கடலூரின் 20,000 கோடி கனவு - நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேசன்?

Category : ,

நாகார்ஜுனா நிறுவனத்திலிருந்து நான் விலகி, இரண்டு மாதம் ஆகிவிட்டது. நாகார்ஜுனா சுத்திகரிப்பு நிறுவனத்தால் (Nagarjuna Oil Corporation Limited) கடலூர் மாறப்போகிறது, கடலூர் மக்கள் பயன் பெறப்போகிறார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. ஒரு அருமையான திட்டம் காலதாமதத்தினால்  ஏராளமானோர் நொந்து போய் உள்ளனர்.


கட்டுமானப்பணி, நிறுவனப் பணிகள், பாதியிலேயே நிற்பதினால் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது. இதில் பணிபுரியும் பொறியாளர், மற்றும் நிர்வாக பணியாளர்கள் வெளியேறிய வன்னம் உள்ளனர்.


கடந்த 14 வருடங்களாக இதோ, அதோ வந்துவிடும், இன்னும் சில மாதங்களில் வந்துவிடும் என்ற நம்பிக்கையில்  காலம் சென்று கொண்டிருக்கிறது.
இதன் சிறப்பம்சமே, இதன் அமைப்புத்தான், கடலோரத்தில் அனைத்து வசதிகளுடன் இருக்கும் ஒரு அருமையான நில வடிவமைப்பு.நெய்வேலிக்கு அடுத்தபடியாக அதிக
பணியாளர்களைக் கொண்ட நிறுவனமாக இது உருவாகலாம்.


இங்கு சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெய் மூலம் டீசல், பெட்ரோல், சமையல் வாயு(LPG) சுற்றி உள்ள அனைத்து மக்களுக்கும் உடனடியாக கிடைக்க இயலும்.


இன்னும் காலம் கடந்தால் , நிறைய இழப்பு ஏற்படும்…..கடலூர் காத்துக் கொண்டிருக்கிறது.

படம் உதவி:கூகுள், www.nocl.co.in & www.hydrocarbons-technology.com


11ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு-ஒரு பார்வை

Category :



30-12-2012 அன்று  காலை சிதம்பரம் "அண்ணாமலைப் பல்கலைக்கழக" அரங்கில் நுழைந்தவுடன், சிறு அதிர்ச்சி உண்டானது. காரணம்  அரங்கில் சுமார் 50 பேர் தான் இருந்தனர். அதில் விற்பனையாளர்களும் அடங்கும். விழாவில் சுமார் 1000பேராவது இருப்பார்கள் என நம்பி இருந்தேன்.



இணையத் தமிழனின் நேரடிப் பங்களிப்பு ஏன் இல்லை என்ற கேள்விக்கு பதில் அளிப்பது மிக கடினம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சரிவர ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.சரியான அளவில் விளம்பரப்படுத்தப் படவில்லை. மாணவர்களின் பங்களிப்பும் இல்லை.

அரங்கில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் மிக குறைவே.

மக்கள் கூடத்தில் 30-12-2012 அன்று காலையில் நடைபெற்ற நிகழ்வில்'' விக்கி காமன்சு" பற்றி தமிழ்ப்பரிதி அவர்கள் விளக்கமளித்தார். நல்ல தகவல்களை அறிய முடிந்தது.

அடுத்த மாநாட்டையாவது , மக்கள் பங்களிக்கும் வகையில் அமைத்தால் உபயோகமாக இருக்கும்.