நானும் சாமி தான்?

Category :வேசம் போட்டு
வேடிக்கை காட்டினேன்,
வயிற்றை நிரப்ப...
வீதி,வீதியாய் விதியே
என்று திரிந்தாலும்....
ஐம்மது பைசா,அதிகமாய்
போனால் ஒரு ரூபாய்,இலவசமாய்
ஏளனப்பார்வையும்,பேச்சும்.

என்னை மாதிரியே ஒரு
சிலை தெருவோரம்..,
அங்கே வ‌ருப‌வ‌ர்க‌ள்
வேடுக்கை காட்டுவார்க‌ள்...?
அங்கேயும் ஒரு உண்டி உண்டு,
அத‌ன் வாய் நிர‌ம்பி,
அரைகுறையாய் சிரித்த‌து,
ஒரு "ப‌த்து ரூபா" நோட்டு.

மம்மி டாடியும்,ஆண்டி அங்குளும்.....

Category :சில ஆண்டுகளாய் தாய் தமிழ், சீர் கெட்டு சிரிக்கும் நிலைக்கு வந்து,இப்பொது வெந்தும் விட்டது.காணும் இட‌மெல்லாம் த‌மிங்கிலிஷ் மொழியில் ந‌ம் ம‌க்க‌ள்.த‌மிழ‌க‌ அர‌சும் த‌ம் ப‌ங்கிற்கு நாச‌ப்ப‌டுத்திக்கொண்டு.....பேருந்து ப‌ய‌ண‌ச்சீட்டில் இருந்த‌ த‌மிழை கூட‌ அழித்துவிட்டு,ஆங்கில‌ துண்டு சீட்டு.த‌னியார் நிறுவ‌ன‌ பேருந்துக‌ள் கூட‌,அழ‌கான‌ த‌மிழில் க‌ணிணிச் சீட்டு வ‌ழ‌ங்குகின்ற‌ன‌.


இன்னும் பெரும்பான்மையான‌ ம‌க்க‌ள் முத‌ல் எழுத்தை ஆங்கில‌த்தில் தான் எழுதி அசிங்க‌ப்ப‌டுத்துகின்ற‌ன‌ர்.உல‌கிலேயே த‌மிழ‌க‌ த‌மிழ‌ன் தான் இந்த‌கொடுமையை ர‌சிக்கிறான்.....உல‌கில் வேறு எந்த‌ மொழியும்,இன‌மும் இப்ப‌டி எழுதுவ‌தில்லை.
இதில் அமைச்ச‌ர்களும் அட‌ங்கும்.....


குறிப்பாக‌ அனைத்து ம‌ழ‌லைய‌ர் ப‌ள்ளியில் அப்பா,அம்மாவை கொன்றேவிடுகின்ற‌ன‌ர்.இது த‌மிழை அழிக்க‌ முனையும் நாச‌கார‌ர்க‌ளின் திட்ட‌மிட்ட‌ ச‌தியோ என்று கூட‌ என்ன‌த் தோன்றுகிற‌து.


இந்த‌ த‌மிழ் கொலைகார‌ர்க‌ளை திருத்த‌ எத்த‌னையோ த‌மிழ் அமைப்புக‌ள்,இய‌க்க‌ங்க‌ள் இருந்தும் ஒரு மாற்ற‌மும் இதுவ‌ரை நிக‌ழ‌வில்லை.


எம் த‌மிழின‌ கொலைகார‌ர்க‌ளே மொழி ஒரு இன‌த்தின் அடையாள‌ம்...அதை சிதைப்ப‌து ஒரு பாவ‌ச்செய‌ல்.


முழுமையான‌ ஆங்கில‌த்தில் கூட‌ எழுதுங்க‌ள்,பேசுங்க‌ள்.....ஆனால் த‌மிங்கிலிஷ்‍-ல் ம‌ட்டும் பேசாதீர்க‌ள்.....எழுதாதீர்க‌ள்...

இந்தியா செய்த தமிழினப் படுகொலை?

Category :

என்னுள் இருந்த இந்தியன் படுகொலை செய்யப்பட்டு விட்டான்.இனி நான் என்ன தான் "இந்தியன்" என்று கூறினாலும் அது நடிப்பாகத்தான் இருக்கும்.

என்நாடு செய்த பாவத்தில் எனக்கும் பங்கு உண்டு.தமிழினம் என்று வேண்டாம்,மனித இனம் என்ற அடிப்படை கரிசனம் இல்லாமல் நடந்து கொண்ட இந்தியா, அதற்கான தண்டனையை பெற்றே தீரும்.
நியாய, தர்மத்தை பேச இந்தியாவுக்கு இனி அருகதை இல்லை.26 ஆம் தேதி நடந்த ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் கூட‌ நியாயத்தை பேசாமல், இலங்கை பயங்கரவாத அரசின்" கைப்புள்ள" யாக நடந்து கொண்டது கேவலம்.
இந்தமாதிரி தவறான வெளியுறவு கொள்கைகளினால் தான் மக்களின் ஆதரவை பல நாடுகளில் இந்தியா இழந்தது.குறிப்பாக‌ நேபாளம்,பங்களாதேஷ்...அரசாங்கம் செய்யும் தவறை சுட்டிகாட்ட வேண்டிய பொறுப்பு இந்தியா போன்ற ஜனநாயக‌ நாட்டுக்கு உண்டு.ஆனால் இந்தியா தவறான அரசு அதிகார‌வர்க்கத்தினால் தவறான கொள்கைக்கு வழி அமைத்து மீறவும் செய்கிறது.

