அடேங்கப்பா....என மலைக்க வேண்டாம்.நம்ம நாட்டில் தான் இந்த(Commonwealth Games)
“காமன்வெல்த் விளையாட்டு விழா” என்ற கேலிக்கூத்தை நடத்தி முடித்துள்ளனர்.
இந்தியாவின் வளர்ச்சியை உலகுக்கு தெரிவிக்க இது உதவும் என பலர் கூறலாம்.
ஆனால் இது போலியான கவுரவத்துக்காகத் தான் நடத்தப்பட்டது என்பதை
டில்லியில் குடிசைகளை அகற்றியதையும், பிச்சைகாரர்களையும் விரட்டியதன்
மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஆனால்"இந்தியா"என்ற ஓட்டை வீட்டுக்கு இந்த ஒய்யாரம் தேவையா?
நம் நாட்டில் பட்டினியாலும்,அடிப்படை வசதி இல்லாமலும் குறிப்பாக
மின்சாரம் இல்லாமல் அவதிப் படும் போது இது தேவையா?இந்தியா
அதன் "சோசலிசம்"என்ற அடிப்படை கட்டமைப்பிலிருந்து விலகுவதை
நிறைய பேர் மறந்து விடுகின்றனர்.பணம் இருக்கிறவன் தன் "அடையாளத்தை"திமிருடன் காண்பிக்கத் தான் இந்த மாதிரி "அநாவசிய" விளையாட்டு.
இந்த பணத்தில் இந்தியாவில் எத்தனையோ மருத்துவமனைகளும், குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி இருக்கலாம்.ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் "பணம்" பார்க்க இந்தமாதிரி ஆடம்பர விழாக்களை நடத்துகின்றனர்.இது மக்கள் வரிபணத்தினால் நடத்தப்படுபவதால் நாம் கவலை கொள்ள வேண்டி உள்ளது. இந்தியாவில் இன்னும் 37% மக்கள் வறுமை கோட்டில் துன்பத்தில் தவிக்கும் போது இந்த அதிகார வர்க்கம்,இந்த மாதிரி வீண் விளையாட்டை நடத்துவது கேவலம்.
புதுடில்லிக்கு மட்டும் ரோடு, மற்ற வசதிகள் வந்தால் போதுமா?இந்த விளையாட்டு
அரங்கங்களின் கதி இனி என்ன ஆகும் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை?.
தமிழ்நாட்டு அரசின் ஆண்டு செலவே "20,000கோடி" என்றால் இந்த விளையாட்டுக்கு
செலவழித்த ரூ70,000கோடியில் என்ன,என்னவோ செய்திருக்கலாம், ஆனால் ஊழலை
ஒளிவு மறைவின்றி செய்துள்ளனர்,விளையாட்டு குழுவினர்.இதில் காங்கிரசு கட்சியின் சுரேஷ் கல்மாதி(Suresh kalmadi,Indian Olympic Association & Chairman, Organizing committee, Commonwealth games Delhi 2010) யின் கதை அனைவருக்கும் தெரியும்.
இப்போது ஊழலை விசாரிக்க ஒரு கமிசனை மத்திய அரசு அமைத்துள்ளது.அதன் அறிக்கைவந்த பிறகு தான் தெரியும், எத்தனை ஆயிரம் கோடி, அரசியல்வாதி மற்றும் அதிகாரிகளுக்கு போனது என்று?
இந்தியாவின் ஆண்டு செலவு ஒதுக்கீடே(2009+2010) சுமார் ரூ.10லட்சம் கோடியாகும்.
சீனாவை(China) பார்த்து நாம் அந்நாடு போல் செயல்படத் தேவையில்லை.சீனா 2008 ஒலிம்பிக்-க்கு செலவிட்ட தொகை சுமார் $40பில்லியர் டாலர்(US$40Billion).ஆனால் இதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு ஒரு பயனும் ஏற்படவில்லை.ஆனால் சீனா எல்லா மாநிலத்துக்கும் 'அடிப்படை விளையாட்டு"கட்டமைப்பை ஏற்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.
உண்மையான வல்லரசு என்றால், நாட்டின் வளர்ச்சி அனைத்து மக்களையும் சென்றடைந்து இருப்பதே.சும்மா...விளையாட்டு காட்டுவதினால் அல்ல.!
Reference:
http://www.bbcworld.com/, www.skynews.com, www.cwgdelhi2010.org, www.indiabudget.nic.in
Courtesy: Cartoon,Dileep Hegde

2 comments:
sariyaana karuththurai!
- Devamaindhan
மிக்க நன்றி அய்யா.
Post a Comment
கருத்தைப் பகிர: