போதும் கலைஞரே,போதும்?

Category :


ஆண்டது போதும், கலைஞரே....பதவியைத் தூக்கி
எறியுங்கள்.கடைசியில் "தமிழின துரோகி" என்ற பட்டத்துடன்
வரலாற்றில் வாழ வேண்டாம்.உங்களின் அறிவு,ஆற்றல், அரசியல்
ஆளுமை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர்.

ஆனால் தற்போது உங்களின் பதவி வெறி, தமிழினத்திற்கே
சாபம் ஆகிவிடுமோ என்ற கவலை மேலூங்குகிறது.அரியனையை
விட்டு வெளியேறி, உலகத்தமிழர்களின் முதல்வராக ஆகுங்கள்.

தமிழன் என்பவன் அகதியாய் வாழ்க்கையை நடத்தியவன்
என்ற வரலாற்றை ஏற்படுத்த வேண்டாம்.மேலே உள்ள படத்தை
பாருங்கள்...மனம் வெம்புகிறது....தமிழனின் வரலாற்றை அன்று
படித்து பெருமிதம் கொண்டிருந்தேன்।இன்று அவல நிலையில்...அநாதையை விட கேவலமாய்....???

இந்திய அரசில் பங்கு வகித்து, தமிழ்ச் சகோதரனை சாக
அடிக்கிறீர்கள்.பாவம்......கொடியது...அதனிலும் கொடியது,
அகதியாக்குவது.அதைத் தெரிந்தோ/தெரியாமலோ செய்கிறீர்கள்.

பதவி சுகத்திற்காக, பாராமுகமாக இருக்காதீர்கள்....அவன்
நம் தொப்புள் கொடி உறவு.இனியும் தாமதிக்காதீர்கள்....அதற்குள்
அநியாய,அக்கிரம இலங்கை அரசு.........தன் மக்களையே
சமாதியில் வைக்க தயங்காது.

இன்னமும் மனம் இரங்கவில்லையெனில், இந்தியன் என்ற பெருமையுடன் "மானாட மயிலாட" பார்த்துக் கொண்டிருங்கள்.

தமிழன் செத்துத் தொலையட்டும்....அவன் உயிருடன்
இருப்பது தானே, பிரச்சினை।
கடைசி வெறி:

இந்திய அரசு ஒரே கல்லில் ,இரு காயடைத்துள்ளது।தமிழனை சாகடிப்பது மேலும் நிவாரண உதவி என்ற பெயரில் உலகை ஏமாற்றுவது.

நன்றி: படம்-இன்பொதமிழ்

நாளை தமிழனின் கொடி,நிலவில்!

Category :

நிலவில் இந்தியனின் கொடி பறக்க விட்டதை பெருமிதத்தோடு பார்க்கிறோம்।அதே நேரத்தில் தமிழனின் கொடியும் பறக்கும் நாள் வெகு தொலைவின் இல்லை என உறுதியிட்டு கூறலாம்।ஆமாம், அவன் தான் ஈழத்தமிழன்...ஒட்டை,பித்தளை,இரும்பை வைத்தே வானூர்தி அமைத்தவன் அவன்।

நெஞ்சு துடிக்கிறது...ஒரு பயங்கரவாத அரசு,தமிழ் இனத்தையே அழிக்க துடியாய் துடிப்பது।இந்த இனப்படுகொலைக்கு என் இந்திய அரசும் துணை போவதை வெட்கி தலை குனிகிறேன்.இந்திய அரசு ஆயுதம் மட்டுமா அளித்தது.....ஆளையும்காட்டியுமல்லவா கொடுக்கிறது.

இந்திய அரசே.....விழித்துகொள்....,ஈழத்தில் சாவும் அப்பாவி தமிழனினால், அதற்கு நீங்கள் துணை போவதால்.....எங்கள் இதயத்தினுள் உள்ள இந்தியன் செத்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்து விட வேண்டாம்.

