ஒரு வெறித்தனமான தாக்குதலை தொடுத்த இஸ்ரேல்
தனது 24 நாட்களின் பயங்கரவாதத்தை,உலகத்தின் நெருக்கலினால்
முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.இதில் இஸ்ரேல் வெட்டையாடியது,
"ஹமாஸ்"(HAMAS) ஐ அல்ல, அப்பாவி குழந்தைகளை, பொதுமக்களை....
பல்லாயிரக்கனக்கான வீடுகள், வீதிகள், அலுவலகங்கள் சிதிலப்படுத்தப்
பட்டு மக்களின் வாழ்க்கையையே சிதைத்துள்ளனர்.இங்கேயும் அனைத்து
அரபு நாடுகளும் வேடிக்கை தான் பார்த்தன, அசிங்கமே இல்லாமல்.
அமெரிகாவையும்,பிரான்சையும் தேடி ஓடினர்.ஆனால் இஸ்ரேல் எதையும்
காதில் வாங்கவில்லை,அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும்
விரட்டி அடித்தனர்.
கடைசில் இஸ்ரேல் வென்றதா? இல்லை, பாலஸ்தீன அப்பாவி மக்களையும்
தீவிரவாதியாய் எழுச்சி பெற உதவிவிட்டு வந்துள்ளனர்.இந்த போரின் காயத்தால்
அவர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்த வழிவகை செய்துள்ளனர்.
ஆனால் இந்த போரில், முஸ்லிம் உலக இளைஞர்கள் இணையத்தின் மூலமும்,
பதிவுகளின் மூலமும் "இஸ்ரேலை" தோற்கடித்துள்ளனர் என்றே சொல்லலாம்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய தளங்கள்
காசா பற்றியே எழுதி, படம் போட்டு உலகுக்கு காட்டியது பெரிய வெற்றி.
குறிப்பாக..... www.gazatalk.com இந்த இணையதளம் "காசா டாக்"
அனைத்து இஸ்ரேலுக்கு எதிரானவர்களையும் ஒருங்கினைத்தது.இது நடந்தது,மிக
குறுகிய காலத்தில்.
சில வலைப்பதிவர்களின் பங்கு.....மிக அதிகம்,குறிப்பாக,
http://israelscrimes.blogspot.com
http://gazatoday.blogspot.com
கடைசி வெறி:1.ஈழதமிழன் படும் அவலத்தை, சிங்கள பேரினவாத பயங்கரத்தை நாம் இவர்கள் மாதிரி
என்று காட்டப் போகிறோமோ, உலகத்துக்கு.
2.மேலும் (சோசியல் நெட்நொர்கிங் மூலமாகவும்-Website,facebook,Tweeter, You Tube,Blog) ஈழத்தமிழனின் வரலாற்றை, ஆங்கிலத்தின் மூலமாகவும், சிங்கள மொழியிலும் வெளியிட்டு உலகத்தை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும்.
3.இந்த பணியில் உண்மையான தமிழ் ஆர்வலர் யாரேனும் முன்வந்து பணி செய்ய
விரும்பினால் உதவி செய்ய எங்கள் குழு காத்திருக்கிறது.