தமிழ்மண்ணில் வித்யாஷ்ரமம்‍,வித்யாலயா‍‍?

Category :

முன்பு தனியார் பள்ளிகள் "இங்கிலிஷ் கான்வன்ட்" என்றும்
"மேல் நிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி,ஆரம்பப்பள்ளி" என்று
ஆர‌ம்பிப்பார்கள்.

ஆனால் தற்போது "இந்தி பெயர்களினால்" தமிழ் மக்களை கலப்படம்
செய்கிறார்கள்.இது வியாபாரம் என்றபோதிலும், இந்த அக்கிரமத்தை எதிர்த்து
குரல் கொடுப்பது நம் கடமை.

இந்த‌ வியாபார‌த்தை செய்வ‌து வேறுயாரும‌ல்ல‌...த‌மிழ‌ர்க‌ள் தான்.

குறிப்பாக கடலூர்/புதுச்சேரியில் இய‌ங்கும் ப‌ள்ளிக‌ளைப் பாருங்க‌ள்;

1.ஆச்சாரியா சிக்க்ஷா ம‌ந்திர்
2.ஆதித்யா வித்யாஷ்ர‌ம‌ம்
3.ச‌ர‌ஸ்வ‌தி வித்யால‌யா
4.ராமகிருஷ்னா வித்யாச‌லா
5.சார‌தா வித்யால‌யா
6.அர‌பிந்தோ வித்யால‌யா
7.அக்க்ஷ‌ர‌ வித்யாஷ்ர‌ம‌ம்

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்?

Category :

"சமச்சீர் கல்வி"யை தூக்கி வீசியுள்ளது புதிய அரசு.சமீபத்தில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவை எடுத்துள்ளனர்.இதைப்பற்றி இனிமேல் தான் "சிறப்பு நிபுனர் குழு"அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.


இதில் அரசியல் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.கலைஞர் கொண்டுவந்தார்
என்பதற்காகக் தான் இது நிராகரிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.புதிய அரசுக்கு கலைஞர் மேல் வெறி என்றால்,அதை அவர் பற்றிய பாடங்களை நீக்குங்கள்,அதற்காக அச்சடித்து விற்பனைக்கு வர உள்ள நிலையில் அனைத்தையும் பாழாக்குவது பாவச்செயல்.இதில் "பல நூறு"கோடி ரூபாய் மக்களின் வரிப்பணமும் வீணாக்கப்படுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சமச்சீர் பாடப்புத்தகங்களை எழுதியது சிறப்பு வாய்ந்த ஆசிரியர் குழு...அதை தூக்கி வீசுவது அவர்களை "செருப்பால்"அடிப்பது போலானது.

கடைசி வெறி:
அதிமுக ஆட்சிக்காக தன் நாக்கை காணிக்கை அளித்த பெண்மணிக்கு "அரசு வேலை"கொடுத்து தன் எல்லையை மீண்டும் மீறி அதிர்ச்சி அளித்திருக்கிறார்
தமிழக முதல்வர்.

உதவி செய்யவேண்டுமெனில் தன் கட்சி அலுவலகத்தில் பணி கொடுத்து
பல ஆயிரம் ஊதியம் கொடுத்தால் பெருமைப் படலாம்.

படம் உதவி:அம்புலிமாமா

கலைஞரே போதும்?இன்னும் மவுனம் ஏன்??

Category :

போதும் கலைஞரே,போதும்....இனியும் தி.மு.க வை அழிக்காதீர்கள்.

தயவு செய்து கட்சிப் பணியிலிருந்து விலகி, அண்ணாவின் கட்சியை
காப்பாற்ற உதவுங்கள்.அது தான் தி.மு.க உடன் பிறப்பின் எதிர்பார்ப்பு.
இனியும் உங்கள் "குடும்ப ஊழல்களுக்கு" கட்சியை பலிகடா ஆக்காதீர்கள்.


இந்த மாபெரும் இயக்கத்திற்கு வந்த பழிச்சொல் உங்களுடன் களையட்டும்.
சுயமரியாதையை இழந்து இனியும் தமிழினத்தை அவமானப்படுத்தாதீர்.

கட்சியின் அடுத்த தலைவனை உடன்பிறப்பு தேர்ந்தெடுக்கட்டும்,
இதுதான் உண்மையான தி.மு.க தொண்டணின் விருப்பம்.அதனால்

தயவு செய்து அரசியலிலிருந்து விலகுங்கள்.