உதாரணம்:
1.மியான்மார் உடன் உறவு‍‍‍- அந்த அரசு அப்பட்டமான மனித உரிமை மீறல் செய்தும்,நம்மால் நியாயத்தைக் கூட கேட்க இயலாமல் உள்ளோம்.
2.திபெத்-இந்தியாவை நம்பி வந்தவர்களுக்கு இன்னும் ஒரு படிமுன்னேற்றம் கூட இல்லாமல் அவர்களின் வாழ்க்கையை ஏமாற்றியது.
3.சூடான்-அங்கு தர்பூரில் இரு மாபெரும் இனப்படுகொலை நடத்திய அரசுடன் ''வியாபாரம்" செய்வது....ஓ.என்.ஜி.சிஅரசு நிறுவனம் நிறைய மில்லியன் கொட்டியுள்ளது.(குருடு ஆயில்=க்காக)

கடைசி வெறி:

இந்தியா மூச்சுக்கு மூச்சு "இறையான்மை" பற்றி பேசுகிறது.அதே இறையான்மையை சொல்லி ஒரு "கொலைஞரும்" மூத்திரம் விடுகிறார்.பதவி பெற பல்லக்கில் செல்கிறார், புதுடில்லிக்கு.ஆனால் படுகொலை நடக்கும் போது "கடிதம்" எழுதுகிறார்.
நேற்று வட கொரியா தன் சொந்த நாட்டில் , சொந்த பாதுகாப்புக்காக‌ அணு ஆயுத பரிசோதனை செய்த போது, முதல் ஆளாய்கண்டணம் தெரிவிக்கும் இந்தியாவுக்கு அடுத்தவன் நாட்டில் தலையிடுவது "இறையான்மை" மீறிய செயல் என ஏன் தெரியவில்லை?.
இந்தியா இரட்டை வேடத்துடன்,இரட்டை நாக்கையும் வைத்துக்கொண்டு பேசுவது அநியாயம், அக்கிரமம்.

கவிஞர் கனிமொழிக்கு ஒரு கடுதாசி?

Category :சகோதரிக்கு முதல்ல வணக்கம்.

உங்களின் கவிதைகளையும், பெண்ணிய உரிமைக்கான‌
உரைகளையும் வாசித்திருக்கிறேன்,கேட்டிருக்கிறேன்.உங்களின்
எளிமையை கண்டு வியந்தும் இருக்கிறேன்.

ஆனால் இப்போது.....விசயத்துக்கு வருகிறேன்.இப்போதெல்லாம்
நீங்கள் கண்னை மூடிக்கொண்டு உலகைப் பார்க்கிறீர்கள்
எனத் தோன்றுகிறது.இன்னுமா சகோதரி..மௌனம்...ஏன்...ஏன்?

செத்து மடியும் அப்பாவி பெண்கள், குழந்தைகள்,கர்ப்பிணிகள்
உங்களின் மனதை உலுக்கவில்லையா...?தமிழன் என்பதால்
வேண்டாம்....ஒரு மனிதாபத்துடன் கூட பார்க்க ஏன் இயலவில்லை.
ஈழத்தமிழன் என்ன பாவம் செய்தான்....தன் உரிமையைப் பெற
போராடுவதை தவிர?உங்கள் தந்தை இந்திய இறையாண்மையை
இன்னமும் இறுக்கமாக பிடித்துக்கொண்டுள்ளார்.நமக்கு தார்மீக கடமையும்,
பொறுப்பும் உண்டு...ஏனெனில் ஒரு பெரும் தமிழினத்தின்
ஏழு கோடி தமிழனின் தலைவனாக,அதிகாரத்தில் இருக்கும் உங்களின்
தந்தை, ஏன் எதுவும் செய்ய மறுக்கிறார்.(அறிக்கை விடுவதை தவிர)

உலக இணையப் பக்கங்களை புரட்டும் போது...உங்கள் தந்தை பெறப்
போகும் பட்டங்கள் தான் பளிச்சிடுகின்றன...மாதிரிக்கு சில...கீழே;
1.கலைஞர் ஒரு "கொலைஞர்"
2.தமிழின துரோகி

இவைகள் உங்கள் மனதை காயப்படுத்தும்.ஆனால் தினந்தோறும்
செத்துமடியும் தமிழ்ப் பிணங்கள் முன்...இது ஒன்றும் இல்லை.

தயவு செய்து உங்கள் தந்தையுடன் பேசுங்கள்...செத்துக்
கொண்டிருப்பது தமிழினம் என ஞாபகப் படுத்துங்கள்.தேர்தல்
வந்ததால்...ஓட்டு ...ஓட்டு என எல்லோரும் ஒடிப்போவீர்கள்....?

தயவு செய்து பேசுங்கள்....மனிதத்துடன்!
இல்லையேல் வரலாறு மன்னிக்காது.


நன்றி: யாழ்.காம் (படத்திற்கு)

இறை"ஆண்மை" க்கு மருந்து?

Category :இழந்த இறை ஆண்மையை மீண்டும் பெற:


விளம்பரம்:
150 வருட பாரம்பரிய குடும்ப மருத்துவர்களால் தயாரிக்கப்படும் இந்த மருந்தில் அரிய வகை மூலிகைகள் கலந்துள்ளதால் வீரியம் அதிகமாக இருக்கும்.இதற்கு பக்க விளைவும் கம்மி.


இது சிட்டு குருவி லேகியமோ,தங்க பஸ்மமோ கிடையாது...அதையும் தாண்டி புனிதமானது,....புனிதாமானது.!


இப்போது இந்த ஆண்மை மருந்திற்கு நல்ல கிராக்கி,பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது...குறிப்பாக அண்டை நாடுகளில்...

இந்த இறை "ஆண்மை" மருந்தின் பலன்கள்:


1.இது ராணுவ வீரர்களை "வெறியர்களாக்கும்".
2.துப்பாக்கி வீரியம் கொண்டு எழுந்து வெகு தூரம் பாயும்.
3.அப்பாவி பெண்களை, வல்லுறவு கொண்டு கொலை செய்யத் தூண்டும்.
4.இன அழிப்புக்கு மிகவும் ஏற்றது...குறிப்பாக பக்க விளைவு இல்லை.