உலகத்திற்கு தமிழனை "பயங்கரவாதி" என்ற போர்வை போர்த்த நினைக்கும் இலங்கையின் தந்திர வலையில் இந்தியா விழவேண்டாம்.அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இந்தியா தவறிவிட்டது.ராஜபக்சேவிடம் "கெஞ்சும்"நிலையை அடைந்தது கேவலமாக உள்ளது.இன்னும் நம்முடைய வெளியுறவு கொள்கை தெளிவாக இல்லை.யாசர் அராபத்துக்கு ஆதரவு அளித்தோம்...அவர்களும் ஆயுதம் தூக்கியவர்கள்தான்.தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?அவன் என்ன அகதியாய் வாழப்பிறந்தவனா?

பக்கத்து மாநிலம் போன்று இருந்த, நேபாளத்தில் என்ன நடந்தது?மன்னர்களுக்கு அசிங்கமாய் ஆதரவு அளித்தோம்...மக்கள் யாரிடம் இருக்கிறார்கள் எனத்தெரியாமல்...கடைசியில் தேர்தல் முடிந்தவுடன் அசிங்கப்பட்டது இந்தியா தான்.அதேபோன்ற தவறை எம் தமிழினத்தின் மீது செய்ய வேண்டாம்.

அசிங்கமாய் இறையான்மை பற்றி பேசுகிறோம்.இலங்கை ஒரேநாடாய் எப்போது ஆனது....தமிழன் தான் அங்கு ஆட்சிசெய்தவன். வரலாற்றை மாற்ற முடியாது, மக்களை அழித்துவிட்டு.

ஈழம் அமைந்தால், தமிழ்நாட்டு தமிழனும் தனிநாடு கேட்பான் என்பது பிதற்றுவாதம்.....ஏன் நாங்கள் கேட்க போகிறோம்....?சமஉரிமையுடன் வாழும் போது.....!

இலங்கை இப்போதே அதன் சித்து வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது.ஆயுதப் பிச்சை எடுக்க பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும்பறந்து கொண்டிருக்கிறான்.அவன் சுயரூபம் புரியாமல் , நாம்(இந்தியா) அசிங்கப்படப்போவது உறுதி!இப்போது கூட காலம் கடந்துவிடவில்லை..தமிழர் பகுதியில் குண்டுமழை பொழிந்தால் உறவை மறுபரீசீலனை செய்ய நேரிடும் எனக் கூறுங்கள்.அந்த உரிமை நமக்கு நிறையவே உள்ளது,ஏனெனில் அடிபட்டு அகதியாய்,வரப்போவது இந்தியாவுக்குத்தான்.

அய்யா..தமிழ்நாட்டு பதவி வெறியர்களே.....கண்ணீர் வடித்ததுபோதும்...கபட நாடகம் ஆடியது போதும்.செயலில் இறங்குங்கள்.....முதலாவதாக பா.ம.க மத்திய அரசிலிருந்து வெளிவரட்டும், எதுவும் நடக்காத பட்சத்தில் திமுகவும் வெளிவரட்டும்.அதன் பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகலாம்.

இதைக்கூட செய்யவில்லையெனில் நமக்கேன் தமிழன் பெயர்,கூட தமிழ்நாடு என்று....???
காலம் கடந்துவிடவில்லை.....செயல்படுங்கள்...தமிழினத்தை காக்க....உயிருடன் காப்பாற்ற..!!!!

அன்புமணி வைத்த ஆரோக்கிய ஆப்பு?

Category :

முதலில் மத்திய சுகாதார அமைச்சருக்கு நன்றி சொல்லியே
ஆகவேண்டும்.இது தனி மனித உரிமையின் குறுக்கீடு என்ற
போதிலும் இந்த முடிவினால் பெண்கள், குழந்தைகள் புகை பிடிக்காதோர் மிக்க பயன் அடைவர்.

