.

இது இந்திய தேசம், "இந்திதேசம்" அல்ல!

புரட்சியாளனான ஒரு வலைப்பதிவர்?

Category :

இப்போது நடந்துவரும் எகிப்து மக்களின்
எழுச்சியின் ஒரு பங்கில், ஒரு வலைப்பதிவரும் உண்டு.


எதேச்சிகார அரசை வீழ்த்த வீறுகொண்ட ஒரு இளைஞன்
தான் கானிம்(Wael Ghoneim), கூகுள்(Google Inc, Dubai) நிறுவனத்தின்
துபாய்(Dubai) பகுதி மேலாளர்.போராட துபாயிலிருந்து, கெய்ரோ(Cairo) போனவன்.

வாங்கும் சம்பளத்தில் சொகுசு வாழ்க்கைக்கு மட்டும் ஆசைப்படாமல்
தன் மக்களின் எழுச்சிக்கும் பாடுபடத் துணிந்த ஒரு மாவீரன்.
ஒரு வாரம் எகிப்து சிறையில் அடைக்கப்பட்டு, மனித உரிமை இயக்க
போராளிகளினால் விடுவிக்கப்பட்டவர்.

கானிம் , நீ ஒரு உண்மைப் போராளிடா.உன்னைப் போற்றுகிறோம்,
ஒரு வலைப்பதிவனாய் பெருமிதம் கொள்கிறோம்.

நன்றி:அல்மசுரிஅல்யும்.காம்
தகவல் மூலம்:www.almasryalyoum.com

மறக்கக் கூடாதவர்கள்:பாவாணர்

Category :

மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
தமிழின் சிறப்பையும், தொண்மையையும்,மேன்மையையும் சிறப்புற பரப்பியவர் தேவநேய பாவாணர் அவர்கள்.

அய்யா அவர்களின் அகர முதலி தொகுப்பு என்றுமே அவரின் பெயர்
சொல்லும் அரும் படைப்பாகும்.அவரைப் போற்றும் நிகழ்வாகத் தான் சென்னை
அண்ணா சாலையில் " தேவநேய பாவாணர் அரசு பொது நூலகம்" அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய இளைஞர் சமுதாயம், பாவாணரையும் அவர் தமிழுக்கு ஆற்றிய
பணிகளையும் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

மொழிஞாயிறு தேவநேயப்பாணர் பற்றி முழுமையான தகவல்களைக் கீழ்க்கண்ட
தளங்களில் காணலாம்;

http://www.devaneyam.org/
http://leaders.senthamil.org/devaneya_pavanar.htm
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D


படம் உதவி:
கூகுள் படம்

#tnfisherman- 6605 எதிர்ப்பு தானா? த்தூ...

Category :

மறுபடியும் சூடு ,சொரணையற்ற இனம் "தமிழினம்" என்பதை
நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

நம் மீனவன் செத்தும் நமக்கு உணர்வு வரவில்லையெனில்
நாம் பிணம் தான்;நடமாடும் பிணம்.

வீதிக்குத் தான் வர முடியவில்லை; இணையத்தில் கூடவா நம்மால் கூட முடியாது.


ஒரு வாரமாகியும் பெட்டிசன் ஆன்லைன் (www.petitiononline.com/TNfisher/petition.html மூலம் பதிவான எதிர்ப்பு வெறும் 6605 தான் ;#tnfisherman ட்வீட்டுகள்(Tweets) வெறும் 6000 சொச்சம் தான்.


தமிழகத்தில் சுமார் 20லட்சம் பேர் தினமும் இணையம் பயன்படுத்தியும் உணர்வு கொஞ்சம் கூட இல்லை.எகிப்தை பார்த்து பிரமிக்கிறோம்;ஒரு பெண் அனுப்பிய
செய்தி தான் அங்கு தீப்பொறியானது.

ஆனால் இங்கு சவத்தை அனுப்பியும், கோபம் வரவில்லையெனில் நாம் "மனிதர்களில்லை,மனிதர்களில்லை".


தரவு உதவி:
http://www.whatthetrend.com/, http://www.wthashtag.com/ ,
www.twitter.com/tnfishermen , http://www.petitiononline.com/

யார் தான் குற்றவாளி- தி.மு.க-வின் புதுமொழி?

Category :

கைது செய்யப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
ஊழல் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விட மாட்டார்,

கொலை செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
திருட்டு செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,

பொய் சொன்னதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
வன்புணர்வு (கற்பழிப்பு) செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,

விபச்சாரம் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
குற்றம் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,

அப்ப யார் தான் குற்றவாளி?
கேள்வி கேக்குற மக்கள் தான்?

படம் உதவி:டூன்பூல்.காம்,பதிவர் சதிசு,கூகுள் படம்