எச்சரிக்கை:
1.இம் மருந்து போலி மருத்துவர்களாலும், போலி கலைஞர்களினாலும் விற்கப்படுவதால்......கவனம் தேவை.


2.இடைத்தரகர்களுக்கு தகுந்த "போபர்ஸ்" அளிக்கப்படும்.

கலைஞர்- ஒரு தமிழினக் கொலைஞர்!

Category :

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக் குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே - இனி எப்போதும் மறவாது தமிழினம் -
உனை எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!
தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! -
எங்கள் முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான் சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்வெட்டிப் பழமொழிக்கு
சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன் சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களைஉன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா?
இல்லை கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!மடிந்தது உன் சூழ்ச்சி!
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!அடிவயிறு எரிகின்ற அன்னையரின்
வெப்பம் உனைஅப்படியே பொசுக்கட்டும்!

ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் -
இதுசத்தியம்! சத்தியம்! சத்தியம்!


-திவாகரன்,தம்பிரான் தோழர்-

கடைசி வரி:
இக் கவிதை தமிழொசை.காம் இணயத்தில் இருந்து மறுபதிப்பு செய்யப்படுகிறது.
நன்றி:திவாகரன்,தம்பிரான் தோழர் & www.tamiloosai.com

சில வரிகள், வலிக்கும் என்ன செய்ய...உண்மையை சொல்ல வேண்டியுள்ளதே?

மம்தாவிடம் மண்டியிட்ட காங்கிரசு!

Category :

காங்கிரசு ஒரு தேசிய கட்சி....ஆனால் மேற்குவங்கத்தில் ஒரு உதிரி கட்சியாகத் தான் மதிக்கப்படுகிறது.இல்லை, மிதிக்கப்படுகிறது...
தேர்தல் கூட்டணிக்கு திரிணாமுல் காங்கிரசுடன் பிச்சை எடுத்து 14 தொகுதிகளை பெற்றுள்ளது.

உத்திரபிரதேசத்தில் இன்னும் கேவலம்...6 தொகுதிக்கு மேல் உங்களுக்கு அருகதை இல்லை எனக் கூறிவிட்டனர் முலாயமின் சமாஜ்வாடி கட்சி.(மொத்த தொகுதிகள் 80)இதில் கொடுமை என்னவென்றால் ஒரு காலத்தில் காங்கிரசு செல்வாக்காக இருந்த மாநிலம்,இன்று செல்லாக் காசாக முன்னேறி உள்ளது.

காரணம் காந்தி,நேரு பேரை சொல்லி அரசியல் வியாபாரம் செய்ததினால்.

தமிழகத்தில் இவர்களுக்கு இருக்கும் "பெரும் ஆதரவு" அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில் திமுக விடம் 20 தொகுதிக்கு பேரம் பேசுகின்றனராம்.இவர்களின் தகுதி இவர்களுக்கே தெரியாமல்....

உறவுகளே , காங்கிரசு கட்சிக்கு இது தான் கடைசி தேர்தலாக இருக்கட்டும்.இவர்களின் தமிழின விரோதத்துக்கு "வாக்குச்சீட்டால் வாய்க்கரிசி போட்டு" காங்கிரசை காணாமல் செய்வோம்.
அதுதான் தமிழனுக்கும், தமிழ் நாட்டுக்கும் நல்லது.

கற்பழிப்பு=பாலியல் வல்லுறவு?

Category :


ஈழத்தின் பாலியல் வல்லுறவும்,தமிழகத்தின் கற்பழிப்பும்!

கடந்த சில தினங்களுக்கு முன், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு,நம்முடைய புலம் பெயர் சகோதரிகளின் பேச்சு ஆச்சரியமாக இருந்தது.


அவர்களின் "பாலியல் வல்லுறவு" பேச்சு கூட தெளிவாகவும்,ஆண்மைத்தனமாகவும் இருந்தது.இலங்கையில் நடைபெறும் இன அழிப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்ற போதிலும் அவர்களின் அவலங்கள் இன்றும் வேடிக்கை தான் பார்க்கப்படுகின்றன,இந்த குருட்டு உலகத்தினால்.


இந்த அவலம்தான் " விடுதலைப் போராட்டத்தில்" அவர்களை போர்முனைக்கு இட்டுச் சென்றுள்ளது எனக் கூறலாம்.ஈழப் பெண்களின் வீரத் தியாகங்களும்,பங்களிப்பும் கண்டிப்பாய் வரலாற்றில் இடம்பெறும்.
புலம்பெயர் சகோதரிகளின் வார்த்தைகள் மிக்க நம்பிக்கை அளித்தன.அதுமாதிரி தமிழகப் பெண்களும் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.


இன்னும் கூட தமிழகத்தின் தினசரிகள் " கற்பழிப்பு" என்ற அசிங்கமான அர்த்தமற்ற வார்த்தையைத் தான் பயன்படுத்துகின்றன. எப்போது மாறுவோம் நாம்?

சிதம்பரம் வாங்கிய அவமானம்?

Category :

கடந்த ஒரு வாரமாக சட்டம், ஒழுங்கு மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் விசயமாக கர்நாடக முதல்வருடன் பேச்சுநடத்த முடியாமல் "மூக்குடைபட்டு" காத்துக் கொண்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

மூன்று முறை தேதி குறித்தும், எனக்கு சொந்த தொகுதியில் மக்கள் பணி இருப்பதால் " நேரம்" இல்லை என்று சொல்லி சிதம்பரத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளார் முதல்வர் எடியூரப்பா.