அதிலும் இப்போதைய இளைய சமுதாயம் புகை பிடித்தலை ஒரு அந்தஸ்தாகவே நினைக்கும் ஒரு கேவல நிலையில் உள்ளனர்.
இச் சட்டத்தை நடைமுறை படுத்துவதில் சில தடுமாற்றம் இருக்குமெனினும், சில மாற்றம் கண்டிப்பாய் நிகழும்.

இந்த மாதிரியான புகைத் தடை அமெரிக்க மாகாணம் பென்சில்வேனியா-விலும் போன மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஏச்சுபேச்சு-க்கிடையில் புகைமட்டு படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இது ஒரு முன் மாதிரியான சட்டம்.இதுவெற்றி அடைந்தால் இயற்கைக்கே வெற்றி.
காற்றை சுத்தமாக்குவோம்.....???
புகைக்கு எதிரான ஒரு விளம்பரம்.....கீழே!

அன்புடன்,
முகு

ஆஞ்ஜநேயர் பாழாக்கும் பால்..?

Category :

அதிர்ச்சி அடைய வேண்டாம் மக்களே...உண்மை.

ஒவ்வொரு மாதமும் புதுவை அருகில் உள்ள "பஞ்சவடி"ஆஞ்ஜநேயருக்கு 1000லிட்டர் பால் ஊற்றி அபிசேகம் என்ற பெயரில் அத்தியாவசிய பொருளை பாழக்குகின்றனர் இதன் நிர்வாகிக‌ள்.

இவர்களை பக்தர்கள் என்பதை விட அயோக்கியர்கள் என்றுதான் கூற வேண்டும்.ஊரில் எத்தனையோ குழந்தைகள் பாலுக்கு பரிதாபத்தில் தவிக்கும் போது....இவர்களின் செயலை வேறு எப்படி கூறுவது.
ஒரு லிட்டர் பால் 12ரூபாய்....ஆக ரூ.12,000/= பாலை அத்தியாவசிய பொருளை வீணாக்குவது குற்றம் தானே...

ரசிகர்கள் தான் தங்கள் கட்‍ அவுட் கதாநாயகனுக்கு பால்ஊற்றி அசிங்கம் செய்வதை பார்த்திறுக்கிறோம்.ஆனால் இந்த செயலை என்னவென்று சொல்வது....

ஒருசில தினசரிகள் இந்த பால் படத்தையும் பத்திரிகையில் போட்டு பக்தர்களை பாழாக்கி கொண்டுள்ளன.
கடைசி வெறி:
இதில் என்ன கூத்து என்றால், இந்த அபிசேகம் உலக‌ நன்மைக்காக நடத்தப் படுகிறதாம்.
Thanks: Dinamalar Photo

தேவலோகத்தில் சிம்புதேவன்!

Category :

ஆமாங்க....நம்ம இயக்குநர் சிம்புதேவனை தேவலோக
கடவுள்கள் அழைத்து பாராட்டு விழா நடத்தினார்களாம்.
ஒவர் பாராட்டு மழையில் குடையே புடிக்க வேண்டியதாப்
போச்சாம்.அவர்கள் எடுக்கும் படத்துக்கு "கால்சீட்'' கேட்டு நச்
அரிப்பு வேறாம்.

இதுல ஒரு தமாசு பாருங்க, எமலோகத்து கடவுள்கள் நம்ம
சிம்பு தேவனுக்கு ''டின்னு'' கட்டிட்டாங்களாம்.ஏன் திருட்டு 'விசிடி' ய எங்களுக்கு அனுப்பலன்னு....கடவுள்களின் தொல்ல தாங்காம ஒடினவர், திடுக்கிட்டு (?) அங்க இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார்.அவ்ளோதான் சர,சரன்னு பறந்தவர்....கூவத்துல வந்து தொப்புன்னு....நல்ல வேலை சிம்புதேவனுக்கு ஒன்னும் ஆகலை,விழுந்தது குளிச்சிட்டிருந்த ரெண்டு
பன்றி-யின் மேல என்பதால் அந்த பன்னிகள் எமலோகம் போவ வேண்டியதாப் போச்சு.

