கவிஞர் கனிமொழிக்கு ஒரு கடுதாசி?

Category :சகோதரிக்கு முதல்ல வணக்கம்.

உங்களின் கவிதைகளையும், பெண்ணிய உரிமைக்கான‌
உரைகளையும் வாசித்திருக்கிறேன்,கேட்டிருக்கிறேன்.உங்களின்
எளிமையை கண்டு வியந்தும் இருக்கிறேன்.

ஆனால் இப்போது.....விசயத்துக்கு வருகிறேன்.இப்போதெல்லாம்
நீங்கள் கண்னை மூடிக்கொண்டு உலகைப் பார்க்கிறீர்கள்
எனத் தோன்றுகிறது.இன்னுமா சகோதரி..மௌனம்...ஏன்...ஏன்?

செத்து மடியும் அப்பாவி பெண்கள், குழந்தைகள்,கர்ப்பிணிகள்
உங்களின் மனதை உலுக்கவில்லையா...?தமிழன் என்பதால்
வேண்டாம்....ஒரு மனிதாபத்துடன் கூட பார்க்க ஏன் இயலவில்லை.
ஈழத்தமிழன் என்ன பாவம் செய்தான்....தன் உரிமையைப் பெற
போராடுவதை தவிர?உங்கள் தந்தை இந்திய இறையாண்மையை
இன்னமும் இறுக்கமாக பிடித்துக்கொண்டுள்ளார்.நமக்கு தார்மீக கடமையும்,
பொறுப்பும் உண்டு...ஏனெனில் ஒரு பெரும் தமிழினத்தின்
ஏழு கோடி தமிழனின் தலைவனாக,அதிகாரத்தில் இருக்கும் உங்களின்
தந்தை, ஏன் எதுவும் செய்ய மறுக்கிறார்.(அறிக்கை விடுவதை தவிர)

உலக இணையப் பக்கங்களை புரட்டும் போது...உங்கள் தந்தை பெறப்
போகும் பட்டங்கள் தான் பளிச்சிடுகின்றன...மாதிரிக்கு சில...கீழே;
1.கலைஞர் ஒரு "கொலைஞர்"
2.தமிழின துரோகி

இவைகள் உங்கள் மனதை காயப்படுத்தும்.ஆனால் தினந்தோறும்
செத்துமடியும் தமிழ்ப் பிணங்கள் முன்...இது ஒன்றும் இல்லை.

தயவு செய்து உங்கள் தந்தையுடன் பேசுங்கள்...செத்துக்
கொண்டிருப்பது தமிழினம் என ஞாபகப் படுத்துங்கள்.தேர்தல்
வந்ததால்...ஓட்டு ...ஓட்டு என எல்லோரும் ஒடிப்போவீர்கள்....?

தயவு செய்து பேசுங்கள்....மனிதத்துடன்!
இல்லையேல் வரலாறு மன்னிக்காது.


நன்றி: யாழ்.காம் (படத்திற்கு)