சிதம்பரத்தின் "கை" கொஞ்சம் நீளம் தான்....மாநில முதல்வர்கள் இவரிடம் கையேந்தும் கூலிகள் என நினைத்து விட்டார் போலும்.
சட்டம்,ஒழுங்கு மாநில முதல்வரில் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆனால் சிதம்பரம் போன்றவர்கள் சோனியாவின் விசுவாசத்திற்காக எதையும் செய்வார்கள்.

அதுதான் மாநில முதல்வர்களுக்கு ஆலோசனை கூறி கடிதம் எழுதுவது.இது மாதிரி மாநில பிரச்சினையில் அதிகமாக மூக்கை நுழைப்பவர்களை மாநில முதல்வர்கள் கண்டிக்க வேண்டும்.அப்போது தான் சொரணை வரும்.

கடைசி வெறி:


படிக்கும் போது தமிழனை அவமானப்படுத்தி விட்டார்களே என எண்ண வேண்டாம்."காங்கிரசு காரன்" எப்போது தமிழனாக இருந்திருக்கிறான்?.

கைப்புள்ள கருணாநிதி!

Category :

வர, வர கலைஞருக்கு பதவி வெறியில்,காங்கிரசையும், அதன் தலைவியையும் பாராட்டு பாடுவதை பார்த்து காங்கிரசுகாரனே சிரிக்கிறான்.தன் குடும்பம்,தன் சுக போக நாற்காலி ஆசைக்காக, தன் தமிழினத்தையே காட்டிகொடுத்த துரோகி என்ற பட்டம் வரலாறு கண்டிப்பாய் கொடுக்கும்.பிரணாப் முகர்ஜி சொல்வதை கேட்டு புளகாங்கிதம் அடைந்து அறிக்கை விடுவது, ஒரு முதிர்ந்த அரசியல்வாதிக்கு அழகல்ல.என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே, பிதற்றுவது கேவலம்.

இந்த பிரணாப் முகர்ஜி, பதவி சுகத்திற்காக "ராகுல் காந்தி"யை பிரதமர் என்று அறிவித்து, தன் அரிப்பை போக்கி கொண்டவர்.தன் விசுவாசத்தை காட்டிக் கொண்டவர்.

லாகூரில் (பாகிஸ்தான்)நடந்த தாக்குதலில்,சிறு காயம் பட்ட இலங்கை அணி வீரர்களுக்கும்,இலங்கைக்கும், இந்தியா....ஒப்பாரி வைக்கிறது.இலங்கைக்கு,இந்தியா என்ன தான் முட்டு கொடுத்தாலும்,அவர்கள் நம்மை ஆதரிக்க போவதில்லை.இது தான் வரலாறு.

இதே இந்தியா, நேற்று இலங்கை அரசின் தீவிரவாத தாக்குதலில் 57 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் பலர் குழந்தைகள்.இருந்தும் கண்டுக்கவில்லை, கண்டிக்கவில்லை.இதுதான் நியாயமா, தர்மமா......?
அரசு பயங்கரவாதத்தை, இந்தியா ஆதரிக்கிறதா?.....தமிழன் என்ன அவ்வளவு கேவலமானவனா??....இந்த பாவத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் பங்கு உண்டு.


இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட, தேர்தலில் எதிரிக்கு கூட ஓட்டு போடுவோம்.தமிழின துரோகிகள்"கைப்புள்ள" கருணாநிதி-க்கும்,காங்கிரசு காரனுக்கும் பாடம் புகட்டுவோம்.

கடைசி வெறி:
கலைஞர் கருணாநிதியின் தமிழின துரோகத்துக்கும்,அவரின் தேசிய ஒருமைப்பாட்டு இறையான்மைக்கும் அவருக்கு "கைப்புள்ள கருணாநிதி" என்ற பட்டம் வழங்கப்படுகிறது.இனி அனைத்து பதிவர்களும், கைப்புள்ள பட்டத்தை பயன்படுத்த வேண்டுகிறோம்.

கடலூர் முழு அடைப்பு -‍ முழு வெற்றி.

Category :

சிங்கள இனவெறியாட்டத்தை தடுத்த‌
நிறுத்த வலியுறித்திடவும், இந்திய அரசு
போருக்கு உதவி செய்திடுவதை தடுத்து
நிறுத்திடவும் நடைபெற்ற கதவடைப்பு
போராட்டம், கடலூரில் வெற்றிகரமாக‌
நடந்தேறி உள்ளது.

கடலூர் -ன் அனைத்து கடைகள்,மூடப்பட்டு
இருந்தன.பேருந்து,ஆட்டோ(தானி),லாரிகள் எதுவும்
ஓடவில்லை.

இது தி.மு.கா (திராவிட முன்னேற்ற காங்கிரசு) ) -ன்
தமிழின துரோகத்துக்கு , மக்கள் கொடுத்த அடி
என்றே கூறலாம்.

அய்யயோ....கொல்றாங்களே-கலைஞர்!

Category :

இன்று முதல்வர் கலைஞர் ,முத்துக்குமார் விசயத்தை அரசியலாக்க வேண்டாம் என திருவாய் மொழிந்துள்ளார்.

கலைஞரை செயலலிதா அரசு, கைது செய்த போது சும்மாவே "அய்யோ....அய்யோ கொல்றங்க" - ன்னு பின்னனி பேசி அசிங்க அரசியல் செய்தவர் இந்த தலைவர் கருணா (நிதி).அதை நாள் முழுக்க "சன் டிவி"யில் காட்டி அரசியல் செய்தவர்.இன்னும் கூட காசு சம்பாதிக்க " டி.வி" நடத்திக்கொண்டு,தமிழனை "கேபிள்" அகதியாக நடத்திக் கொண்டிருப்பவரே.....கட்சியை குடும்ப சொத்தாக்கியவரே.....பார்த்தும் கூட ரத்தக்கண்ணீருடன் கட்சி பணி செய்கின்றனர் உடன்பிறப்புகள்.போதும் கலைஞரே...போதும்.நாற்காலிக்காக "தமிழினத்தையே அடகு வைக்காதீர்கள்."