இப்ப நம்ம உலகத்துக்கு வருவோம்...."அறை எண் 305-ல் கடவுள்" என்ற நகைச்சுவை படத்துக்கு சிம்பு தேவனுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.இரண்டரை மணி நேரம் நம்மை சிரிக்க மற்றும் சிந்திக்க வைத்த பிரகாஷ்ராஜ்,சந்தானம்,என அனைத்து நடிகர்களுமே அசத்தியிருக்கின்றனர்.

படத்தின் சின்ன செய்தி:
''உழைத்தால் உயரலாம்"

முக்கிய செய்தி:
IT மக்களா....படம் பாக்கப் போகும் போது கைய பாக்கட்டுல வச்சுகோங்க(உங்க பாக்கட்டுல மட்டும்)....நெறய பேருக்கு விரல் காணாம போயிடிச்சாம்.

சிம்புதேவன் திடுக்கிட்டு விழக் காரணம்:
தேவலோகத்துலயும் நம்ம மலயாளிகள் ''சாயாக் கடை''யும்''சாராயக்கடை''யும் வைத்திருந்ததைப் பார்த்து.?

காந்தி சாலை,நேரு வீதி,ராஜிவ் பாலம்..விற்பனைக்கு?

Category :

சட்டசபையில் ஒரு காங்கிரசு உறுப்பினர் கத்திபாரா பாலத்திற்கு நேரு
பெயர் வைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்த நாட்டின் சாலைகளுக்கும், பாலங்களுக்கும், கல்லூரிகளுக்கும்,ஆய்வு கூடங்களுக்கும் இந்த பெயர்களை விட்டால் வேறு கிடையாதா?....இந்த நாட்டிற்கு வேறு யாரும் தியாகமே செய்யவில்லையா?...

காங்கிரஸ்காரர்களே இந்த பெயர்களைச் சொல்லி இத்தனை ஆண்டு வியாபாரம் செய்தது போதாதா?தமிழ்நாட்டு பாலத்திற்கு ஒரு தமிழனின் பெயர் வைக்க நமக்கு அருகதை கிடையாதா? அப்படி ஒரு தமிழனும்
தரம் உள்ளவன் இல்லை என்றால் அந்த பாலம் கட்ட வியர்வை விட்ட நம் சகோதரன்"உத்திர பிரசேதம் அல்லது பீகார்" தொழிலாளி பெயர் வைத்தால் கூட பெரு மகிழ்ச்சி அடையலாம்.

அதுவும் நம்ம வூரு காங்கிரஸ்காரர்களுக்கு ரொம்ப பாசம்....இந்த பெயர்களின் மேல்....என்ன செய்ய வாழனுமுள்ள? இன்னும் கொஞ்ஜம் நாள் போனா "ராகுல் பாலம்" வேனும்னு கேட்டாலும்,கேப்பாங்க.....

கிரிக்கெட் 20/20-ம்,அலங்கோல ஆட்டமும்!!!

Category :

விசயத்துக்கு வருவோம்.

நம்ம ஜனங்க ஏன் இப்படி வச்ச கண்ணு மாறாம IPL 20/20 பார்க்குறாங்கன்னு கீழ பாருங்க புரியும்.


முன்னாடி தான் நம்ம திரைப்படங்களில் ஒரு காட்சியாவது புடவையை அவிழ்த்து காட்டுவார்கள்.(அதாங்க கற்பழிப்பு)அதையெல்லாம் பார்த்து சலிச்சு போன நம்ம சனங்களுக்கு கிரிக்கெட்டு நடத்தறவனே ஒரு ''ரெக்கார்டு டான்ஸ்'' கூட்டத்தையும் ஆட வச்சி வெளயாட்ட காட்டறான்.