இனியும் "ஒருவர் சிறை சென்றுவிட்டதாலேயே குற்றவாளியாகிவிடமாட்டார்"
என நாக்கை சுழற்றாதீர்.

நாங்கள் பட்டது போதும்...கலைஞரே!!!!

கார்ட்டூன் உதவி: மதி
நன்றி:தினமணி

புதிய தலைமைச் செயலகம் விற்பனைக்கு?

Category :

New Secretariat building for sale!

ஆமாம்.புதிய சட்டசபை, பழைய கட்டிடமான புனித ஜார்ஜ் கோட்டைக்கே போக உள்ளது.மேலும் இந்த புதிய கட்டிடம் அதிமுக அம்மாவுக்கு
புதுச்சேரி போலிசுகாரரின் "தொப்பி"போலுள்ளதால் பிடிக்கவிலையாம்.


அதனால் அம்மா இந்த கட்டிடத்தில் நுழைவது என்பது கடினமே.ஆகையால்
விற்பனைக்கு வர உள்ளது.

"சர்க்கசு வியாபாரிகள்" யாராவது ஆசைப்பட்டால் குறைந்த
வாடகைக்கும் கிடைக்கும்.

கடைசி வெறி:
மக்களின் வரிப்பணம் எப்படி பாழாய்ப்போகிறது பாருங்கள்.

வைகோ நடைப்பயணம்?

Category :

வைகோ அவர்களே உங்களின் பணி இனிமேல்
தான் தமிழகத்துக்கு தேவை.


ஒரு அண்ணா கசாரே(Anna Hazare) தலைநகரை கலக்கி பொது
வாழ்வில் வெற்றி பெரும் போது,உங்களால் ஏன் முடியாது?

ஆரம்பியுங்கள் உங்களின் நடைப்பயணத்தை."சேது சமுத்திர திட்டம்"
நிறைவேற வாருங்கள் வீதிக்கு.

தமிழனுக்கு உங்களை விட்டால் வேறு "தலைவன்" இல்லை.மக்கள் காத்திருக்கிறோம்......வாருங்கள் வைகோ அவர்களே!
வாருங்கள்!!

படம் உதவி:சங்கொலி இதழ்

கிரிக்கெட் வியாதி- கடைசி நாள்!

Category :

அப்பாடா...கிரிக்கெட் என்ற பெரு வியாதி
இன்றுடன் முடியப்போகிறது அல்லது மடியப்போகிறது.

121 கோடி மக்களின் இந்தியாவும், 2கோடி மக்களைக்
கொண்ட (பல்லாயிரம் தமிழர்களை கொன்ற) இலங்கையும்
இறுதிப் போட்டியில் விளையாடப்போகின்றன.


உலகத்தின் பெரும்பாலான ஊடகங்களின் பிரதானச் செய்தி
இதுதான்.இந்திய ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
மூன்று நாளாய் இதே அளப்பரை தான்....தலைநகர் முதல்.....தள்ளாடும்
ஊராட்சி வரை.

கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு சிறப்புத் தகுதி ஏதேனும் உண்டா?
உண்டு, அது அடிமைகளுக்கு ஆங்கிலேயன் விட்டுச் சென்ற எச்ச, மிச்சம்.

இன்று கூட "இங்கிலாந்து" நாட்டில் மேட்டுக்குடி மக்களைத்தவிர
யாரும் ரசிப்பதில்லை.அனைவருக்கும் பிடித்தது, கால்பந்து விளையாட்டு தான்.

அதனால் தான் பெர்னார்ஷா கூறினார்.... 22 முட்டாள்கள் ஆடுவதைப் பார்க்கும்
22,000 முட்டாள்களின் விளையாட்டு" என்று.

இன்று இந்த விளையாட்டு வியாபாரிகளினால், வியாபாரத்திற்காகத்தான் விளையாடப்படுவதை அனைவரும் அறிவர்.ஆனால் இந்த மோகம் தான் இன்னும் குறையவில்லை.என்று மாறுமோ?

கருத்துப்படம்:நெட்டில் சுட்டது

நன்றி:யாரோ

போர்க்குற்றவாளி ராசபக்ச இந்தியா வருகை?

Category :

ஈழப்போரின் இறுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை
படுகொலை செய்த இலங்கை அதிபர் "கிரிக்கெட்" காண
வருகிறார்.

மானமுள்ள மும்பை தமிழின உணர்வாளர்களே,உங்கள் வரவேற்பை
சனிக்கிழமையன்று அவருக்கு காட்டுங்கள்.

நன்றி:கூகுள் படம்