முத்துக்குமார்-ஐ சாகடித்த தமிழர்கள்?

Category :

தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்கள் விபரம்:

1.கலைஞர் மு.கருணா(நிதி),தி.மு.க, முதல் அமைச்சர்,தமிழ்நாடு
2.மரு.ராமதாசு,நிறுவனர், பா.ம.க

3.ப.சிதம்பரம்,மத்திய உள்துறை அமைச்சர்
4.டி.ஆர்.பாலு, மத்திய கப்பல் ,நெடுஞ்சாலைதுறை அமைச்சர்
5.அ.ராசா,மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர்
6.மரு.அன்புமணி,மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்
7.ஜி.கே.வாசன்,மத்திய புள்ளியியல் துறை அமைச்சர்
8.ஆ.வேலு, மத்திய ரயில்வேதுறை துணை அமைச்சர்
9.எஸ்.ரகுபதி,மத்திய சுற்றுச்சூழல் துணை அமைச்சர்
10.கே.வெங்கடபதி,மத்திய சட்ட உதவி அமைச்சர்
11.ஈ.வி.கே.எஸ்.இளங்காவன், மத்திய ஜவுளித்துறை துணை அமைச்சர்
12.சுப்புலட்சுமி ஜெகதீசன்,மத்திய சமூக நலம், துணை அமைச்சர்
13.எஸ்.எஸ்பழனி மாணிக்கம், மத்திய நிதி உதவி அமைச்சர்
14.வி.ராதிகா செல்வி,மத்திய உள்துறை உதவி அமைச்சர்

தமிழனல்லாத தமிழ்நாட்டிலிருந்து போன அமைச்சர்;
15.மணிசங்கர் அய்யர், மத்திய அபிவிருத்தி,வட-கிழக்கு மாநிலம்

கடைசி வெறி:

1.மத்தியில் தமிழன் அதிகார ஆளுமையில் இருக்கிறான், தமிழினத்திற்கு
ஏதேனும் செய்வார்கள் என்று நம்பி ஏமாந்து போன என் சகோதரனே.உனக்கு
என் ஆழ்ந்த அஞ்சலி.


2.இன்னும் சில நாற்காலிகள், மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்...நாங்கள் என்ன செய்வது? என்று கூறி மக்களை ஏமாற்றலாம்.

மத்தியில் எத்தனை தமிழின துரோக அமைச்சர்கள் எனப்பாருங்கள்;

தி.மு.க- 07

பா.ம.க -02

காங்கிரஸ் - 04

தமிழ்ப் பிணங்களில் நடக்கும் இந்திய கிரிக்கெட்?

Category :
அய்யகோ............அய்யகோ...........என்று கலைஞர்
தீர்மானம் மட்டும் போட்டு "படம்" காட்டி விட்டார்.
இந்த நிலையில் "ராசபக்சே அழைப்பில்" சென்றுள்ள
ப்ரனாப் முகர்ஜி,தமிழினம் முழுவதும் அழிந்ததா...இல்லை
மிச்ச,சொச்ச தமிழன் உயிருடன் எவனாவது இருக்கிறானா என
வேவு பார்க்கச் சென்றுள்ளார்.

தமிழக தலைவர்கள் மரண ஓலமிட்டார்கள், புதுடில்லி வரை
சென்று மன்றியிட்டு அழுதார்கள்,தமிழின அழிப்பை தடுக்க.
இந்திய அரசு(திமுக,பாமகவும்) தமிழகத்தை அசிங்கப்படுத்தியது.
அரசியல் அசிங்கங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழக ஊடகங்கள் கூட தமிழின ஒழிப்பிற்கு துணைபோனது
கொடுமையிலும் கொடுமை.உண்மையை கூட எழுத மனம்
வரவில்லை.

கடைசியாய் ஒரேயடியாய் 300தமிழ் உயிர்களை வேட்டையாடி
இருக்கிறது சிங்கள பயங்கரவாத அரசு.கேட்க நாதி இல்லை.
உரிமையுடன்கேட்க வேண்டிய நாம் கிரிக்கெட் -டில் சவமாகி
விட்டோம்.

தலைநிமிர்ந்து வாழ்ந்த இனம், இன்று "சூடான்" தர்பூர்
நிலையிலான அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

என் இனிய ஈழ தமிழுறவே,நாங்கள் இல்லாத இந்திய இறையான்மையில்
சவமாகி விட்டோம்.

போராடுங்கள்..மக்களே,...போராடுங்கள்.....எத்தனை இடர் வரினும், உரிமையை
மீண்டும் பெற....எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன?

விஜயகாந்த்‍ + ஒபாமா கூட்டணி!

Category :

இதுநாள் வரை தனித்தே போட்டியிடுவேன் என்று
"டயலாக்" (வீரச் சவால்) விட்ட தே.மு.தி.க‌
தலைவர் இரு நாட்களுக்கு முன்,கூட்டணி வைத்துக் கொள்வோம்
என‌ கள்ளக்குறிச்சி-யில் சோக கீதம் பாடியுள்ளார்.

ஆனால் மறுபடியும்"வீராவேசம்" வ‌ந்து, மாநில கட்சிகளுடன் கூட்டணி இல்லை எனக் கூறியுள்ளார்.திருமங்கலம் கொடுத்த திருப்பு முனையால்
இந்த "பல்டி" என்று தெரிகிறது.

அநேகமாக அவர் ஒபாமாவின், ஜனநாயக கட்சியுடன்
கூட்டணி வைக்கலாம் எனத் தோன்றுகிறது.ஏனென்றால் அவர்
கொள்கை ப‌டி, இந்தியாவில் எந்த‌ க‌ட்சியும் இல்லை.