கிரிகெட்டு ஆட்டம் மப்பா இருந்தாலும் இவங்க ஆட்டத்தால டி.ஆர்.பி (TRP)ரேட்டிங் ஏறுதாமா???

ஏறாதா பின்ன????

ஹேப்பி பொங்கல்!

Category :

ஒரு வழியாக தை பிறந்து,பொங்கல் விழாக்களும்
கழிந்து விட்டன.
தை முதல் நாள் அன்று காலையிலேயே கடலூரை வலம் வந்தேன்.நிறைய கோலங்களை காண முடிந்தது...அழகழகாய்...."Happy Pongal"என்ற வாழ்த்துகளுடன்.தமிழனின் திருநாளைக் கூட ஆங்கில வாசனையுடன் கொண்டடுவது வேதனையாக இருந்தது.நம் பெயருக்குமுன்னால் தொங்கிக்கொண்டு இருக்கும் ஆங்கில தலை எழுத்தைப் போல.

முன்பு போல் பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் சுத்தமாக குறைந்து போய்விட்டது.தபால் துறையினருக்கு பெரும் வருமானம் குறைந்திருக்கும்.ஏனென்றால் அனைவரும் குறுஞ்செய்தி (SMS) மூலம் வாழ்த்தை முடித்துக் கொண்டுவிட்டனர்.

மாட்டுப் பொங்கல் அன்று கடலூர் பகுதியில் நிறைய இடங்களில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இரு தின‌ங்க‌ள் க‌ழித்து "ஆற்றுதிருவிழா"வும் இனிமையாக‌ நடந்தேறின‌‌.பெண்ணையாற்றின் க‌ரையில் வெளியூர், உள்ளூர் சாமிக‌ளின் தீர்த்த‌வாரி‍யும் ந‌டைபெற்ற‌ன‌.

க‌டைசி வெறி:

இப்போதெல்லாம் புதிய‌ தமிழ் திரைப‌ட‌ங்க‌ளின் இடைவேளை ஆங்கில‌த்தில் தான் INTERMISSION செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌.த‌மிழ‌ர்க‌ளூக்கு இடைவேளை புடிக்காதோ என‌த் தெரிய‌வில்லை?.

ஆங்கில புத்தாண்டும்,நம் ஆடம்பர அலங்கோலமும்?

Category :

இன்று "நியு இயர்".NEW YEAR ஆரம்பம்!!...

ஆமாம்...ஜனவரி ஒன்று என்பது உலகெங்கும் கொண்டாடப்படும் தினம் தான்.ஆனால் தமிழன் ,ஆங்கில ஒன்னைக் கூட‌அசிங்கமாய் கொண்டாடக் கற்றுக் கொண்டு விட்டான்.

நேற்று இரவே 12 மணிக்கு வெடிச்சத்தத்துடன் நம்ம மாரியாத்தா கோயிலில் கூட புத்தாண்டை ஆரம்பித்தனர்.விடிந்தவுடன் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று ஆண்டவனுக்கும் ஹேப்பி நியு இயர் சொல்லி மகிழ்ந்தனர்.
இந்தமாதிரியான கேளிக்கை கூத்துகள் சில வருடங்களாகத்தான் வேர் விட்டுக் கொண்டுள்ளன.

எங்கள் பக்கத்து தண்ணீர் தேசத்தில்(புதுச்சேரி தான்!!!) இரவு முழுதும் நட்சத்திர ஹோட்டல்களில்(விடுதி)....ஆட்டமும்,பாட்டுமுமாக‌ அரங்கேறி உள்ளன.
த‌மிழனின் அடையாளங்கள்,ஆட்டம் கொண்டு இருப்பதை கண்கூடாக காண முடிகிறது.

தமிழினமும் விளம்பர யுகத்தில் மாட்டிக்கொண்டு விடியலைத்தொலைத்து கொண்டிருக்கிறதோ என ஐயமாக உள்ளது
.