மேலும் அவர் கூறுகையில், கூட்டணி கட்சிகளுடன்
"பொது மக்களுக்கும் நல்லது செய்வோம்" என எழுதி
வாங்கி வைத்துக் கொள்வாராம்.

நடக்கட்டும், நடக்கட்டும்.....மக்கள் பார்த்துக் கொண்டு
தான் உள்ளனர்.

கடைசி வெறி:

"மனுசனுக்கு ஆசை வரலாம்....பேராராசை வரக் கூடாது"

"அய்யகோ"- தமிழன் சுயமரியாதைக்கு சமாதி?

Category :
"அய்யகோ"- இன்று தமிழக அரசு, மீண்டும் ஒரு தீர்மானத்தை
சட்ட சபையில் நிறைவேற்றப் போகிறதாம்.இச் செயல்
வெட்கக் கேடானாது.முதலில்,போடப்பட்டு
மத்திய அரசுக்கு அனுப்பப் பட்ட தீர்மானத்தை
குப்பை தொட்டியில் போட்டு தமிழினத்தை அவமானப்
படுத்தியது.

இதற்கு காரணம் நம்முடைய தி.மு.க, பா.ம.க‌
அரசியல் கோமாளித்தனம் தான்.வெறும் பதவி சுகத்திற்காக‌
இவர்கள் இன்னமும் நாடகமாடி வருவது அனைவரும்
அறிந்ததே.இவ‌ர்க‌ளின் "உண்மையை" அன்றே நாடி
சோசிய‌ம் பார்த்தவர் "சிங்க‌ள‌ இன‌வெறி ராணுவ‌ த‌ள‌ப‌தி
பொன்சேகா".

மேலும் கலைஞர் அவர்களுக்கு "பாரத் ரத்னா" என்ற‌
பட்டத்தை கொடுக்க இருப்பதாக மத்திய அரசு ஆசை
காட்டுவதால், கலைஞர் ஈழத் தமிழன் சாவதை அறிக்கை
மட்டும் விட்டு வேடிக்கை மட்டுமே பார்ப்பார் என
தோன்றுகிறது.

ஆற‌ரை கோடி ம‌க்க‌ளின் அர‌சு,இன்ன‌மும் ஒரு உண்மையான‌
அழுத்த‌த்தை "ம‌த்திய‌ அர‌சிட‌ம்" கொடுக்க‌வில்லை
என்பது க‌ண்கூடாக‌ தெரிகிற‌து.

காசா(GAZA) சுடுகாடும்..வன்னியின் இடுகாடும்?

Category :ஒரு வெறித்தனமான தாக்குதலை தொடுத்த இஸ்ரேல்
தனது 24 நாட்களின் பயங்கரவாதத்தை,உலகத்தின் நெருக்கலினால்
முடிவுக்கு கொண்டுவ‌ந்துள்ள‌து.இதில் இஸ்ரேல் வெட்டையாடிய‌து,
"ஹ‌மாஸ்"(HAMAS) ஐ அல்ல‌, அப்பாவி குழ‌ந்தைக‌ளை, பொதும‌க்களை....

ப‌ல்லாயிர‌க்க‌ன‌க்கான‌ வீடுக‌ள், வீதிக‌ள், அலுவ‌ல‌க‌ங்க‌ள் சிதில‌ப்ப‌டுத்த‌ப்
ப‌ட்டு ம‌க்க‌ளின் வாழ்க்கையையே சிதைத்துள்ள‌ன‌ர்.இங்கேயும் அனைத்து
அர‌பு நாடுக‌ளும் வேடிக்கை தான் பார்த்த‌ன‌, அசிங்க‌மே இல்லாம‌ல்.
அமெரிகாவையும்,பிரான்சையும் தேடி ஓடின‌ர்.ஆனால் இஸ்ரேல் எதையும்
காதில் வாங்க‌வில்லை,அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பையின் வேண்டுகோளையும்
விர‌ட்டி அடித்த‌ன‌ர்.

க‌டைசில் இஸ்ரேல் வென்ற‌தா? இல்லை, பால‌ஸ்தீன‌ அப்பாவி ம‌க்க‌ளையும்
தீவிர‌வாதியாய் எழுச்சி பெற‌ உத‌விவிட்டு வ‌ந்துள்ள‌ன‌ர்.இந்த‌ போரின் காய‌த்தால்
அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ஆயுத‌ம் ஏந்த‌ வ‌ழிவ‌கை செய்துள்ள‌ன‌ர்.

ஆனால் இந்த‌ போரில், முஸ்லிம் உல‌க‌ இளைஞ‌ர்க‌ள் இணைய‌த்தின் மூல‌மும்,
ப‌திவுக‌ளின் மூல‌மும் "இஸ்ரேலை" தோற்க‌டித்துள்ள‌ன‌ர் என்றே சொல்ல‌லாம்.

க‌ட‌ந்த‌ ஒரு மாத‌த்தில் ம‌ட்டும் ஆயிரத்திற்கும் மேற்ப‌ட்ட‌ இணைய‌ த‌ள‌ங்க‌ள்
காசா ப‌ற்றியே எழுதி, ப‌ட‌ம் போட்டு உல‌குக்கு காட்டிய‌து பெரிய‌ வெற்றி.
குறிப்பாக‌..... www.gazatalk.com இந்த‌ இணைய‌த‌ள‌ம் "காசா டாக்"
அனைத்து இஸ்ரேலுக்கு எதிரான‌வ‌ர்க‌ளையும் ஒருங்கினைத்த‌து.இது ந‌ட‌ந்த‌து,மிக‌
குறுகிய‌ கால‌த்தில்.

சில‌ வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளின் ப‌ங்கு.....மிக‌ அதிக‌ம்,குறிப்பாக‌,
http://israelscrimes.blogspot.com
http://gazatoday.blogspot.com

க‌டைசி வெறி:

1.ஈழ‌த‌மிழ‌ன் ப‌டும் அவ‌ல‌த்தை, சிங்க‌ள‌ பேரின‌வாத‌ ப‌ய‌ங்க‌ர‌த்தை நாம் இவ‌ர்க‌ள் மாதிரி
என்று காட்ட‌ப் போகிறோமோ, உல‌க‌த்துக்கு.

2.மேலும் (சோசிய‌ல் நெட்நொர்கிங் மூல‌மாக‌வும்-Website,facebook,Tweeter, You Tube,Blog) ஈழ‌த்த‌மிழ‌னின் வ‌ர‌லாற்றை, ஆங்கில‌த்தின் மூல‌மாக‌வும், சிங்க‌ள‌ மொழியிலும் வெளியிட்டு உல‌க‌த்தை திரும்பிப் பார்க்க‌ வைக்க‌ வேண்டும்.

3.இந்த‌ ப‌ணியில் உண்மையான தமிழ் ஆர்வ‌ல‌ர் யாரேனும் முன்வ‌ந்து ப‌ணி செய்ய‌
விரும்பினால் உதவி செய்ய எங்கள் குழு காத்திருக்கிறது.

பா.ம.க வெளியேறியதா?

Category :

மான,ரோசமுள்ள கட்சி என பா.ம.க(பாட்டாளி மக்கள் கட்சி)
மறுபடியும் நிருபித்துள்ளது.தமிழக சட்டமன்ற தீர்மானத்தையும்,
தமிழக மக்களின் கோரிக்கையையும் "செருப்பால்" அடித்த
மத்திய அரசிலிருந்து பா.ம.க வெளியேறியுள்ளது.

இதன் மூலம் தமிழன் இன்னமும் தன் "சுயமரியாதை"யை,
"தன்மானத்தை" இழக்க வில்லை என வரலாறு கூறப்போகிறது.

மேலும் தி.மு.க - வும் மத்திய அரசிலிருந்து ,விரைவில் வெளியேறும் என்று
"தினமலம்", டீக்கடை பெஞ்சில் சிலர் பேசிக் கொண்டது காதில் விழுந்துள்ளது.

கடைசி வெறி:

1.இந்திய வெளியுறவு செயலர் சிவ்சங்கர் மேனன்,இலங்கை
கண்டியில், மகிந்த ராசபக்சேயுடன் விருந்து உண்டு களித்துள்ளார்.
அவர் தமிழினத்தை அழிக்க,மேலும் ஆயுதம் தருவதாக
மகிந்தவுக்கு உறுதி அளித்துள்ளார்.

2.இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை சென்று சிங்கள மக்களை
மகிழ்விக்கவும் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

3.அட மானங்கெட்ட, "திமுக அரசே, பா.ம.க-வே" இன்னும் என்ன எதிர்
பார்க்கிறிர்கள் மத்திய அரசிடமிருந்து.

4.எனக்கும் சொரணை கெட்டு, கேட்டு "தமிழினத்திலிருந்து"
"விலங்கு" இனத்திற்கு மாற முடிவெடுத்து விட்டேன்.வாருங்கள்
அங்கேயாவது "சொரணை" யுடன் வாழ்வோம்.

ஆங்கில ஊடகங்களின் அயோக்கியத்தனம்?

Category :

தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் எந்த ஆங்கிலப்
பத்திரிகையும் இலங்கை விசயத்தில் உண்மையை கூட மூடி மறைக்கின்றன.இந்த‌ பாகுபாடான நிலையினால்,
ஈழத்தமிழனின் அவலத்தைக் கூட‌வெளியிட மறுக்கின்றனர்.
இதனை இத் தமிழ் சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டும்,இவர்களின் இரட்டை வேடத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது திருமாவளவனின் "உண்ணா நிலைப் போராட்டம்" குறித்து ஒரு செய்தியும் இவர்கள் வெளியிடவில்லை.தமிழினம் அழிந்து போவதில் இவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை?
ஆனால் இந்த மானங்கெட்ட தமிழன்,இவர்களின் செய்திகளை நம்பிகாசு கொடுத்து வாங்கி சோரம் போகிறான்.இதுதான் தமிழனின் தலை விதி.

ஈழத்தில் நடப்பது, சிங்கள பேரினவாத இன அழிப்பு என்பதைச் சொல்ல‌ எந்த நேர்மையான செய்தியாளர்களும் இங்கு இல்லை.
அடக்கு முறைக்கு எதிரான போராட்டம் தீவிரவாதமா?சம உரிமை கேட்கும் மக்கள் பயங்கரவாதிகளா?ஆயுதம் ஏன் தூக்கினார்கள்....அறுபது ஆண்டுகள் ஆன பிறகும்,சிங்கள அரசு ஒரு நேர்மையான தீர்வை வைத்ததா?

இலங்கையில் "லசந்தா"என்ற பத்திரிகையாளனுக்கு இருந்த தைரியம் கூட‌ இங்கு எவருக்கும் இல்லை.அரசின் பயங்கரவாத‌த்தை தட்டி கேட்கும் துணிவு லசந்தாவிற்கு இருந்தது.ஆனால் இங்கு.......?

ஊடகவியலாளரின் உண்மை பணி மக்களின் பிரச்சினையை எழுதி,அவர்களின் பிரச்சினை தீர உதவுவது தான்.ஆனால் இங்குள்ள பத்திரிகையாளர்கள் "காசா" மக்களைப் பற்றி எழுதுகிறார்கள்.,ஆனால் பக்கத்தில் உள்ள‌ இலங்கையில் நடக்கும் இன அழிப்பு நடப்பதை சினிமா மாதிரி பார்த்துக் கொண்டுள்ளனர்.தமிழினம் என்ன துரோகம்
செய்தது உங்களுக்கு?....

உண்மையைத் தான் எழுதவில்லை, அதைவிடக் கொடுமை சிங்கள பயங்கரவாத‌ அரசின் பொய்ச் செய்திகளை கட்டம் கட்டி வெளியிடுவது.இதுதான் சுதந்திர‌ பத்திரிகையாளனின் பணியா?....உண்மைத் தமிழர்களே, செய்தியாளர்களே சிந்தியுங்கள்.

கடைசி வெறி:

ச‌த்ய‌ம் க‌ம்ப்யூட்ட‌ர்ஸ் நிறுவ‌ன‌த்தின் நிர்வாகி,ராஜு
ஊரில் மக்கள் "சங்க‌ராந்தி"(பொங்கல் பண்டிகை) கொண்டாட‌வில்லை
என‌ IBN-LIVE எழுதுகிறான்.ஆமாம் ராஜூ, இந்தியாவை பெருமைப் ப‌ட‌ வைத்த‌வர்.அவ‌ர் சிறையில் இருப்ப‌தால் கொண்டாட‌வில்லையாம்.
இதெல்லாம் செய்தி.

ஆனால் ம‌க்க‌ளுக்காக "உண்ணாநிலை போராட்டம்" செய்யும்
திருமாவ‌ள‌வ‌ன் ப‌ற்றி ஒரு வரி செய்தி கூட‌ இல்லை.

நிலம் வீழ்ந்தால் என்ன?

Category :

தமிழீழ மண்
பகைவனிடம் வீழ்ந்த போது
பதறின பல இதயங்கள்....
விடியல் தொலைந்திடுமோ என,
பதறாதே தமிழா...,விடுதலை
என்ன விளையாட்டுப் போட்டியா?.

விதைக்கு "உரம்" போடுகிறான்,
வீரியமாய் வெடித்தெழ,
அவலத்தை வேடிக்கை பார்க்கும்
உலகின் "குருட்டு" கண்களை நாம்
பார்க்க வேண்டாம்.அவைகள்
மதத்தைத் தான் பார்க்கின்றன....

விடியல் பிறந்தே தீரும்,
அது தானே நம் மூச்சு.
மனத்தை ஆக்கிரமிக்காமல்,
நம் நிலத்தை அவன்
என்ன செய்வான்..?

பிறக்கும் ஈழம்...
அதை பெற்றெடுப்போம்,
விரைவில் "சிசேரியன்"
மூலமாகவாவது.

மான, ரோசமற்ற பா.ம.க, தி.மு.க!

Category :

புதுடில்லி வரை சென்று கெஞ்சிவிட்டு வந்து ஒரு மாதத்திற்குமேல் ஆகி விட்டது.இன்னமும் மத்திய அரசு சட்டை செய்யவில்லை.தமிழர்கள் "இளிச்சவாயர்கள்" என்று நன்கு புரிந்துவைத்துள்ளனர்.இந்த கூத்தில் இன்னமும் பதவி வெறி பிடித்து அட்டை போல் ஒட்டிக்கொண்டுள்ள பா।ம।க மற்றும் தி।மு।க கேலி கூத்தாகி உள்ளனர். சுய மரியாதையை இழந்து என்ன சாதிக்கப் போகிறார்களோ?.

இந்த இரு கட்சியும் இனியும் தமிழக மக்களை ஏமாற்றாமல் மத்திய அரசில் இருந்து வெளியேறுவது தான் மானமுள்ள தமிழனின் எதிர்பார்ப்பு.சட்டசபை அனைத்துக் கட்சி தீர்மானத்தைக்கூட அசட்டை செய்த மத்திய அரசு கண்டிக்கத்தக்கது.இதில் நாடகமாடும் திமுக,பாமக வெட்கப்பட வேண்டியவர்கள்.

மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுங்கள்,அரசுக்குகொடுத்த வாக்கு காப்பற்ற வேண்டுமெனில். அரசில் இருந்துவெளி வந்தால் மட்டும் என்ன நடக்கப்போகிறது என்று கேட்காதீர்கள்?.அதை நாடாளுமன்ற தேர்தலில் காண்பிப்போம்.

பாலஸ்தீனத்தில் "காசா" பகுதியில் இஸ்ரேல் , அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை உலகமே கண்டிக்கிறது.இதில்கொடுமை என்னவென்றால் இன அழிப்பு( GENOCIDE ) செய்யும் இலங்கை கூட கண்டித்துள்ளது. ஆனால் தமிழ் ஈழத்தில், இலங்கை படைகள்செய்யும் பயங்கரவாதத்துக்கு, கண்டனம் தெரிவிக்க நாதி இல்லை.ஏனென்றால் அவன் தமிழன்.

நான்கு மாதங்களாக "வன்னியில்" நடைப் பிணங்களாக வாழும்தமிழனுக்கு , உதவி செய்ய எந்த உலகமும் காணோம்.இருப்பது தமிழகம் தான், அவன் கூட வாயை மூடிக்கொண்டிருந்தால்யார் காப்பற்றுவது?
கலைஞர் அவர்களே, மருத்துவர் ராமதாசு அவர்களே......விரைவாக முடிவெடுங்கள்.

இந்த தமிழின ஒழிப்புக்கு, இலங்கைக்கு ஆதரவளிக்கும் கீழ்கண்ட பயங்கரவாதிகளை தயவு செய்து வெளியேற்றுங்கள். துணிவிருந்தால்,

1.அலோக் பிரசாத், இந்திய தூதர்-இலங்கை
2।எம்।கே।நாராயணன் - இந்திய பாதுகாப்பு ஆலோசகர்
3।சிவசங்கர் மேனன் - வெளியுறவு செயலாளர்,மத்திய அரசு